Home
Computer

பிளாஸ்டிக் சேஸிசுடன் வரும் ஏசர் லேப்டாப்!

By Super

பிளாஸ்டிக் சேஸிசுடன் வரும் ஏசர் லேப்டாப்!
புதிதாக வரும் லேப்டாப்புகள் குறைந்த செயல்திறனோடு வரவேண்டிய அவசியமில்லை. ஏனெனில் ஏதிர்பார்ப்பும் போட்டியும் அதிகமாக இருப்பதால் புதிய லேப்டாப்புகள் பொதுவாக புதிய தொழில் நுட்பத்தோடும் அதே நேரத்தில் உயர் செயல் திறனோடுதான் வருகின்றன.

அந்த வகையில் ஏசர் ஆஸ்பயர் 5749 லேப்டாப் பிளாஸ்டிக் சேஸிசுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கீறலோ அல்லது விரிசலோ இல்லாத அளவிற்கு மிக உறுதியாகவும், சிறப்பாகவும் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது.

இது இன்டெல் கோர் ஐ3-2330எம் டூவல் கோர் பிராசஸருடன் வருகிறது. இதில் 4 ஜிபி ரேம் பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் பேட்டரியும் அதிக மின் திறனைக் கொண்டுள்ளதோடு, சிறப்பான செயல் திறனுடன் அபாரமாக இருக்கும்.

குறிப்பாக நமது அன்றாட அலுவலகப் பணிகளை செய்வதற்கு இந்த ஏசர் லேப்டாப் மிக உறுதுணையாக இருக்கும். இது எச்டிஎம்ஐ போர்ட் கொண்டிருப்பதால் வீடியோ பார்ப்பதிலும் சிறப்பான அனுபவத்தை கொடுக்கும். இந்த லேப்டாப் 720பி மற்றும் 1080பி வீடியோவை சப்போர்ட் செய்கிறது.

இதன் சிக்லெட் கீபோர்ட் டைப் செய்வதற்கு வசதியாக 16:9 ட்ச்பேட் கொண்டு வருகிறது. மற்ற லேப்டாப்புகளைப் போலவே இந்த லேப்டாப்பிலும் பேஸ் இசை குறைவாகவே இருக்கும். எனவே, வீடியோ பார்க்கும் போது மிக அதிரடியான இசையைக் கேட்க முடியாது. ஆனால், இது 3.5எம்எம் ஆடியோ ஜாக் கொண்டுள்ளதால் இதில் யுஎஸ்பி ஸ்பீக்கர்களையோ அல்லது ஹெட்போன்களையோ இணைக்க முடியும்.

ஏசர் அஸ்பயர் 5749 லேப்டாப் 15.6 இன்ச் திரையைக் கொண்டுள்ளது. அதனால் இதில் படங்களும் வீடியோ காட்சிகளும் மிகத் தெளிவாக இருக்கும்.

இந்த லேப்டாப் 3 யுஎஸ்பி போர்ட்டுகளும் மற்றும் மல்டி பார்மட் கார்டு ரீடருடன் வருகிறது. மேலும் இதன் 750ஜிபி ஹார்டு டிஸ்க் இந்த லேப்டாப்புக்கு மேலும் பெருமை சேர்க்கிறது. இதன் திரையின் ரிசலூசன் 1366x768 ஆகும். அதுபோல் இந்த லேப்டாப் மீகோ இயங்குதளத்தில் இயங்குகிறது. இது ரூ.27,000 முதல் ரூ.32000 வரையிலான விலையில் வர இருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X