ஆவலைத் தூண்டிய பிஜிட்சூவின் புதிய லைப்புக்!

By Karthikeyan
|
ஆவலைத் தூண்டிய பிஜிட்சூவின் புதிய லைப்புக்!

புதுமையான சிந்தனைகளும் புதுமையான முயற்சிகளும் இருந்தால் அவை மனிதர்களை உலகின் உச்சிக்கே அழைத்துச் சென்றுவிடும். அந்த வகையில் சாதாரண நிறுவனங்களின் கெட்ஜெட்டுகள் முதல் ஆப்பிள் கெட்ஜெட்டுகள் வரை அவை புதுமையாக அதே நேரத்தில் ஸ்டைலாக மற்றும் பல அளவுகளில் வருகின்றன.

அந்த வகையில் ஒரு கெட்ஜெட் பிரியர் தன்னிடம் ஒரு உயர் தரமான கெட்ஜெட் இருந்தால் தன்னை ஒரு கெட்ஜெட்டின் முதலாளியாகப் பார்க்கிறார். அந்த அளவிற்கு கெட்ஜெட்டுகள் மிக எளிதாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் மற்றும் சமூகத்தில் அந்தஸ்தைக் கொடுக்கக்கூடிய வகையில் வந்துவிட்டன.

இப்போது எல்லா வசதிகளையும் பெறக்கூடிய ஒரு அல்டிமேட் கணினியைப் பற்றிய எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகமாக உள்ளது. பிஜிட்சு நிறுவனம் புதிய மின்னணு கான்செப்ட் மாடலை அறிமுகப்படுத்தி, மக்களின் மனங்களில் எதிர்பார்ப்பை எழுப்பி இருக்கிறது. பிஜிட்சுவின் புதிய டேப்லெட், ஸ்மார்ட்போன், கேமரா மற்றும் லேப்டாப் போன்ற அத்தனை டிவைஸ்களின் இன்டக்ரேட் செய்ய முடியும்.

பிஜிட்சுவின் இந்த லைப்புக் கான்செப்ட்டின் படி, மேற்சொன்ன 4 சாதனங்களின் தொழில் நுட்பங்களும் ஒரே டிவைசில் வருகின்றன. அதுதான் பிஜிட்சூவின் லைப்புக் டிவைஸ். அவ்வாறு இன்டக்ரேட் செய்யும் போது இந்த டிவைஸ் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. மேலும் ஷேர்டு ஹார்டுவேர் இதன் பின்னனியில் இருக்கிறது. இதைப் பற்றிய விளக்கத்தை பிஜிட்சுவின் அதிகாரப்பூர்வமான இணையதளமான யாங்கோ டிஸைனில் விளக்கமாக உள்ளது.

டேப்லெட், ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்புக்கு தனியாக ப்ராசஸர் மற்றும் மெமரி தனியாக வேண்டும். ஆனால் இவை அனைத்தும் ஒரு சக்தி வாய்ந்த ப்ராசஸர் மற்றும் ரேம் ஆகியவற்றில் வந்தால் அது பட்டையைக் கிளப்பும் என்பதில் ஐயமில்லை. எனவே இந்த பிஜிட்சுவின் நவீன மற்றும் புதுமையான சிந்தைனையைப் பார்க்கும் போது அது மிக அட்டகாசமாக இருக்கிறது.

பிஜிட்சுவின் லைப்புக் சிந்தனையின்படி கேமரா லேப்டாப்பின் உச்சியில் மிக பக்காவாக உள்ளது. அதுபோல் இதில் உள்ள 16 பிட் கனக்டர் மூலம் டேப்லெட்டை இணைக்க முடியும். அதன் மூலம் தொடுதிரையைப் பயன்படுத்த முடியும். மேலும் இதில் வயர்கள் கிடையாது. அதுபோல் இது 4 டிவைஸ்களையும் சார்ஜ் செய்துவிடும். இந்த புதிய சிந்தனை நடைமுறை வாழ்க்கைக்கு சாத்தியாப்படுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X