Home
Computer

சவால்களை சமாளிக்க மெர்க்குரியின் புதிய டேப்லெட் ரெடி!

By Karthikeyan
சவால்களை சமாளிக்க மெர்க்குரியின் புதிய டேப்லெட் ரெடி!

மெர்குரி நிறுவனம் வரும் மார்ச்சில் ஒரு புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட்டைக் களமிறக்க இருக்கிறது. இந்த 7 இன்ச் புதிய டேப்லெட் ஆன்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர் ப்ரீடு இயங்கு தளம் மற்றும் 1 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸருடன் வரும் என்று தெரிகிறது.

மெர்க்குரியின் இந்தியாவிற்கான மேலாளர் சுஸ்மிதா தாஸ் கூறும் போது இந்த டேப்லெட் சாம்சங் சிப்செட், ஆன்ட்ராய்யு 2.3 ஜிஞ்சர் ப்ரீடு, 1 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸர் மற்றும் 8ஜிபி மெமரி போன்ற வசதிகளுடன் இந்த டேப்லெட் வரும் என்று அறிவித்திருக்கிறார்.

இந்த டேப்லெட் 3ஜி வசதிகளைக் கொண்டிருப்பதால் 3ஜி சப்போர்ட்டையும் வழங்கும். மேலும் எதிர்காலத்தில் இந்த டேப்லெட்டில் ஆன்ட்ராய்டு வி4.0 வெர்சனும் அப்டேட்ட செய்யப்படும் என்று கூறி இருக்கிறார். மேலும் இந்த டேப்லெட் குறைந்த விலையில் வரும் என்று தெரிகிறது.

இந்த டேப்லெட் ஒரு இன்டர்க்ரேட்டட் வைபை ரூட்டர் கொண்டிருக்கும். அதன் மூலம் 6 சாதனங்களை இது இணைக்கும் என்று ஒரு சில நம்பகமாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற வசதியை மற்ற டேப்லெட்டுகள் கொண்டிருந்தாலும் தங்களது டேப்லெட் அதில் சிறந்ததாக இருக்கும் என்று மெர்குரி தெரிவிக்கிறது.

இந்த புதிய டேப்லெட்டின் டிடிஆர்3 மெமரி மிகவும் வேகமாக இருக்கும். அதனால் இந்த டேப்லெட்டை மிக வேகமாக இயக்கவும் முடியும்.

மேலும் வரும் ஏப்ரலில் மெர்குரி ஒரு புதிய 10 இன்ச் டேப்லெட்டை அறிமுகப்படுத்த இருப்பதாக சுஸ்மிதா தாஸ் கூறியிருக்கிறார். ஆனால் இந்த புதிய டேப்லெட்டைப் பற்றிய மற்ற தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. ஆனால் உயர்தரத்தில் வரும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஆனால் மெர்க்குரியின் புதிய 7 இன்ச் டேப்லெட் மற்ற டேப்லெட்டுகளுக்கு கடும் சவாலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. தற்போது இந்த புதிய டேப்லெட்டைச் சந்தைப்படுத்துவதில் மெர்க்குரி தீவிரமாக இருக்கிறது. ஆனால் இந்த 7 இன்ச் டேப்லெட்டின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X