எல்ஜி வைட் ஸ்க்ரீன் டெக்னலாஜி: இனி வேற லெவல் கேமிங் அனுபவம் உறுதி.!

|

எல்ஜி நிறுவனம், விளையாட்டு ஆர்வலர்களை மனதில் வைத்து ஒரு புதிய தயாரிப்பை அறிவித்துள்ளது. நாம் இங்கு எல்ஜி 34யோசி79ஜி 34-இன்ச் அல்டராவைட் கேமிங் மானிட்டர் பற்றிதான் பேசுகிறோம்.

எல்ஜி வைட் ஸ்க்ரீன் டெக்னலாஜி: இனி வேற லெவல் கேமிங் அனுபவம் உறுதி.!

வழக்கமான கேமிங் மானிடர்கள் 16: 9 என்கிற விகிதத்தை கொண்டுள்ளனர், இது அட்லாடைடு 21: 9 என்கிற விகிதத்தை கொண்டுள்ளது. இதன் மூலம் சிறந்த கிராபிக்ஸ் செயல்திறன் உறுதி செய்யப்படும்.

உங்கள் கேமிங் தேவைகளுக்காக ஒரு மானிட்டரை வாங்கும் முன், எல்ஜி 34யோசி79ஜி என்கிற அட்டகாசமான அல்ட்ராடுட் மானிட்டரை மனதில் கொள்ளுங்கள். ஏற்கனவே சந்தையில் கிடைக்கும் அதே வழக்கமான மானிடர்களால் உங்களின் கேமிங் அனுபவம் மேம்படுத்த முடியாது என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.!

ஆழமான காட்சி அனுபவம்

ஆழமான காட்சி அனுபவம்

அல்ட்ராவைட் கேமிங் மானிட்டர்கள் - சந்தேகத்திற்கிடமின்றி கேமிங் துறை மற்றும் அதன் உற்பத்தியின் எதிர்காலமாக திகழப்போகிறது. இவ்வகை மானிட்டர்கள் பொதுவான 16: 9 விகித மானிட்டர்கள் மற்றும் மல்டி திரை அமைப்புகளை விடவும் மிக ஆழமான காட்சி அனுபவத்தை வழங்குகின்றன. பாரம்பரியமான 16: 9 விகித திரைகளில் கிடைக்காத அனுபவமா இந்த புதிய 21: 9 அல்ட்ராவைட் திரைகளில் கிடைத்து விடப்போகிறதென்ற சலிப்பை எந்தவொரு கேமிங் பிரியருக்கும் எழாது - ஏனெனில் இவ்வகை திரையளவின் கிராபிக்ஸ் செயல்திறன் பற்றி அவர்கள் அறிவர். குறிப்பாக ஒரு தனிப்பட்ட கேமருக்கு இந்த அல்ட்ராவைட் திரையானது - அதிர்ச்சி தரும் காட்சியமைப்புகள் அவரக்ளின் கற்பனை உலகிற்கான ஒரு நுழைவுவாயில் போல செய்லபடும். இதன் டூயல் மானிட்டர் வழங்கும் திரை அமைப்பு அனுபவத்தை மல்டிஸ்க்ரீன்களால் கூட வழங்க முடியாது என்பதே நிதர்சனம்.

ஸ்க்ரீன்களில் மிகப்பெரிய வளர்ச்சி

ஸ்க்ரீன்களில் மிகப்பெரிய வளர்ச்சி

நீங்கள் மிகவும் ஆர்வமுள்ள ஒரு கேமராக இருந்தும் ஒரு நிலையான 16: 9 விகித மானிட்டருடன் சிக்கி தவிக்கிறீர்கள் என்றால் நீங்கள் தீவிரமான கேமிங் உலகின் பல அற்புதமான விஷயங்களை இழக்கிறீர்கள் என்று அர்த்தம். கேமிங் என்பது அதிசயமான காட்சியமைப்புகளைப் பற்றியது. பல ஆண்டுகளாக உலகின் பலவகையான தரநிலை 16: 9 விகித ஸ்க்ரீன்களில் மிகப்பெரிய வளர்ச்சிகள் உண்டாகியுள்ளது. ஆனால் அவைகளால் இன்றைய கேமிங் பிரியர்களுக்கு தீனிப்போட முடியாது. அல்ட்ராவைட் ஸ்க்ரீன்கள் அதிக பரந்த பார்வையை வழங்குகின்றன மற்றும் நீங்கள் விளையாடும் போது அதிக உள்ளடக்கத்தையும் அனுபவிப்பீர்கள். அப்படியான, அல்ட்ராவைட் டிஸ்ப்ளேவின் மேம்படுத்தப்பட்ட பார்வையிலேயே, அதன் கோணத்திலேயே நீங்கள் கேமிங் உள்ளடக்கத்தை அதிகம் காண்பீர்கள். கூடுதலாக, இதன் பரவலான பீல்ட்-ஆஃப்-வியூ உங்களை எதிர்கால கேமிங் வளர்ச்சிக்கே கொண்டுசெல்லும்.

