Home
Computer

மல்லுக்கட்டும் மைக்ரோமேக்ஸ், ஐபெரி டேப்லெட்டுகள்!

By Karthikeyan
மல்லுக்கட்டும் மைக்ரோமேக்ஸ், ஐபெரி டேப்லெட்டுகள்!

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது மேக்ரோமேக்ஸ் பன்புக் என்ற டேப்லெட்டை களமிறக்கியதன் மூலம் உயர்தர டேப்லெட் துறைக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறது. இந்த டேப்லெட்டிற்கு போட்டியாக ஐபெரியின் ஐபெரி ஆக்சஸ் எஎக்ஸ்02 என்ற புதிய டேப்லெட்டும் களமிறங்கி இருக்கிறது.

இந்த இரண்டு டேப்லெட்டுகளும் தொழில் நுட்பத்திலும் மற்றும் செயல் திறனிலும் ஒன்றுக்கொன்று குறைவில்லாதவாறு அம்சமாக வந்திருக்கின்றன.

குறிப்பாக இந்த இரண்டு டேப்லெட்டுகளும் 800 x 480 பிக்சல் ரிசலூசன் கொண்ட 7 இன்ச் டிஸ்ப்ளேயுடன் வருகின்றன. மைக்ரோமேகஸ் மல்டி டிச் கப்பாசிட்டிவ் வசதியை சப்போர்ட் செய்கிறது என்றால் ஐபெரி கப்பாசிட்டிவ் தொடுதிரை வசதியைக் கொண்டிருக்கிறது.

இரண்டுமே ஆன்ட்ராய்டு டேப்லெட்டுகளாகும். அதாவது இரண்டுமே ஆண்ட்ராய்டு ஐஸ்க்ரீம் சான்டவிஜ் இயங்குதளத்தைக் கொண்டிருக்கின்றன. ஆனால் மைக்ரோமேகஸ் 1.2 ஜிஹெர்ட்ஸ் கோர்ட்டெக்ஸ் எ8 ப்ராசஸரையும் ஐபெரி 1.0 ஜிஹெர்ட்ஸ் ஓஆர்எம் கோர்ட்டெக்ஸ் எ8 ப்ராசஸரையும் கொண்டிருக்கிறது.

கேமராவைப் பொருத்தமட்டில் மைக்ரோமேக்ஸ் 0.3எம்பி விஜிஎ முகப்புக் கேமராவைக் கொண்டிருக்கிறது. ஆனால் இதில் பின்பக்கக் கேமரா இல்லை. ஐபெரியைப் பொருத்தவரை அது 0.3 எம்பி முகப்புக் கேமராவையும், 2எம்பி பின்பக்க கேமராவையும் கொண்டிருக்கிறது. இரண்டிலும் ஜியோ டேக்கிங் வசதி இல்லை.

மெமரியைப் பொருத்தமட்டில் மைக்ரோமேக்ஸ் 512 எம்பி டிடிஆர்3 ரேமையும், 4ஜிபி இன்டர்னல் சேமிப்பையும் கொண்டிருக்கிறது. ஆனால் ஐபெரி 1ஜிபி ரேம் டிடிஆர்3 மற்றும் 4ஜிபி மெமரியைக் கொண்டுள்ளது. இரண்டு டேப்லெட்டுகளின் மெமரியையும் 32ஜிபி வரை விரிவு செய்ய முடியும். அதற்காக மைக்ரோமேக்ஸ் மைக்ரோ எஸ்டி ப்ளாஷ் கார்டும், ஐபெரி மைக்ரோ எஸ்டி கார்டும் கொண்டுள்ளன.

மேலும் இணைப்பு வசதிகளைப் பொறுத்தவரை இந்த இரண்டு டேப்லெட்டுகளும் 3ஜி, யுஎஸ்பி மற்றும் வைபை போன்றவற்றைக் கொண்டுள்ளன.

இந்த இரண்டு டேப்லெட்டுகளும் மிக பொழுதுபோக்கு அம்சம் வாய்ந்தவை. அதாவது இவை இரண்டுமே எல்லாவிதமான ஆடியோ மற்றும் வீடியோ பார்மட்டுகளை சப்போர்ட் செய்யும். மேலும் வீடியோ கேம்களையும் அட்டகாசமாக விளையாடலாம். இரண்டுமே ஸ்பீக்கர்கள் மற்றும் ஆடியோ ஜாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.

மின்திறனிற்காக மைக்ரோமேக்ஸ் லயன் 2800 மெகா ஹெர்ட்ஸ் பேட்டரியையும் ஐபெரி லை போலி 4000 மெகா ஹெர்ட்ஸ் பேட்டரியையும் கொண்டிருக்கிறது. அதனால் இவை இரண்டும் நீண்ட இயங்கு நேரத்தைக் கொண்டிருக்கின்றன.

இந்த புதிய மைக்ரோமேக்ஸ் டேப்லெட் இந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.7000க்கு விற்பனைக்கு வர இருக்கிறது. ஐபெரி டேப்லெட் கடந்த மார்ச் மாதத்தில் ரூ.10000க்கு விற்பனைக்கு வந்திருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X