Home
Computer

மேம்பட்ட தொழில் நுட்ப வசதிகளுடன் வரும் எ110 கேன்வாஸ் 2 பேப்லெட்

By Karthikeyan
மேம்பட்ட தொழில் நுட்ப வசதிகளுடன் வரும் எ110 கேன்வாஸ் 2 பேப்லெட்

இந்தியாவில் சாம்சங் மற்றும் ஆப்பிளின் சாதனங்களின் விற்பனையைவிட மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் சாதனங்கள் அதிகம் விற்பனையாகின்றன. கடந்த ஆகஸ்டில் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் எ100 என்ற பேப்லெட்டை களமிறக்கியது. அதோடு நில்லாமல் தற்போது எ110 கேன்வாஸ் 2 என்று புதிய பேப்லெட்டைக் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய கேன்வாஸ் பேப்லெட் பழைய பேப்லெட்டில் இருந்த குறைகளை எல்லாம் களைந்து, மேம்பட்ட தொழில் நுட்ப வசதிகளுடன் வந்திருக்கிறது.

5 இன்ச் கப்பாசிட்டிவ் தொடுதிரையுடன் வரும் இந்த கேன்வாஸ் 2 பேப்லெட் ஐபிஎஸ் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளேயின் தரம் மிகவும் அதிகம். அதோடு இந்த பேப்லெட் 1 ஜிஹெர்ட்ஸ் டூவல் கோர் ப்ராசஸர் கொண்டு வருவதால் இதன் இயங்கு வேகம் அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் இந்த பேப்லெட் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் ஆற்றலையும் கொண்டிருக்கும்.

இந்த புதிய பேப்லெட் ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்கு தளத்தில் வருகிறது. இதன் 8எம்பி பின்பக்கக் கேமராவும் மற்றும் 0.3எம்பி முகப்புக் கேமராவும் மிகவும் சூப்பராக உள்ளன. அதுபோல் இந்த புதிய பேப்லெட் 4ஜிபி சேமிப்பைக் கொண்டிருக்கிறது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் இதன் சேமிப்பை 32ஜிபி வரை அதிகரிக்க முடியும்.

இணைப்பு வசதியைப் பொருத்தவரை இந்த புதிய பேப்லெட் 3ஜி, ப்ளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி மற்றும் வைபை வசதியுடன் வருகிறது. மேலும் இதன் பேட்டரி 5 மணி நேர இயங்கு நேரத்தையும் வழங்கும்.

விலையைப் பொருத்தவரை கேன்வாஸ் எ100 பேப்லெட் ரூ.9,999க்கு விற்கப்படுகிறது. ஆனால் புதிய கேன்வாஸ் 2 பேப்லெட் ரூ.15,000க்கு விற்கப்படுகிறது. ஆனால் பிரி ஆர்டரில் இதை ரூ.11,999க்கு வாங்கலாம்.

தொழில் நுட்ப வசதிகள் மற்றும் செயல் திறன் ஆகிய எல்லாவற்றிலும் கேன்வாஸ் 2 முன்னிலையில் இருக்கிறது. எனவே கேன்வாஸ் எ100ஐவிட இந்த புதிய பேப்லெட் லாபகரமாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X