Home
Computer

மலட்டா-வான்லிடா கூட்டணியில் வரும் புதிய டேப்லெட்!

By Karthikeyan
மலட்டா-வான்லிடா கூட்டணியில் வரும் புதிய டேப்லெட்!

மலட்டா நிறுவனம் வான்லிடா நிறுவனத்தோடு சேர்ந்து சீனாவில் பலவிதமான எலக்ட்ரானிக் சாதனங்களை களமிறக்கி இருக்கிறது. இந்த வருடம் தைபேயில் நடந்த காம்புடெக்ஸ் கண்காட்சியி்ல் தனது புதிய டேப்லெட்டுகளை அறிமுகப்படுத்தியது. மேலும் இந்த 2 நிறுவனங்களும் சேர்ந்து 2012-2013 ஆண்டுகளுக்கான தமது திட்டங்களையும் அறிவித்துள்ளன. அதாவது இந்த நிறுவனங்கள் சேர்ந்து 2012-2013 ஆண்டுகளில் பல புதிய டேப்லெட்டுகள் மற்றும் மொபைல்களை அறிமுகம் செய்ய இருக்கின்றன.

மலட்டா எஸ்எம்பி-பி1023 ஒரு எளிமையான அதே நேரத்தில் ஒரு அழகான டேப்லெட் ஆகும். இந்த டேப்லெட் என்விடியா டேக்ரா 3 ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. இதன் இயங்குதளம் ஆன்ட்ராய்டு ஐஸ்க்ரீம் சான்விஜ் ஆகும். இதில் ப்ளூடூத், 3ஜி மற்றும் வைபை இணைப்புகள் உள்ளன. இந்த டேப்லெட் 7, 9.7 மற்றும் 10.1 இன்ச் அளவுகளில் வருகின்றன.

மேலும் மலட்டா எஸ்எம்பி-பி1023 டேப்லெட் போன்றே இன்னொரு டேப்லெட்டும் உள்ளது. இந்த டேப்லெட்டில் அதிகமான இணைப்பு வசதிகள் உள்ளன. இந்த டேப்லெட் 3 மாடல்களில் வருகின்றன. அதாவது பல அளவுகள் கொண்ட டிஸ்ப்ளே, கார்டு ரீடர், யுஎஸ்பி, மினி யுஎஸ்பி டோக் மற்றும் போர்ட் போன்ற ஏராளமான வசதிகளைக் கொண்டு வருகின்றது.

மலட்டா வழங்கு அடுத்த டேப்லெட் மிகவும் அடக்கமான ஒன்றாகும். இந்த டேப்லெட் 7 மற்றும் 8 இன்ச் என்ற இரண்டு மாடல்களில் வருகிறது. இந்த டேப்லெட் மிக ஸ்டைலாக இருக்கிறது.

அதேபோல் ஒரு சில மலிவான டேப்லெட்டுகளையும் களமிறக்க இருக்கிறது. அதில் ஒன்று எஸ்எம்பி-பி1023 டேப்லெட்டை ஒத்திருக்கும். ஆனால் அதன் ப்ராசஸரில் வேறுபாடுகள் இருக்கும். இந்த டேப்லெட்டில் என்விடியா டேக்ரா 3 ப்ராசஸிற்குப் பதிலாக ராக்சிப் ஆர்கே2910 எஸ்ஒகே சிங்கிள் கோர் எஆர்எம் எ8 ப்ராசஸரைக் கொண்டுள்ளது. இந்த ப்ராசஸரின் கடிகார வேகம் 1.2 ஜிஹெர்ட்ஸ் ஆகும். இதன் இயங்கு தளம் ஆன்ட்ராய்டு வி3.2 ஹனிகோம்பைவிட குறைவான வெர்சனில் வருகிறது.

மேலும் பல புதிய ஸ்மார்ட்போன்களையும் களமிறக்க திட்டமிட்டிருக்கிறது மலட்டா நிறுவனம். அவற்றின் தொழில் நுட்பங்கள் மற்றும் விலை போன்றவற்றின் தகவல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் சாம்சங் கேலக்சி நோட் மற்றும் எல்ஜி ஆப்டிமஸ் வியு போன்றவற்றிற்கு சரியான போட்டியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X