பட்ஜெட் விலையில் சியோமியின் இரண்டு லேப்டாப் மாடல்கள் அறிமுகம்.!
13.3-இன்ச் மி நோட்புக் ஏர் (2019) லேப்டாப் மாடலின் விலை ரூ.38,400-ஆக உள்ளது. 15.6-இன்ச் மி நோட்புக் (2019) லேப்டாப் மாடலின் விலை ரூ.42,700-ஆக உள்ளது.
சியோமி நிறுவனம் தொடர்ந்து புதிய லேப்டாப் சாதனங்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகிறது, அதன்படி இந்நிறுவனம் தற்சமயம் 13.3-இன்ச் மி நோட்புக் ஏர் மற்றும் 15.6-இன்ச் மி நோட்புக் சாதனங்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த சாதனங்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக இரண்டு சாம்சங் லேப்டாப் மாடல்களும் வரும் ஏப்ரல் 9-ம் தேதி முதல் சீனாவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த சாதனங்களின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

13.3-இன்ச் மி நோட்புக் ஏர் (2019):
13.3-இன்ச் மி நோட்புக் ஏர் மாடல் பொதுவாக முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 8-வது இன்டெல் இன்டெல் கோர் ஐ5 குவாட்-கோர் செயலியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும். மேலும் 8ஜிபி ரேம் மற்றும், 256ஜிபி உள்ளடக்க மெமரி, என்விடியா ஜியிபோர்ஸ் எம்எக்ஸ்250 கிராபிக்ஸ் அட்டை,
போன்ற ஆதரவுகளளை கொண்டுள்ளது இந்த லேப்டாப் மாடல்.

13.3-இன்ச் மி நோட்புக் ஏர் இணைப்பு ஆதரவுகள்:
13.3-இன்ச் மி நோட்புக் ஏர் சாதனத்தில் யுஎஸ்பி டைப்-சி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி 3.0 போர்ட், ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். பின்பு 1.3கிலோ எடை கொண்டு வெளிவந்துள்ளது இந்த
சாதனம். குறிப்பாக டால்பி சரவுண்ட் ஒலி தொழில்நுட்பம் ஆதரவு கொண்டுள்ளது 13.3-இன்ச் மி நோட்புக் ஏர் லேப்டாப் மாடல்.

15.6-இன்ச் மி நோட்புக்(2019):
15.6-இன்ச் மி நோட்புக்(2019) மாடல் முழு எச்டி டிஸ்பிளே மற்றும் 1080 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளவந்துள்ளது, பின்பு இன்டெல் கோர் ஐ5 பிரசாஸர் மற்றும் 8ஜிபி ரேம் 512ஜிபி வரை மெமரி, என்விடியா ஜியிபோர்ஸ் எம்எக்ஸ்110 ஜிபியு கிராபிக்ஸ் போன்ற ஆதரவுகளும் இந்த சாதனத்தில் உள்ளது. மேலும் யுஎஸ்பி டைப்-சி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி 3.0 போர்ட், ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் மற்றும டால்பி சரவுண்ட் ஒலி தொழில்நுட்பம் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

விலை:
இந்திய விலை மதிப்பில்...
13.3-இன்ச் மி நோட்புக் ஏர் (2019) லேப்டாப் மாடலின் விலை ரூ.38,400-ஆக உள்ளது.
15.6-இன்ச் மி நோட்புக் (2019) லேப்டாப் மாடலின் விலை ரூ.42,700-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications