Home
Computer

தண்ணீரில் சுத்தம் செய்ய லாஜிடெக் வாஷபில் கீபோர்டு!

By Super

தண்ணீரில் சுத்தம் செய்ய லாஜிடெக் வாஷபில் கீபோர்டு!
தண்ணீரில் கழுவி சுத்தம் செய்யும் வகையில் புதிய வாஷபில் கீபோர்டு கே-310 என்ற கீபோர்டை அறிமுகம் செய்கிறது லாஜிடெக் நிறுவனம். பொதுவாக கீபோர்டில் தூசி படிந்துவிட்டால் அதை சுத்தம் செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல.

கீபோர்டு சுத்தம் செய்வதற்கென்றே பிரத்தியேகமாக கொடுக்கப்பட்டிருக்கும், மிருதுவான துணிகளையும், சில திரவ பொருட்களையும் கொண்டு சுத்தம் செய்ய வேண்டி உள்ளது.

இது போல் சுத்தம் செய்ய அதிக நேரம் தேவைப்படுகிறது. அப்படியே அதிக நேரம் செலவிட்டாலும், கீபோர்டு பட்டன்களின் இடுக்குகளில் சுத்தம் செய்யவது கடினம் தான். இதனால் தண்ணீரில் கழுவும் வகையில் புதிய வாஷபில் கீபோர்டு ஒன்றை வழங்குகிறது லஜிடெக் நிறுவனம்.

தண்ணீரில் கழுவும் வசதி மட்டும் அல்லாமல், வேறு புதிய வசதிகள் என்ன? என்பதையும் பார்க்கலாம். இந்த கீபோர்டை 11 இஞ்ச் தண்ணீர் ஆழம் வரை முழுக வைத்து சுத்தம் செய்யலாம். அதோடு கீபோர்டில் ட்ரைனேஜ் ஹோல் என்று சொல்லப்படுகிற சிறிய ஓட்டைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் தண்ணீர் உள்ளே தங்கி இருந்தாலும், இந்த ட்ரைனேஜ் ஹோல் மூலமாக வெளியாகிவிடும். இந்த கீபோர்டின் எழுத்துகளில் யூவி கோட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் எத்தனை முறை இந்த கீபோர்ட்டில் அழுத்தமாக விரல்களை பதித்தாலும், இதன் எழுத்துகள் அழியாது.

இந்த வாஷபில் கீபோர்டு அமெரிக்காவில் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. வருகிற அக்டோபர் மாதம் லாஜிடெக் நிறுவனத்தின் இந்த வாஷபில் கீபோர்டு கே-310 ஐரோப்பா நாடுகளில் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது. 39 டாலர் விலை கொண்டதாக இருக்கும்.

நமது நாட்டில் ரூபாய் மதிப்பில் பார்த்தால் ரூ. 2,163 விலை கொண்டதாக இருக்கும் எனலாம். ஆனால் இந்த கீபோர்ட் நமது நாட்டில் அறிமுகம் செய்யப்படுமா என்பது இன்னும் சரிவர அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X