சியோமி நிறுவனத்தின் புதிய லேப்டாப் அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.!

|

சியோமி நிறுவனம் சீனாவில் தனது மி நோட்புக் ப்ரோ 15 என்ற லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த லேப்டாப் சாதனம் 1டிபி ஸ்டோரேஜ் வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் மி நோட்புக் ப்ரோ 15 மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 மி நோட்புக் ப்ரோ 15 லேப்டாப்  டிஸ்பிளே

மி நோட்புக் ப்ரோ 15 லேப்டாப் டிஸ்பிளே

சியோமி நிறுவனத்தின் மி நோட்புக் ப்ரோ 15 லேப்டாப் மாடல் ஆனது 15.6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த ஆர்.ஜி.பி வண்ண வரம்பு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

 10-வது தலைமுறை இன்டெல் கோர்i7

10-வது தலைமுறை இன்டெல் கோர்i7

மி நோட்புக் ப்ரோ 15 லேப்டாப் மாடல் 10-வது தலைமுறை இன்டெல் கோர்i7-10510U SoC-ல் இயக்கப்படுகிறது,பின்பு இது 16 ஜிபி ரேம்,என்விடியா ஜியிபோர்ஸ் எம்எக்ஸ் 250 ஜி.பீ.யூ மற்றும் 1TB வரை சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

சந்திரயான்-2 : நாசாவின் புதிய புகைப்படங்களிலும் விக்ரம் லேண்டரை காணவில்லை.!சந்திரயான்-2 : நாசாவின் புதிய புகைப்படங்களிலும் விக்ரம் லேண்டரை காணவில்லை.!

720பிக்சல் வீடியோ

720பிக்சல் வீடியோ

சியோமியின் இந்த புதிய லேப்டாப் மாடல் பேக்லிட் கீபோர்ட் வசதியுடன் வெளிவந்துள்ளது, மேலும் 1மெகாபிக்சல் கேமராமற்றும் 720பிக்சல் வீடியோ கால் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த மி நோட்புக் ப்ரோ 15 லேப்டாப் மாடல்.

2கிலோ எடை

2கிலோ எடை

மேலும் இந்த சாதனத்தில் எச்டிஎம்ஐ போரட்,யுஎஸ்பி டைப்-சி போரட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறுஇணைப்பு ஆதரவுகள் அடக்கம். பின்பு 2கிலோ எடை மற்றும் 16.9எம்எம் தடிமன் கொண்டுள்ளது மி நோட்புக் ப்ரோ 15 லேப்டாப்.

சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்புசூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு

60வாட் பேட்டரி

60வாட் பேட்டரி

சியோமி மி நோட்புக் ப்ரோ 15 லேப்டாப் 60வாட் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு metal body மற்றும் dark grey finish அம்சத்தை கொண்டுள்ளதால் இந்த லேப்டாப் மாடலை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விற்பனை

விற்பனை

சியோமி மி நோட்புக் ப்ரோ 15 சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரூ.70,100-ஆக உள்ளது. மேலும் வரும் நவம்பர் 1-ம்தேதி முதல் இந்த சாதனம் சீனாவில் விற்பனைக்கு வருகிறது. இருந்தபோதிலும் இந்தியாவில் எப்போது வெளியிடப்படும்எனத் தகவல் இல்லை, அது சார்ந்த தகவல் எங்களுக்கு கிடைக்கும்போது உடனடியாக அப்டேட் செய்கிறோம்.

Best Mobiles in India

English summary
Mi Notebook Pro 15 Enhanced Edition Launch Date Confirmed for November 1: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X