2019 முதல் மேக் ஓஎஸ்-இல் சப்போர்ட் செய்யும் ஐஒஎஸ் செயலிகள்.!

2019ஆம் ஆண்டு முதல் ஐஒஎஸ் செயலிகள் மேக் ஓஎஸ்-இல் சப்போர்ட் செய்யும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

|

சமீபத்தில் நடந்து முடிந்த 2018ஆம் ஆண்டின் உலக டெவலப்பர் கூட்டத்தில் ஆப்பிள் நிறுவனம் ஐஒஎஸ் 12 பயனாளிகளுக்கு ஒருசில சிறப்பு வசதிகளை அறிமுகம் செய்தது. வாட்ச் ஓஎஸ், மேக் ஓஎஸ், மற்றும் டிவி ஓஎஸ் ஆகியவை ஆகும். ஆனாலும் இதுவரை ஐஒஎஸ் மற்றும் மாக் ஓஎஸ் ஆகியவற்றை இணைக்கும் திட்டம் குறித்து ஆப்பிள் அறிவிக்கவில்லை. ஆனால் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி வரும் 2019ஆம் ஆண்டு முதல் ஐஒஎஸ் செயலிகள் மேக் ஓஎஸ்-இல் சப்போர்ட் செய்யும் வகையில் இருக்கும் என்றும், அதற்கான பணியை டெவலப்பர்கள் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

2019 முதல் மேக் ஓஎஸ்-இல் சப்போர்ட் செய்யும் ஐஒஎஸ் செயலிகள்.!

இந்த நிலையில் தற்போது ஐஒஎஸ் செயலிகளான செய்திகள், பங்கு வர்த்தகம், வாய்ஸ் மெமோஸ், மற்றும் சில முக்கிய செயலிகளை ஒரு பிளாட்பாரத்தில் இருந்து மற்றொரு பிளாட்பாரத்திற்கு மாற்றுவது என்பது டெவலப்பர்களுக்கு ஒரு பெரிய வேலையாக இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றத்திற்கு பெரிய அளவில் கோடிங் மாற்றம் செய்ய தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மைக்ரோசாப்ட் ஆபீஸ் தற்போது ஆப்பிள் ஸ்டோரில் மாக் ஓஎஸ் வடிவத்திற்காக கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
2019 முதல் மேக் ஓஎஸ்-இல் சப்போர்ட் செய்யும் ஐஒஎஸ் செயலிகள்.!


இதில் உள்ள சவால்கள் என்னென்ன?

ஐஒஎஸ் இல் இருந்து மேக் ஓஎஸ் வடிவத்திற்கு ஒரு செயலியை மாற்றும்போது எதிர்கொள்ள வேண்டிய ஒரு முக்கிய சவால் என்னவெனில் அநத செயலியில் கண்ட்ரோல்தான். பெரும்பாலான ஐஒஎஸ் செயலிகளின் கண்ட்ரோல் டச் வடிவில் உள்ளது. ஆனால் மேக் ஒஎஸ் இல் இன்று வரை டச் வசதி இல்லை என்பது ஒரு சவாலாக கருதப்படுகிறது. இதற்காக டெவலப்பர்கள் கோடிங்குகளை மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். இந்த பிரச்சனைக்கு டச் வசதிக்கு பதிலாக மவுஸ் அல்லது கீபேட்களில் சப்போர்ட் கிடைக்கும் வகையில் கோடிங் மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம் என்பதே பெரும்பாலான டெவலப்பர்களின் கருத்தாக உள்ளது.

இந்த பிரச்சனையை எளிதில் தீர்ப்பதற்காகவே ஆப்பிள் நிறுவனம் புதுவித அல்காரிதத்தை உருவாக்கி வருவதாகவும், இதன் மூலம் மேக் ஓஎஸ் இல் செயலிகளை செயல்பட வைக்க்க முடியும் என்றும் நம்பப்படுகிறது. இதுகுறித்த பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும், இந்த பணிகள் முடிவடைந்து பயனாளிகளின் கைக்கு இந்த வசதி வரும் 2019ஆம் ஆண்டில் கிடைக்க பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

2019 முதல் மேக் ஓஎஸ்-இல் சப்போர்ட் செய்யும் ஐஒஎஸ் செயலிகள்.!

இதனால் என்ன நன்மை?
மற்ற ஆப்பரேடிங் சிஸ்டத்தில் உள்ளதை விட ஐஒஎஸ் பிளாட்பாரத்தில் ஏகப்பட்ட செயலிகளும் கேம்ஸ்களும் மிக அதிகம் என்பது பலர் அறிந்ததே. எனினும், மறுபுறம், மேக் ஓஎஸ் வடிவத்திற்கான ஒரு சில டெவலப்பர்கள் இருந்தனர். இந்த சிக்கலை தீர்க்க இது ஆப்பிள் விண்டோஸ் 10 எதிராக போட்டியிட ஐஒஎஸ் அட்டவணை இருந்து பயன்பாடுகள் ஒரு பெரிய எண் சேர்க்க உதவும். இது ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பும் நடந்தது என்பது தெரிந்த விஷயம்.
2019 முதல் மேக் ஓஎஸ்-இல் சப்போர்ட் செய்யும் ஐஒஎஸ் செயலிகள்.!

முடிவுரை:

கடந்த சில ஆண்டுகளில் இல்லாத வகையில் மேக் ஓஎஸ் மொஜாவி மேக் ஓஎஸ் இன் மிகப்பெரிய அப்டேட் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள். குறிபாக டார்க் மோட், மெட்டல் 2 அப்டேட்ஸ் ஆகியவை செய்திகளை தெரிந்து கொள்ள உதவு செயலிகள். இதுதான் சமீபத்தில் காணாத மிகச்சிறந்த அப்டேட் ஆகும். மேக் ஓஎஸ் மஜாவி அனைத்து மேக் ஓஎஸ் சப்போர்ட் செய்யும் சாதனங்களில் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
macOS Mojave To Support iOS Apps Starting from 2019 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X