2013 தொடக்கத்தில் மேக் இயங்கு தளத்தின் புதிய வெர்சனை களமிறக்கும் ஆப்பிள்

ஆப்பிள் தனது மேக் இயங்கு தளத்தின் புதிய வெர்சனான எக்ஸ் 10.9ஐ மிக விரைவில் களமிறக்க இருக்கிறது என்று இணைய தளங்களில் ஏராளமான வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதோடு இந்த புதிய இயங்கு தளத்தில் ஆப்பிள் மேப்ஸ் மற்றும் பிரபலமான சிரி போன்றவற்றையும் ஆப்பிள் இணைத்து தரவிருப்பதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.
மேலும் இந்த புதிய இயங்கு தளத்தை உருவாக்கும் பணிகள் மிக துரிதமாக நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மவுண்டன் லயைன் இயங்கு தளத்தில் வரும் மேக்ஸ் சாதனங்கள் ஏற்கனவே டிக்டேசன், டெக்ஸ் டூ ஸ்பீச் போன்ற அப்ளிகேசன்களைப் பயன்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் இந்த புதிய இயங்கு தளத்தில் சிரி என்ற அப்ளிகேசன் வரும் போது மேக்ஸ் சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள் வாய்ஸ் கமண்ட் மற்றும் தேடும் வசதி போன்ற சிறப்பு வசதிகளைப் பெறலாம். மேலும் இந்த புதிய இயங்கு தளத்தில் ஆப்பிளின் மேப்ஸ் மிக சூப்பராக வர இருக்கிறது.
ஆனாலும் மேற்சொன்ன வதந்திகள் அனைத்தும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும் இந்த புதிய இயங்கு தளம் எப்போது வெளியாகும் என்பதும் தெரிவிக்கப்படவில்லை. எனினும் 2013 தொடக்கத்தில் இந்த புதிய இயங்கு தளம் வெளிவந்துவிடும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications