மாணவர்களுக்குத் தோழனாக வரும் புதிய ரியோ டேப்லெட்!

Posted By: Karthikeyan
மாணவர்களுக்குத் தோழனாக வரும் புதிய ரியோ டேப்லெட்!

கோபியன் பிடிஇ டிமிடட் ஒரு புதிய டேப்லெட்டை இந்தியாவில் களமிறக்க இருக்கிறது. இந்த புதிய டேப்லெட்டிற்கு மெர்குரி எம்டேப் ரியோ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த புதிய டேப்லெட் ரூ.11,999க்கு விற்கப்பட இருக்கிறது.

இந்த புதிய டேப்லெட் பல சிறப்பான தொழில் நுட்பங்களுடன் வருகிறது. குறிப்பாக இந்த டேப்லெட் 9.7 இன்ச் ஐஜிஎஸ் பேனல், 1.2 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸர், 1ஜிபி டிடிஆர்3 ரேம் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் மெமரியை 32 ஜிபி வரை அதிகரிக்கும் வசதி கொண்ட 8ஜிபி அல்லது 16ஜிபி மெமரி போன்ற வசதிகளைக் கொண்டிருக்கிறது.

அதோடு இந்த டேப்லெட் வைஃபை வசதியையும் வழங்குகிறது. இதன் பேட்டரி இந்த டேப்லெட்டுக்கு 6 முதல் 8 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. மேலும் ஒரு பின்பக்க கேமரா மற்றும் முகப்பு கேமராவையும் இந்த டேப்லெட்டில் பார்க்க முடியும்.அதுபோல் இந்த டேப்லெட்டில் 3ஜி இணைப்பு, யுஎஸ்பி போர்ட் மற்றும் எச்டிஎம்ஐ போர்ட் ஆகிய வசதிகளும் உண்டு.

இந்த ரியோ டேப்லெட் ஆன்ட்ராய்டு 4.0 ஐசிஎஸ் இயங்கு தளத்தில் இயங்குகிறது. கோபியனின் இந்தியத் தலைவர் திரு. சுஸ்மிதா தாஸ் கூறும் போது இந்த புதிய ரியோ டேப்லெட் மாணவர்களுக்கு உற்ற தோழனாக இருக்கும் என்று கூறுகிறார்.

இந்த ரியோ டேப்லெட் 1 வருட உத்திரவாதத்துடன் வருகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்