மாணவர்களை குஷிப்படுத்தும் கம்மி விலை Infinix லேப்டாப்: அறிமுகம் எப்போது? என்னென்ன அம்சங்கள்?
இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் அடுத்த வாரம் புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 7 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 7 ஸ்மார்ட்போன் கம்மி விலையில் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட்போன் உடன் Infinix InBook Y1 Plus எனும் லேப்டாப் மாடலும் வெளிவருகிறது.
குறிப்பாக இந்த இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் லேப்டாப் மாடலும் குறைந்த விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த லேப்டாப் மாடல் மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் லேப்டாப் மாடலின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

இன்புக் Y1 பிளஸ் லேப்டாப் அம்சங்கள்
இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் லேப்டாப் ஆனது 15.6-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 250 நிட்ஸ் ப்ரைட்னஸ், 86% sRGB color space மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் லேப்டாப் வெளிவரும்.
அதேபோல் இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் லேப்டாப் மாடலில் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதி உள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக இந்த லேப்டாப் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம். அதேபோல் இந்த புதிய லேப்டாக் இன்டெல் கோர் ஐ9 சிபியு வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் லேப்டாப் ஆனது 50Wh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த லேப்டாப் மாடலை ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 மணி நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 45 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டு இந்த லேப்டாப் அறிமுகமாகும். குறிப்பாக 1 மணி நேரத்தில் இந்த லேப்டாப் மாடலை 75 சதவீதம் சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் தரமான ஸ்பீக்கர் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப் மாடல்.
இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் லேப்டாப் மாடலின் ரேம், ஜிபியு, கூலிங் மெக்கானிசம்,ஆப்பரேட்டிங் சிஸ்டம் பற்றிய முக்கிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் இந்த முக்கிய விவரங்கள் தெரியவரும். குறிப்பாக இந்த லேப்டாப் மாடல் குறைந்த விலையில் விலையில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்போது அறிமுகம்?
அதேபோல் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 7 போன் மற்றும் இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் லேப்டாப் சாதனங்கள் வரும் பிப்ரவரி 22-ம் தேதி அறிமுகமாகும் என்று கூறப்பட்டுள்ளது. பின்பு இந்த இரண்டு சாதனங்களும் பிளிப்கார்ட் தளத்தில் தான் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் லேப்டாப் சாம்பல், நீலம் போன்ற நிறங்களில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 7 போன் கூட பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக மாணவர்களுக்குத் தகுந்தபடி பட்ஜெட் விலையில் அசத்தலான லேப்டாப் மாடலை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது இன்பினிக்ஸ் நிறுவனம்.


Click it and Unblock the Notifications








