லைட் வெளிச்சத்தில் சார்ஜ் செய்யும் வசதியுடன் புதிய சோலார் கீபோர்டு!

Posted By: Karthikeyan
லைட் வெளிச்சத்தில் சார்ஜ் செய்யும் வசதியுடன் புதிய சோலார் கீபோர்டு!

லாஜிடெக் நிறுவனம் சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் ஒரு புதிய கீபோர்டை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த கீபோர்டின் முக்கிய விசேஷம் என்னவென்றால் இந்த கீபோர்டை ஒரு சிறிய விளக்கின் ஒளியின் மூலம் சார்ஜ் செய்ய முடியும். அதனால் இந்த கீபோர்டுக்கு பேட்டரிகள் தேவைப்படாது.

இந்த கீபோர்டுக்கு லாஜிடெக் வயர்லஸ் சோலார் கீபோர்டு கே760 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த கீபோர்டை ஆப்பிளின் சாதனங்களான மேக், ஐபேட் மற்றும் ஐபோன் ஆகியவற்றோடு எளிதாக இணைக்க முடியும்.

இந்த கீபோர்டில் சூரிய சக்தி கொண்ட பேட்டரி ஒன்று இருக்கிறது. ஏற்கனவே கூறியது போல் இந்த பேட்டரியை எந்த ஒரு ஒளியின் மூலமும் ரீசார்ஜ் செய்ய முடியும். அதனால் இந்த கீபோர்ட் ஆப்பிள் ப்ளூடூடுத் வயர்லஸ் கீபோர்டை விட சிறந்ததாக இருக்கிறது என்று விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இந்த கே760 கீபோர்டு பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலாக அழகாக இருக்கிறது. இந்த கீபோர்டு ப்ளூடூத் வசதியுடன் வருவதால் ஒரே நேரத்தில் மேக், ஐபேட் மற்றும் ஐபோனுடன் இந்த கீபோர்டை இணைக்க முடியும்.

இந்த கீபோர்டின் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் இந்த கீபோர்டை முழு சார்ஜ் செய்துவிட்டால் ஒரு நாளுக்கு 8 மணி நேரம் 30 நாள்களுக்கு இயங்கும் திறன் கொண்டது. மேலும் மிகவும் இருட்டான இடத்திலும் இந்த கீபோர்டு வேலை செய்யும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot