மைக்ரோமேக்ஸ் மற்றும் கார்பன் டேப்லட்கள்: ஓர் சிறிய ஒப்பீட்டு அலசல்

By Super
|

மைக்ரோமேக்ஸ் மற்றும் கார்பன் டேப்லட்கள்: ஓர் சிறிய ஒப்பீட்டு அலசல்
வாடிக்கையாளர்கள் சிறந்த மின்னணு சாதன பொருட்களை வாங்க ஒப்பீடுகள் தேவைப்படுகின்றது. மைக்ரோமேக்ஸ் ஃபன்புக் ப்ரோ டேப்லட் மற்றும் கார்பன் ஸ்மார்ட் டேப்-2 டேப்லட்கள் பற்றிய சிறிய ஒப்பீட்டை இங்கே பார்க்கலாம்.

இந்த 2 டேப்லட்களில் உள்ள தொழில் நுட்ப விவரங்களை இங்கே ஒப்பிட்டு பார்க்கையில், எந்த ஒன்று சிறந்ததாக இருக்கும் என்பது பற்றி ஒருவாறு யூகிக்கலாம்.

மைக்ரோமேக்ஸ் ஃபன்புக் ப்ரோ டேப்லட் 10.1 இஞ்ச் திரையில் 1024 X 600 பிக்ஸல் திரை துல்லியத்தினை எளிதாக பெற முடியும். மைக்ரோமேக்ஸ் ஃபன்ப்ரோ டேப்லட்டினை விட, கார்பன் ஸ்மார்ட் டேப்-2 டேப்லட் குறைந்த திரை வசதியினை கொண்டதாக இருக்கும். கார்பன் ஸ்மார்ட் டேப்-2 டேப்லட்டில் உள்ள 7 இஞ்ச் திரையின் மூலம் 480 X 800 பிக்ஸல் துல்லியத்தினை பெறலாம்.

பிராசஸர்:

மைக்ரோமேக்ஸ் ஃபன்புக்ப்ரோ டேப்லட் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஏ-8 பிராசஸரினை வசதியினை கொண்டதாக இருக்கும். கார்பன் ஸ்மார்ட் டேப்-2 டேப்லட்டிலும் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் வசதி கொண்ட டேப்லட்டினை பெறலாம்.

இயங்குதளம்:

இந்த 2 டேப்லட்களும் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை கொண்டதாக இருக்கும். அதிலும் கார்பன் ஸ்மார்ட் டேப்-2 டேப்லட்டில் ஜெல்லி பீன் அப்டேஷன் வசதியினை எளிதாக பெறலாம்.

கேமரா:

ஃபன்புக்ப்ரோ டேப்லட் விஜிஏ முகப்பு கேமராவினை கொடுக்கும். ஸ்மார்ட் டேப்-2 டேப்லட் 2 மெகா பிக்ஸல் கேமராவினையும் கொடுக்கும். ஆனால் இந்த டேப்லட்கள் இரண்டுமே, டியூவல் கேமரா வசதியினை கொண்டதாக இருக்கும்.

ஸ்டோரேஜ்:

ஃபன்புக் ப்ரோ டேப்ட் 8 ஜிபி மெமரி வசதியினை, ஸ்மார்ட் டேப்-2 டேப்லட் 4 ஜிபி மெமரி வசதியினையும் வழங்குவதாக இருக்கும். இன்டர்னல் மெமரி ஜிபியின் அளவு வேறாக இருப்பினும் இந்த டேப்லட்களின், மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட் வசதியினை 32 ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளலாம்.

கனக்டிவிட்டி:

வைபை, ப்ளூடூத் மற்றும் 3ஜி டோங்கில் என்று அனைத்து சவுகரியங்களையும் இந்த டேப்லட்களிலும் எளிதாக பெற முடியும். இதனால் தகவல் பரிமாற்றம் மற்றும் இன்டர்நெட் ஆகிய வசதிகளையும் பெறலாம்.

பேட்டரி:

சிறந்த தொழில் நுட்ப வசதிகளை நீடித்து பெறுவதற்கு அதன் பேட்டரியும் முக்கிய பங்கு வகிக்கிறது. மைக்ரோமேக்ஸ் ஃபன்புக்ப்ரோ டேப்லட்டில் 5,600 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரியினையும், கார்பன் ஸ்மார்ட் டேப்-2 டேப்லட் 3,700 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்ரியினை பெறலாம்.

விலை:

இரண்டு டேப்லட்டும் உயர்ந்த தொழில் நுட்ப வசதியினை கொடுப்பதாக இருக்கலாம். ஆனால் இதன் விலைகள் வேறுபடுகின்றன. மைக்ரோமேக்ஸ் ஃபன்புக்ப்ரோ டேப்லட் ரூ. 9,999 விலையிலும், கார்பன் ஸ்மார்ட் டேப்-2 டேப்லட்டினை எளிதாக பெறலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X