Home
Computer

அசத்தலான இரண்டு சியோமி லேப்டாப் மாடல்கள் அறிமுகம்.! வியக்க வைக்கும் விலை.!

சியோமி நிறுவனம் இன்று (ஆகஸ்ட் 26) புதிய Mi நோட்புக் அல்ட்ரா மற்றும் Mi நோட்புக் ப்ரோ லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த இரண்டு லேப்டாப் மாடல்களும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. அதேசமயம் இந்த சாதனங்களின் விலை சற்று உயர்வாக இருக்கிறது.

ந்த சாதனங்கள் விற்பனைக்கு

குறிப்பாக புதிய Mi நோட்புக் அல்ட்ரா மற்றும் Mi நோட்புக் ப்ரோ லேப்டாப் மாடல்கள் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி Mi.com, அமேசான் மற்றும் Mi ஹோம் ஸ்டோர்ஸ் வழியாகவிற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் லூஸ்ட்ரஸ் கிரே நிறத்தில் இந்த சாதனங்கள் விற்பனைக்கு வரும் என்றுதகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது Mi நோட்புக் அல்ட்ரா மற்றும் Mi நோட்புக் ப்ரோ லேப்டாப் மாடல்களின் விலை மற்றும்
விபரங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

Mi நோட்புக் அல்ட்ரா லேப்டாப்

Mi நோட்புக் அல்ட்ரா லேப்டாப்

இந்த Mi நோட்புக் அல்ட்ரா லேப்டாப் மாடல் ஆனது 15.6-இன்ச் Mi-Truelife+ டிஸ்ப்ளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் 3200 x 2000 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 300 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 100 சதவீதம் sRGB கவரேஜ் உள்ளிட்ட சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அல்ட்ரா லேப்டாப் மாடல்.

க் அல்ட்ரா லேப்டாப் மா

குறிப்பாக Mi நோட்புக் அல்ட்ரா லேப்டாப் மாடல் ஆனது இன்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ் மற்றும் இன்டெல் கோர் i7-11370H CPU ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 16 ஜிபி டிடிஆர் 4 ரேம் மற்றும் 512 ஜிபி என்விஎம்எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய லேப்டாப்.

ட்ரா லேப்டாப் சாதனம் TUV

Mi நோட்புக் அல்ட்ரா லேப்டாப் சாதனம் TUV ரெய்ன்லேண்ட் லோ ப்ளூ லைட் சான்றிதழை கொண்டுள்ளது. மேலும் இந்த லேப்டாப் 70Whr பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளதால் 12 மணிநேரம் சார்ஜ் குறையாமல் பயன்படுத்த முடியும். பின்பு 2 வாட் ஸ்பீக்கர் ஆதரவு மற்றும் பேக்லிட் சிஸர் கீபோர்ட் உட்பட பல்வேறு சிறப்பான ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக 65 வாட் சார்ஜர் மற்றும் USB டைப்-சி சார்ஜிங் போர்ட்ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய லேப்டாப்

அதேபோல் வைஃபை 6, ப்ளூடூத் வி 5.1, தண்டர்போல்ட் 4 போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், யூஎஸ்பி டைப்-சி போர்ட், இரண்டு யூஎஸ்பி டைப்-ஏ போர்ட்கள் மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த Mi நோட்புக் அல்ட்ரா லேப்டாப் மாடல்.

Mi நோட்புக் அல்ட்ரா லேப்டாப் விலை
  • இன்டெல் கோர் ஐ 5 ப்ராசஸர் மற்றும் 8 ஜிபி ரேம் கொண்ட Mi நோட்புக் அல்ட்ரா மாடலின் விலை ரூ.59,999-ஆக உள்ளது.
  • இன்டெல் கோர் ஐ 5 ப்ராசஸர் மற்றும் 16 ஜிபி ரேம் கொண்ட Mi நோட்புக் அல்ட்ரா மாடலின் விலை ரூ.63,999-ஆக உள்ளது.
  • இன்டெல் கோர் i7 ப்ராசஸர் மற்றும் 16 ஜிபி ரேம் கொண்ட Mi நோட்புக் அல்ட்ரா மாடலின் விலை ரூ.76,999-ஆக உள்ளது.
  • Mi நோட்புக் ப்ரோ லேப்டாப்

    Mi நோட்புக் ப்ரோ லேப்டாப்

    Mi நோட்புக் ப்ரோ லேப்டாப் ஆனது 14-இன்ச் 2.5 கே டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 2,560x1,600 பிக்சல் தீர்மானம், 300 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 16:10 ரேஷியோ, 100 சதவீதம் எஸ்ஆர்ஜிபி கவரேஜ் உள்ளிட்ட சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய லேப்டாப் மாடல்.

     Mi ரெய்ன்லேண்ட் லோ

    Mi நோட்புக் ப்ரோ லேப்டாப் மாடலில் ஐரிஸ் Xe கிராபிக்ஸ் கொண்ட 11th ஜென் இன்டெல் கோர் i7 ப்ராசஸர் வசதி உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் விருப்பத்துடன் வெளிவந்துள்ளது இந்த புதிய சாதனம்.


    குறிப்பாக டியூவி ரெய்ன்லேண்ட் லோ ப்ளூ லைட் சான்றிதழை கொண்டுள்ளது Mi நோட்புக் ப்ரோ லேப்டாப். மேலும் 56Whr பேட்டரி ஆதரவு, 2 வாட் ஸ்பீக்கர் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த Mi நோட்புக் ப்ரோ லேப்டாப். அதேபோல் வைஃபை 6, ப்ளூடூத் வி 5.1, தண்டர்போல்ட் 4 போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், யூஎஸ்பி டைப்-சி போர்ட், இரண்டு யூஎஸ்பி டைப்-ஏ போர்ட்கள் மற்றும்3.5 மிமீ ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த Mi நோட்புக் ப்ரோ லேப்டாப் மாடல்.

    Mi நோட்புக் ப்ரோ விலை

    Mi நோட்புக் ப்ரோ விலை

    • இன்டெல் கோர் ஐ 5 ப்ராசஸர் மற்றும் 8 ஜிபி ரேம் கொண்ட Mi நோட்புக் ப்ரோ மாடலின் விலை ரூ.56,999-ஆக உள்ளது
    • இன்டெல் கோர் ஐ 5 ப்ராசஸர் மற்றும் 16 ஜிபி ரேம் கொண்ட Mi நோட்புக் ப்ரோ மாடலின் விலை ரூ.59,999-ஆக உள்ளது
    • இன்டெல் கோர் ஐ 7 ப்ராசஸர் மற்றும் 16 ஜிபி ரேம் கொண்ட Mi நோட்புக் ப்ரோ மாடலின் விலை ரூ.72,999-ஆக உள்ளது

Best Mobiles in India

English summary
Mi NoteBook Ultra, Mi NoteBook Pro Laptops Launched: Specs, Features and More : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X