Home
Computer

வீடியோ கேம் வசதியுடன் தோஷிபாவின் புதிய நோட்புக்குகள்!

By Karthikeyan
 வீடியோ கேம் வசதியுடன் தோஷிபாவின் புதிய நோட்புக்குகள்!

மெயின் கியர் நிறுவனம் சமீபத்தில் ஒரு புதிய கேமிங் நோட்புக்கைக் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய கேமிங் நோட்புக்கிற்கு மெயின் கியர் வைபி 15 நோட்புக் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

வீடியோ கேம் பிரியர்களுக்காகவே இந்த நோட்புக் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய நோட்புக் சாதாரண, சிறந்த,மிகச் சிறந்த மற்றும் அல்டிமேட் என 4 மாடல்களில் வருகிறது.

இந்த நோட்புகின் சாதாரண மாடலில் கோர் ஐ5 3360எம் ப்ராசஸர், 8ஜிபி டிடிஆர்3-1333 ரேம் ஆகியவை உள்ளதால் இந்த நோட்புக் மிக உறுதியாக இருக்கும். அதோடு இந்த நோட்புக்கில் 2ஜிபி ரேமோடு கூடிய கெப்ளரி ரன்னிங் ஜிஇபோர்ஸ் 650எம் உள்ளதால் க்ராபிக்ஸ் வேலைகளை இதில் அருமையாகச் செய்ய முடியும். மேலும் இந்த நோட்புக் 500ஜிபி சேமிப்புடன் வருகிறது.

சிறந்த மாடலில் வரும் நோட்புக், கோர் ஐ7 3520எம் ப்ராசஸர் மற்றும் 8ஜிபி டிடிஆர்3-1333 ரேம் கொண்டிருக்கிறது. அதோடு முந்தைய மாடலின் க்ராபிக்ஸ் ஹார்ட்வேரையே இதுவும் கொண்டுள்ளது. ஆனால் சேமிப்பைப் பொருத்தவரை இந்த நோட்புக் 750ஜிபி அளவைக் கொண்டுள்ளது.

மிகச் சிறந்த மாடலில் வரும் நோட்புக் கோர் ஐ7 3720க்யுஎம் ப்ராசஸர் மற்றும் 8ஜிபி டிடிஆர்3-1600எம்முடன் வருகிறது. சேமிப்பு வசதியை எடுத்துக் கொண்டால் இந்த மாடல் 750ஜிபி சட்டா மற்றும் 128ஜிபி எஸ்எஸ்டியுடன் வருகிறது.

இறுதியாக அல்டிமேட் மாடல் மிகவும் சூப்பராக வருகிறது. குறிப்பாக இந்த நோட்புக் கோர் ஐ7 3820க்யுஎஸ் ப்ராசஸருடன் வருகிறது. இதில் இருக்கும் 16ஜிபி டிடிஆர்3-1600 ரேம் எச்டி வீடியோ எடிட்டிங் மற்றும் எச்டி கேமிங் ஆகியவற்றை சப்போர்ட் செய்யும். மேலும் இந்த உயர்தர மாடல் 750 ஜிபி சட்டா எச்எச்டி மற்றும் 256 எஸ்எஸ்டியுடன் வருகிறது.

க்ராபிக்ஸ் வேலைகளுக்கா மிகச் சிறந்த மற்றும் அல்டிமேட் ஆகிய இரண்டு மாடல்களும் 2ஜிபி ரேமுடன் கூடிய கெப்ளர் ரன்னிங் ஜிஇபோர்ஸ் 660எம் கொண்டு வருகின்றன. அதனால் இந்த நோட்புக்குகளில் மிக சூப்பராக வீடியோ கேம்களை விளையாட முடியும். அதே நேரத்தில் க்ராபிக்ஸ் வேலைகளையும் மிக சூப்பராக செய்ய முடியும்.

மேற்சொன்ன 4 நோட்புக் மாடல்களின் டிஸ்ப்ளே மிகத் தெளிவாக இருக்கும். அதோடு இதில் ட்ரூஸ்டூடியோ ப்ரோ சவுண்ட் வசதி கொண்ட 4 ஸ்பீக்கர்கள் உள்ளதால் இதில் இனிமையான பாடல்களையும் கேட்கலாம். மேலும் வீடியோ உரையாடலுக்கான வெப்காம் மற்றும் இணைப்பு வசதிகளுக்காக எச்டிஎம்ஐ மற்றும் விஜிஎ போர்ட்டுகளும் உள்ளன.

விலையைப் பார்த்தால் சாதாரண மாடல் 1099 அமெரிக்க டாலர்களுக்கும், சிறந்த மாடல் 1299 அமெரிக்க டாலர்களுக்கும், மிகச் சிறந்த மாடல் 1599 அமெரிக்க டாலர்களுக்கும் மற்றும் அல்டிமேட் மாடல் 1999 அமெரிக்க டாலர்களுக்கும் விற்கபடுகின்றன.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X