Home
Computer

அகன்ற திரையுடன் மைக்ரோமேக்ஸ் டேப்லட்!

By Super

அகன்ற திரையுடன் மைக்ரோமேக்ஸ் டேப்லட்!
புதிய ஃபன்புக் ப்ரோ என்ற டேப்லட்டினை அறிமுகம் செய்கிறது மைக்ரோமேக்ஸ் நிறுவனம். இந்த புதிய டேப்லட்டினை அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது மைக்ரோமேக்ஸ்.

இந்த டேப்லட்டின் விலையும் வாடிக்கையாளர்களால் எளிதாக பெற கூடிய வகையில் தான் இருக்கும் என்று கருதப்படுகிறது.

தென் இந்தியாவில் அதிகம் ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஃபன்புக் ப்ரோ டேப்லட் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். இதில் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் சிங்கிள் கோர் பிராசஸரும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பிராசஸர், ஸ்மார்ட்போனின் இயங்குதளம் சிறப்பாக செயல்பட உதவும்.

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இந்த ஃபன்புக் ப்ரோ டேப்லட் 10.1 இஞ்ச் டேப்லட் திரை வசதியினை கொண்டுள்ளது. இதனால் அகன்ற திரை வசதியினை பெற முடியும்.

இந்த டேப்லட்டில் விஜிஏ கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. மைக்ரோமேக்ஸ் டேப்லட்டில் 8 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியினை எளிதாக பெற முடியும்.

இதில் 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ளும் தன்மையும் உள்ளது. வைபை, 3ஜி, புளூடூத் போன்ற தொழில் நுட்ப வசதிகளையும் இந்த டேப்லட்டில் எளிதாக பெற முடியும்.

இங்கே கூறப்பட்டுள்ள சிறந்த தொழில் நுட்ப வசதியினை பெற இதன் 5,600 எம்எஎச் பேட்டரி ஒத்துழைக்கும். இந்த டேப்லட்டினை ரூ. 9,999

விலையில் பெறலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X