Home
Computer

பிளிப்கார்ட் மூலம் ரூ.53,240 விலையில் ஆப்பிள் மேக்புக் ஏர் லேப்டாப் வாங்குவது எப்படி?

டெக்னாலஜி பொருட்களை இந்தியாவில் வாங்க இந்த இரு ஆன்லைன் இணையதளங்களின் சேவை மகத்தானது.

By Siva Lingam

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் மூலம் இந்தியாவில் சலுகை விலையில் ஏராளமான பொருட்கள் கிடைக்கின்றது என்பது தெரிந்ததே. ஒவ்வொரு இரண்டாவது வாரம் மட்டுமின்றி பல நாட்களிலும் சலுகை விலையில் பொருட்கள் கிடைக்கின்றது. டெக்னாலஜி பொருட்களை இந்தியாவில் வாங்க இந்த இரு ஆன்லைன் இணையதளங்களின் சேவை மகத்தானது. இன்று நாம் பிளிப்கார்ட் இணையதளம் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ஏர் லேப்டாபை சலுகை விலையில் ரூ.53,240க்கு கிடைக்கும் செய்தியைத்தான் பார்க்க போகிறோம்.

பிளிப்கார்ட் மூலம் ரூ.53,240 விலையில் ஆப்பிள் மேக்புக் ஏர் லேப்டாப்.!

ஆப்பிள் மேக்புக் ஏர் லேப்டாப்பில் உள்ள எக்சேஞ்ச் சலுகையை பயன்படுத்தினால் உங்களுக்கு ரூ.10,500 தள்ளுபடி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பிளிப்கார்ட் நிறுவனம் வேறு எங்கும் ஆப்பிள் மேக்புக் ஏர் லேப்டாப்பை வாங்க முடியாத சுமார் ரூ.50 ஆயிரம் விலையில் உங்களுக்கு வழங்க தயாராக உள்ளது. இந்த ஆப்பிள் மேக்புக் ஏர் லேப்டாப்பை ரூ.53,240ல் பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
பிளிப்கார்ட் மூலம் ரூ.53,240 விலையில் ஆப்பிள் மேக்புக் ஏர் லேப்டாப்.!

பள்ளி மாணவர்களை தவிர மற்ற அனைவருக்கும் இந்த ஆப்பிள் மேக்புக் ஏர் லேப்டாப் விலை ரூ.54.990 என்ற விலையில் தான் உள்ளது. இந்த லேப்டாப்பில் 8ஜிபி ராம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாக உள்ளது. இந்த ஆப்பிள் மேக்புக் ஏர் லேப்டாப்பின் விலை அதிகபட்ச விலை ரூ.72 ஆயிரமாக இருந்தாலும் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரம் வரையிலான விலையில் விற்பனை செய்கிறது.

மேலும் எச்.டி.எப்.சி வங்கியின் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும். இருப்பினும் இந்த தள்ளுபடி அதிகபட்சமாக ரூ1750 மட்டுமே கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. நீங்கள் ஆப்பிள் மேக்புக் ஏர் லேப்டாப்பை வாங்க விரும்பி உங்களிடம் எச்.டி.எப்.சி வங்கியின் கார்டு இருந்தால் இந்த சலுகையை பெற்று கொள்ளலாம். உங்களிடம் இந்த கார்டு இல்லையென்றால் உங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் இருந்து கார்டை பெற்றும் சலுகைகளை பெற்று ரூ.53,240 என்ற விலையில் ஆப்பிள் மேக்புக் ஏர் லேப்டாப்பை பெற்று கொள்ளலாம்.

பிளிப்கார்ட் மூலம் ரூ.53,240 விலையில் ஆப்பிள் மேக்புக் ஏர் லேப்டாப்.!

மேலும் சிறப்பு தள்ளுபடியை பெற விரும்பினால் நீங்கள் எக்சேஞ்ச் ஆஃபர் முறையை தேர்வு செய்யலாம். உங்களிடம் செயல்படும் வகையிலான பழைய லேப்டாப் இருந்தால் அதனை எக்சேஞ்ச் செய்து மேலும் ரூ.10,500 தள்ளுபடியில் ஆப்பிள் மேக்புக் ஏர் லேப்டாப்பை பெறலாம். இந்த டீல் மூலம் ரூ.53 ஆயிரம் விலையில் உங்களுக்கு ஒரு ஆப்பிள் மேக்புக் ஏர் லேப்டாப் கிடைப்பது என்பது ஒரு பெரிய விஷயம்.
பிளிப்கார்ட் மூலம் ரூ.53,240 விலையில் ஆப்பிள் மேக்புக் ஏர் லேப்டாப்.!

இன்றைய காலகட்டத்தில் நவீன வசதிகள் கொண்ட ஒரு லேப்டாப் இந்த விலையில் கிடைப்பது என்பது ஒரு அரிதான விஷயம். நல்ல டிசைன் , வேகமாக செயல்படும் திறன், எடை குறைவு, ஆகியவை வேறு எந்த லேப்டாப்பிலும் இல்லாத பெருமை இந்த ஆப்பிள் மேக்புக் ஏர் லேப்டாப்புக்கு உண்டு. டச்பேட் கீ போர்டு கொண்ட இந்த லேப்டாப்பை சலுகை விலையில் பெறும் வாய்ப்பை விட்டுவிட வேண்டாம்

Best Mobiles in India

English summary
MacBook Air sells for Rs 53240 on Flipkart in Back To College sale : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X