மேக்புக் ஏர் (2022), 13-இன்ச் மேக்புக் ப்ரோ (2022) சாதனங்கள் அறிமுகம்! அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலை.!

|

ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் சாதனங்கள் சிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன் வெளிவருகிறது. எனவேதான் இந்நிறுவனத்தின் சாதனங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

 எம்2 (M2) சிப்செட்

எம்2 (M2) சிப்செட்

இந்நிலையில் டெவலப்பர்கள் மாநாடு WWDC 2022 நேற்று இரவு நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் தரமான எம்2 (M2) சிப்செட்-ஐ
அறிமுகம் செய்தது. இதற்கு முன்பு வெளிவந்த எம்1 சிப்செட்-ஐ விட அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த எம்2 சிப்செட். குறிப்பாக
அடுத்த தலைமுறை ஆப்பிள் சிலிகான் சிப்செட்டான இது தலைசிறந்த சிபியு மற்றும் கிராஃபிக்ஸ் செயல்திறனை வழங்குகிறது என்பது
குறிப்பிடத்தக்கது.

வீட்டையே தியேட்டராக மாற்றலாம்., இது மட்டும் போதும்: அறிமுகமானது புதுமாடல் சோனி பிராவியா ஸ்மார்ட்டிவி!வீட்டையே தியேட்டராக மாற்றலாம்., இது மட்டும் போதும்: அறிமுகமானது புதுமாடல் சோனி பிராவியா ஸ்மார்ட்டிவி!

மேக்புக் ஏர் (2022), மேக்புக் ப்ரோ (2022)

மேக்புக் ஏர் (2022), மேக்புக் ப்ரோ (2022)

இந்த சிப்செட் உடன் மேக்புக் ஏர் (2022), மேக்புக் ப்ரோ (2022) சாதனங்களையும் அறிமுகம் செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம். குறிப்பாக இந்த இரண்டு சாதனங்களும் சிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன் வெளிவந்துள்ளது. அதிலும் மேக்புக் ப்ரோ சாதனம் ஆனது 13-இன்ச் டிஸ்பிளே மற்றும்
எம்2 சிப்செட் வசதியுடன் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஆனால் இந்த இரண்டு சாதனங்களின் விலை சற்று உயர்வாக உள்ளது. இப்போது மேக்புக் ஏர் (2022), மேக்புக் ப்ரோ (2022) சாதனங்களின் அம்சங்களைப் பார்ப்போம்.

ஆன்லைனில் ஆர்டர் செய்த மொபைல் போன் டெலிவரி: பார்சலை பிரித்து பார்த்ததும் மிரண்டு போன நபர்- இது ரொம்ப ஓவர்!ஆன்லைனில் ஆர்டர் செய்த மொபைல் போன் டெலிவரி: பார்சலை பிரித்து பார்த்ததும் மிரண்டு போன நபர்- இது ரொம்ப ஓவர்!

மேக்புக் ஏர் (2022) அம்சங்கள்

மேக்புக் ஏர் (2022) அம்சங்கள்

மேக்புக் ஏர் (2022) சாதனம் ஆனது 13.6-இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. இதற்கு முந்தைய மாடலை விட 20 சதவீதம் அதிகபிரைட்னஸ் கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனம் மெலிதாகவும், குறைந்த எடை கொண்டு வெளிவந்துள்ளதால் அனைத்து இடங்களிலும் எளிமையாகபயன்படுத்த முடியும்.

100 ஆண்டுகள் நீடித்து நிலைக்கும் பேட்டரி: டெஸ்லாவின் மாஸ் கண்டுபிடிப்பு எதிர்காலத்தின் புரட்சியா?100 ஆண்டுகள் நீடித்து நிலைக்கும் பேட்டரி: டெஸ்லாவின் மாஸ் கண்டுபிடிப்பு எதிர்காலத்தின் புரட்சியா?

 4 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம்

4 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம்

மேக்புக் ஏர் (2022) சாதனம் ஆனது மேக்சேஃப் சார்ஜிங் போர்ட் உடன் வருகிறது. பின்பு M2 சிப்செட், 4 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஸ்பேஷியல் ஆடியோ சப்போர்ட்,1080 பிக்சல் ஃபேஸ்டைம் எச்டி கேமரா, போர்ஸ் டச் டிராக்பேட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது
மேக்புக் ஏர் (2022) மாடல். இதுதவிர நாள் முழுக்க பேட்டரி பேக்கப் வழங்குகிறது இந்த சாதனம். பின்பு 18 மணி நேர வீடியோ பிளேபேக் ஆதரவு, 30 வாட் யுஎஸ்பி சி அடாப்டர் போன்ற அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது மேக்புக் ஏர் (2022) சாதனம். குறிப்பாக இந்த சாதனம்
ஸ்பேஸ் கிரே, லேப்டாப் சில்வர், மிட்நைட் மற்றும் ஸ்டார்லைட் என நான்கு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அமேசான் அதிரடி: ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்- பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாச தள்ளுபடி!அமேசான் அதிரடி: ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்- பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாச தள்ளுபடி!

மேக்புக் ப்ரோ (2022)

மேக்புக் ப்ரோ (2022)

மேக்புக் ப்ரோ (2022) சாதனம் ஆனது 13-இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு புதிய எம்2 சிப்செட் ஆதரவு, 256ஜிபி/512ஜிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ், மேஜிக் கீபோர்டு, 8 கோர் சிபியு, 10 கோர் சிபியு, ஃபோர்ஸ் டச் டிராப்பேட், 20 மணி நேர பேட்டரி பேக்கப் ஆதரவு போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான மேக்புக் ப்ரோ (2022) சாதனம்.

வியக்கவைக்கும் விலை

வியக்கவைக்கும் விலை

எம்2 சிப்செட் ஆதரவு கொண்ட புதிய மேக்புக் ஏர் (2022) மாடலின் விலை ரூ.1,19,900-ஆக உள்ளது. பின்பு எம்2 சிப்செட் ஆதரவு கொண்ட மேக்புக்
ப்ரோ மாடலின் விலை ரூ1,29,900-ஆக உள்ளது. குறிப்பாக இந்த சாதனங்களின் விற்பனை விரைவில் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
MacBook Air (2022), 13-Inch MacBook Pro (2022) With M2 Processors Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X