MS பெயிண்ட்டில் உள்ள முக்கிய குறிப்புகள்

MS பெயிண்ட்டில் வரைதல், கலர் கொடுத்தல், படத்தை எடிட் செய்தல், மற்றும் கேமிராவில் இருந்து படத்தை இம்போர்ட் செய்தல் ஆகிய பல வழிகளில் பயன்படுகிறது

By Siva
|

கம்ப்யூட்டர் உபயோகிக்கும் அனைவருக்கும் MS பெயிண்ட் குறித்து தெரிந்திருக்கும் இந்த பெயிண்ட் படங்கள் வரைதல் மற்றும் கலர் கொடுத்தல் மற்றும் பல வகைகளில் பயன்படுகிறது. குறிப்பாக வரைதல், கலர் கொடுத்தல், படத்தை எடிட் செய்தல், மற்றும் கேமிராவில் இருந்து படத்தை இம்போர்ட் செய்தல் ஆகிய பல வழிகளில் பயன்படுகிறது

MS பெயிண்ட்டில் உள்ள முக்கிய குறிப்புகள்

இவைகள் தவிர எழுத்துக்களுடன் கூடிய வார்த்தைகள் இணைக்க, கோடு போட மற்றும் வடிவத்தை மாற்றவும் இந்த பெயிண்ட் பயன்படுகிறது. மேலும் ஒரு படத்தை அழிக்க, அழகூட்ட, வண்ணங்கள் தீட்ட, என்று பயன்படுத்தப்படும் நிலையில் மேலும் என்னென்ன பயன் பெயிண்டால் உண்டு என்பதை தற்போது பார்ப்போம்

படங்களின் அளவுகளை மாற்றலாம்:

படங்களின் அளவுகளை மாற்றலாம்:

ஒரு படத்தின் அளவுகளை உடனே வெகு எளிதாக மாற்ற நீங்கள் போட்டோஷாப் போக வேண்டிய அவசியம் இல்லை. பெயிண்ட்டை ஓப்பன் செய்து அதில் படத்தில் பதிவேற்றி ரீசைஸ் என்ற ஆப்சனை தேர்வு செய்து உங்களுக்கு தேவையான அளவுகளில் படத்தை மாற்றி கொள்ளலாம். பின்னர் எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் அந்த படத்தை சேவ் செய்து கொள்ளலாம்

படங்களை தொகுக்க வேண்டுமா?

படங்களை தொகுக்க வேண்டுமா?

படங்களை எடிட் செய்வது பெயிண்டில் மிக எளிது. பெயிண்டில் உள்ள வியூ-கிரிட்லைன்ஸ் ஆப்சன் சென்றால் உங்கள் இஷ்டம் போல் படங்களை விதவிதமாக தொகுக்கலாம்

சிறப்பாக எடிட் செய்ய உதவும் டூல்ஸ்கள்

சிறப்பாக எடிட் செய்ய உதவும் டூல்ஸ்கள்

ஒரு படத்தை சிறப்பாக எடிட் செய்ய பெயிண்டில் நல்ல டூல்ஸ்கள் உள்ளன. உதாரணமாக கண்கள் சிவப்பாக இருந்தால் அதை நீக்க படத்தை பெரிதாக்கி சிவப்பை சுத்தம் செய்யலாம். இதேபோல் பலவித சிறப்பு எடிட் டூல்ஸ்கள் பெயிண்டில் உண்டு

ஆண்ட்ராய்டில் டெக்ஸ்ட் செய்ய உதவும் டாப் 5 செயலிகள்ஆண்ட்ராய்டில் டெக்ஸ்ட் செய்ய உதவும் டாப் 5 செயலிகள்

படங்களின் பொசிஷனை மாற்றலாம்

படங்களின் பொசிஷனை மாற்றலாம்

சில சமயம் ஒரு படத்தின் பொசிஷனை மாற்றும்போது தவறாக மாறிவிடும். இந்த நேரத்தில் ஒரிஜினல் படத்தை பெற, பொசிஷன் மாற்றப்பட்ட படத்திற்கு வேறு பெயர் கொடுத்துவிட்டால், நம்முடைய ஒரிஜினல் படத்திற்கு எந்தவித பாதிப்பும் நேராது.

 எந்தெந்த பார்மேட்டில் சேவ் செய்யலாம்

எந்தெந்த பார்மேட்டில் சேவ் செய்யலாம்

ஒரு படத்தின் ஃபார்மேட்டை மாற்ற வேண்டும் என்றால் பெயிண்ட் மிக உதவிகரமாக இருக்கும். ஒரு GIF பைல் படத்தை JPG பைலாக மாற்ற வேண்டும் என்றால் அந்த படத்தை காப்பி செய்து பெயிண்டில் பேஸ்ட் செய்து பின்னர் மீண்டும் சேவ் செய்யும்போது JPGல் சேவ் செய்துவிட்டால் முடிந்தது வேலை

கலரை மாற்ற வேண்டுமா?

கலரை மாற்ற வேண்டுமா?

ஒரு படத்தில் உள்ள கலரை இன்னொரு கலருக்கு மாற்ற வேண்டும் என்றால் பெயிண்டில் கலர் மாற்றுவது மிக எளிது. இதை எரேசர் டூல் மூலம் மாற்றிவிடலாம். ஆம், எரேசர் டூலை எடுத்து தேவையான கலரை தேர்வு செய்தால் எரேஸ் செய்தால் கலர் தானாக மாறிவிடும்

பிரஷ் அளவுகள்:

பிரஷ் அளவுகள்:

பெயிண்டில் பிரஷ்ஷை பொருத்தவரைய்யில் பல்வேறு அளவுகளில் இருக்கும் என்பதால் தேவையான படத்திற்கு தேவையான அளவுகளில் உள்ள பிரஷ்ஷை பயன்படுத்தலாம். இதில் மைக்ரோ xxxx ஸ்மால், மற்றும் xxx ஸ்மால் ஆகிய பிரஷ்கள் இருக்கும். இந்த பிரஷ்ஷை பெரிதாக்கவோ, அல்லது சிறிதாக்கவோ வேண்டும் என்றால் கண்ட்ரோலை அழுத்தி + அல்லது _ பட்டனை அழுத்தினால் போதுமானது.

Best Mobiles in India

Read more about:
English summary
The well known MS Paint has more tools than you think apart from helping you with drawing and coloring.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X