Home
Computer

தூதரகத்தில் இரகசிய மைக்! அதிர்ச்சியில் லண்டன்!

பெரிய நாடுகள் தங்களுக்கிடையில் உளவு பார்க்கும் வேலையை மிகச்சியாக செய்து வருகின்றது என்பதற்க்கு இதோ ஒரு உதாரணம்.

லண்டனில் உள்ள ஈக்வடோர் தூதரகத்தில் ரகசிய உளவு மைக் ஒன்று மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது மிகச் சிறிய "spy microphone" ரகத்திலான இந்தக் கருவி, தூதரகத்தில் நடைபெறும் உரையாடல்களை வெளியே ‘எங்கோ' ரிக்கார்ட் செய்வதற்காக உபயோகிக்கப்பட்டிருக்கலாம்.

இந்தக் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை பிரிட்டனுக்கான ஈக்வடோர் தூதர் உறுதி செய்தார். ஈக்வடோர் நாட்டு வெளியுறவு அமைச்சர் ரிக்கார்டோ பாடினோ, எவ்வளவு காலமாக இந்த உளவு பார்த்தல் நடைபெற்றது என்று தெரியவில்லை என கூறியுள்ளார்.

Click Here For New Smartphones Gallery

தூதரகத்தில் இரகசிய மைக்! அதிர்ச்சியில் லண்டன்!

Click Here For Latest Smartphones Gallery

ஈக்வடோர் நாடு, விக்கிலீக்ஸ் அதிபர் அசாஞ்சுக்கு அரசியல் அடைக்கலம் கொடுத்துள்ளது. அவர் தற்போது தங்கியிருப்பது, லண்டனில் உள்ள இதே ஈக்வடோர் தூதரகத்தில்தான்.

அத்துடன் சமீபத்தில் அமெரிக்க உளவுத்துறை ரகசியங்களை வெளியிட்ட எட்வார்ட் ஸ்னோடன் ஹாங்காங்கில் இருந்து வெளியேற தற்காலிக பாஸ்போர்ட் கொடுத்ததும், லண்டனில் உள்ள இதே ஈக்வடோர் தூதரகம்தான்!

லண்டன் தூதரகத்தில் ஒரு புக் ஷெல்ப்பால் பாதி மறைக்கப்பட்ட நிலையில் உள்ள மின்சார அவுட்லெட் ஒன்றுக்கு உள்ளே இந்த மைக் வைக்கப்பட்டிருந்தது.
அதனுடன் ஒரு சிம் கார்ட்டும் இணைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. தூதரகத்துக்குள் நடைபெறும் உரையாடல்களை இந்த சிம்கார்ட், வெளியே எங்கேயோ அனுப்பிக்கொண்டு இருந்துள்ளது.

மற்றொரு தென்னமெரிக்க நாடான பொலிவியா நாட்டு ஜனாதிபதியின் விமானம், ஐரோப்பாவில் பலவந்தமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் தென்னமெரிக்க நாடுகளிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், லண்டனில் உள்ள ஈக்வடோர் நாட்டு தூதரகத்துக்கு உள்ளேயே உளவு பார்க்கப்பட்ட விவகாரம் வெளியாகியுள்ளது.

மறுபடியும் இந்த மைக் விவகாரம் முற்றும் எனத் தெரிகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X