Home
Computer

ஆன்லைனில் புதிய மைக்ரோமேக்ஸ் டேப்லட்!

By Super

ஆன்லைனில் புதிய மைக்ரோமேக்ஸ் டேப்லட்!
புதிய ப்ரோ ஃபன்புக் டேப்லட்டினை மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது என்ற தகவலை அனைவரும் கேள்விப்பட்டிருப்போம்.

ஆன்லைனில் இந்த டேப்லட்டின் விலை என்ன என்பது பற்றிய சில தகவல்களும் வெளியாகி உள்ளது. முதலில் இந்த டேப்லட் பற்றிய சில தொழில் நுட்ப குறிப்புகளை பார்த்த பின், இந்த விலைக்கு இந்த டேப்லட் சிறந்ததா என்பதையும் பார்க்கலாம்.

சாதாரணமாக டேப்லட்கள் 7 இஞ்ச் திரை வசதியினை கொண்டதாக இருக்கும். ஆனால் இந்த ஃபன்புக் ப்ரோ டேப்லட் 10.1 இஞ்ச் திரை வசதியினை கொண்டதாக இருக்கும். இந்த டேப்லட் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும்.

இதன் திரை துல்லித்தை பொருத்த வரையில், அதிகமாக தான் கொடுக்கிறது. 1024 X 600 பிக்ஸல் திரை துல்லியம் இந்த டேப்லட்டில் கிடைக்கும்.

1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர், டேப்லட்டிற்கு சிறப்பான இயக்கத்தினை வழங்கும். 8 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதி கொண்ட இந்த டேப்லட்டின் மெமரி வசதியினை 32 ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளலாம். இதில் விஜிஏ முகப்பு கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

விஜிஏ முகப்பு கேமராவை கொண்ட இந்த டேப்லட் 5,600 எம்ஏஎச் பேட்டரியை வழங்கும். 3ஜி நெட்வொர்க், வைபை போன்ற வசதிகளுக்கு சிறப்பாக சப்போர்ட் செய்யும் திறனும் இந்த டேப்லட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஃபன்புக் ப்ரோ 10.1 டேப்ல்டடின் விலை சில வலைத்தளங்களில் ரூ. 9,999 என்று கூறப்படுகிறது.

ஸ்னேப் டீல் வலைத்தளத்தில் கூட இந்த டேப்லட் ரூ. 9,999 விலை கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்திடம் இருந்து விலை பற்றிய தகவல்கள் இன்னும் சரிவர வெளியாகவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X