எல்ஜி 34யூசி79ஜி

எல்ஜி 34யூசி79ஜி

எல்ஜி நிறுவனத்தின் 34யூசி79ஜி என்பதும் அல்ட்ராவைட் டிஸ்ப்ளே பிரிவின் கீழ் உள்ள ஒரு மானிட்டர் தான். இந்த சமீபத்திய ஏஎச்-ஐபிஎஸ் அல்ட்ராவைட்டிஸ்பிளே ஆனது 144ஹெர்ட்ஸ் என்ற ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2560 x 1080பி பிக்சல்கள் அளவிலான தீர்மானம் கொண்டு வருகிறது. இந்த எல்ஜி அல்ட்ராவைட் மானிட்டர் ஆனது 165ஹெர்ட்ஸ் வரை ஓவர்லாக்டு அடைய முடியும் மற்றும் 50ஹெர்ட்ஸ் முதல் 144ஹெர்ட்ஸ் என்கிற ரெஸ்ப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. இதன் அதிகபட்ச ரெப்ரெஷ் ரேட் ஆனது காட்சி வெளியீட்டை மேம்படுத்துகிறது. மேலும் இந்த எல்ஜி. மானிட்டரின் ஐபிஎஸ் பேனல் 16.7 மில்லியன் நிறங்களின் பரந்த அளவிலான உள்ளடக்கம் கொண்டது மற்றும் 8-பிட் வண்ண ரீப்ரொடக்ஷனை அனுமதிக்கிறது.

ஸ்க்ரீன் ஸ்ப்ளிட் 2.0 மற்றும் அடாப்டிவ் சின்க் தொழில்நுட்பம்

ஸ்க்ரீன் ஸ்ப்ளிட் 2.0 மற்றும் அடாப்டிவ் சின்க் தொழில்நுட்பம்

எல்ஜி அல்டராவைட் மானிட்டர் ஆனது மோஷன் ப்ளர் குறைப்பு, ஆன் ஸ்க்ரீன் கண்ட்ரோல் உடனான ஸ்கிரீன் ஸ்பிளிட் 2.0 மற்றும் பல மேம்பட்ட கேமிங் அம்சங்களுடன் வருகிறது. சந்தையில் பல அல்ட்ராவைட் திரைகள் உள்ளன, இருப்பினும் கூட எல்ஜி நிறுவனத்தின் பரந்த திரைகளானது, அதிவேக விளையாட்டு விரும்பிகளுக்கான சமீபத்திய காட்சி தொழில்நுட்பங்களுக்கான மேம்பாட்டுடன் வருகின்றன மற்றும் அதன் இணக்கத்தன்மை மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் பொருந்துகின்றன. குறிப்பாக இதன் அடாப்டிவ் சின்க் தொழில்நுட்பமானது கிராபிக்ஸ் கார்டின் பிரேம் வீதத்திற்கும், ரெப்ரெஷ் வீதத்திற்கும் இடையிலேயான விகிதத்தை சமப்படுத்துகிறது. இது ஒட்டுமொத்த கேமிங் அனுபவத்தைத் தடுக்கக்கூடிய தேவையற்ற உயர் உள்ளீட்டு லேக்கைத் தடுக்கிறது.

மோஷன் ப்ளர்

மோஷன் ப்ளர்

பெரும்பாலான உள்ளீடு லேக்க'ளை இயற்கையிலேயே முற்றிலுமாக தவிர்க்க முடியாது என்கிற போதும் கூட மிகவும் மோசமான லேக்களை இதன் ப்ரீ சின்க் தொழில்நுட்பம் ஒரு பெரிய அளவில் குறைக்க உதவும். இதன் 1எம் மோஷன் ப்ளர் ரிடெக்ஷன் அம்சத்தினை ஆக்டிவேட் செய்த பின்னர் உயர் மட்ட கேம்களை விளையாடும் போது தேவையான துல்லியத்தை அடைவதற்கு உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைகள் டிஏஎஸ்- டைனமிக் அட்டாக் சின்க் முறைமையுடன் வருகின்றன, இது எந்தவிதமான தாமதங்களையும் அனுபவிக்காமல் உடனடியாக அட்டாக் செய்ய உதவும். இந்த பயன்முறையானது, விளையாடுபவர்களின் உணர்வுகளுடன் ஒத்திசைக்குமொரு அனுபவத்தை வழங்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

பிளாக் ஸ்டெபிலைஸர் தொழில்நுட்பம்

பிளாக் ஸ்டெபிலைஸர் தொழில்நுட்பம்

எச்எம்டிஐ போர்ட், டிஸ்பிளே போர்ட் மற்றும் யூஎஸ்பி 3.0 போர்ட் ஆகியவற்றை வழங்கும் இந்த மானிட்டர்களில் பிளாக் ஸ்டெபிலைஸர் தொழில்நுட்பம் இடம்பெறுகிறது, இது விரைவில் மானிட்டர் அமைப்புகளை மேம்படுத்துகிறது. இந்த அம்சத்தை இயக்கியவுடன், மானிட்டர் திரைகளில் உள்ள இருண்ட காட்சிகளில் கூட தோற்றத்தை தெளிவாக காட்சிப்படுத்தப்படும். இதனால் எதிரிகளை மிக விரைவில் உங்களால் கண்டறிய முடியும், உங்கள் கேமிங் பாத்திரத்திற்கு எந்த அபாயகரமான சேதமும் நிகழாமலும் பார்த்துக்கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
LG's wide screen monitors offer latest and best display technology for immersive gameplay. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X