Home
Computer

அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்த புதிய சியோமி லேப்டாப்.! விலை?

சியோமி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் சாதனங்கள் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெறுகிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் சியோமி நிறுவனம் இப்போது அதிநவீன அம்சங்களுடன் புதிய லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

 லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது. விரைவில்

அதாவது சியோமி நிறுவனம் தற்போது சீனாவில் மி நோட்புக் ப்ரோ எக்ஸ் 15 எனப்படும் லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது. விரைவில்
இந்த சாதனம் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அதிநவீன லேப்டாப்

சியோமி நிறுவனத்தின் இந்த அதிநவீன லேப்டாப் மாடல் ஆனது 11-வது ஜென் இன்டெல் கோர் ப்ராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 3.5கே ஒஎல்இடி டிஸ்பிளே வெளிவந்துள்ளது இந்த அசத்தலான சாதனம்.

அதாவது இந்த லேப்டாப் மாடலின் 11-வது தலைமுறை இன்டெல் கோர் ஐ5-11300H ப்ராசஸர் ஆனது 16ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. பின்பு இது பேஸிக் வேரியண்ட் ஆகும்,இதன் விலை(இந்திய மதிப்பில்) ரூ.92,100-ஆக உள்ளது.

ம் ஹை எண்ட் மாடலின் விலை

அதேபோல் இதன் இன்டெல் கோர் ஐ7-11370H ப்ராசஸர், 32ஜிபி ரேம் மற்றும் 1டிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் உடன் வரும் ஹை எண்ட் மாடலின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.1,15,100-ஆக உள்ளது. மேலும் இந்த சாதனத்தின் அனைத்து சிறப்பம்சங்களையும் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஸ்15 மாடல் ஆனது 15.6-இன்ச்

மி நோட்புக் ப்ரோ எக்ஸ்15 மாடல் ஆனது 15.6-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் 3,456 × 2,160 பிக்சல் தீர்மானம் மற்றும் 600 நிட் பீக் ப்ரைட்னஸ் மற்றும் 16:10 என்கிற அளவிலான திரை விகிதத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப் மாடல்.

கையாளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்க

மேலும் புதிய சியோமி லேப்டாப் 100 சதவீதம் எஸ்.ஆர்.ஜி.பி மற்றும் டி.சி.ஐ-பி 3 கலர் கேமட்-ஐயும் வழங்குகிறது. பின்பு இந்த சாதனம் 11 வது ஜென் இன்டெல் கோர் ஐ7 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் இதன் கிராபிக்ஸ் டிபார்ட்மென்ட் ஆனது, என்விடியா ஜியிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 3050 டி சிப் மூலம் கையாளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ளூடூத் v.5.2 மற்றும்

ப்ளூடூத் v.5.2 மற்றும் வைஃபை 6, யுஎஸ்பி ஏ 3.2, ஜென் 2 போர்ட், யுஎஸ்பி டைப்-சி போர்ட், தண்டர்போல்ட் 4, 3.5 மி.மீ.ஹெட்ஜாக்மற்றும் 1 x HDMI 2.1 போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த மி நோட்புக் ப்ரோ எக்ஸ்15 மாடல்.

சியோமி மி நோட்புக் ப்ரோ எக்ஸ்15 மாட

சியோமி மி நோட்புக் ப்ரோ எக்ஸ்15 மாடல் ஆனது 80Whr பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மேலும் இது 11.5 மணிநேர வீடியோ பிளேபேக்கை ஒரே சார்ஜில் வழங்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக பேட்டரியை சார்ஜ் செய்ய 130W யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் ப்ரிக்கிடைக்கும் என கூறப்படுகிறது.

சியோமி லேப்டாப்

குறிப்பாக இந்த புதிய சியோமி லேப்டாப் விண்டோஸ் 10 ஹோம் கொண்டு இயங்குகிறது மற்றும் இது 6-சீரிஸ் அலுமினியம் அலாய் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய லேப்டாப் மாடல் டி.டி.எஸ் ஆடியோ கொண்டு இயங்கும் குவாட் ஸ்பீக்கர் சிஸ்டம் வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 2 × 2 மைக்ரோஃபோன் அரே, 720p வெப்கேம், முழு அளவு பேக்லிட் கீபோர்ட்,ஆம்பியண்ட் சென்சார் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Mi Notebook Pro X 15 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X