Home
Computer

குறைந்த விலை டேப்லட்களின் ஒப்பீடு!

By Super

குறைந்த விலை டேப்லட்களின் ஒப்பீடு!
ஸ்மார்ட்போன் சந்தைக்கு சரிசமமாக, டேப்லட்களும் அதிகம் வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. இதனால் மைக்ரோமேக்ஸ் ஃபன்புக் இன்ஃபினிட்டி டேப்லட் பற்றிய சிறிய ஒப்பீட்டினை பார்க்கலாம்.

இந்த இரண்டு டேப்லட்களுமே ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதி கொண்டு இயங்கும் டேப்லட்கள். அதோடு இந்த டேப்லட்களை பட்ஜெட் விலையில் எளிதாக பெறலாம்.

மைக்ரோமேக்ஸ் இன்ஃபினிட்டி டேப்லட் 360 கிராம் எடையினை கொண்டதாக இருக்கும். ஆனால் செல்கான் சிடி-2 டேப்லட்டின் எடை பற்றிய தகவல்கள் இன்னும் சரிவர அறிமுகம் செய்யப்படவில்லை.

குறைந்த விலை கொண்ட இந்த டேப்லட்கள் 7 இஞ்ச் திரை வசதியினை கொண்டதாக இருக்கும். ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட ஃபன்புக் இன்ஃபினிட் டேப்லட் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் ஏ-8 பிராசஸரினை வழங்கும். செல்டேப் சிடி-2 டேப்லட்டில் 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸரின் பயன்பாடுகளை பெறலாம்.

ஃபன்புக் இன்ஃபினிட்டி டேப்லட் 2 மெகா பிக்ஸல் கேமாரவினையும், 0.3 மெகா பிக்ஸல் கேமராவினையும் கொடுக்கும். ஒப்பிட்டு பார்க்கும் போது செல்டேப் சிடி-2 டேப்லட் விஜிஏ முகப்பு கேமராவினை மட்டும் வழங்கும்.

இந்த இரண்டு டேப்லட்களிலும் 4 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியினை பெறலாம். இது மட்டும் அல்லாமல் 3ஜி மற்றும் வைபை நெட்வொர்க் வசதியினை எளிதாக பயனபடுத்த முடியும்.

3ஜி மற்றும் வைபை போன்ற தொழில் நுட்பங்களை வழங்கும் போது பேட்டரியின் அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. மைக்ரோமேக்ஸ் ஃபன்புக் இன்ஃபினிட்டி டேப்லட் 4,000 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் 6 மணி நேரம் பிரவுசிங் டைமினை பெறலாம். செல்டேப் சிடி-2 டேப்லட் 3,000 லித்தியம் அயான் பேட்டரியின் மூலம் சிறந்த ஒத்துழைப்பினை பெறலாம்.

மைக்ரோமேக்ஸ் ஃபன்புக் இன்ஃபினிட்டி டேப்லட் ரூ. 6,999 விலையினை கொண்டதாக இருக்கும். செல்டேப் சிடி-2 டேப்லட் ரூ. 7,499 விலையில் வழங்கப்படும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X