Home
Computer

விண்டோஸ் 8க்கு ஜோடியாக எல்ஜியின் புதிய பெரிய மானிட்டர்

By Karthikeyan
விண்டோஸ் 8க்கு ஜோடியாக எல்ஜியின் புதிய பெரிய மானிட்டர்

கடந்த வாரம் மைக்ரோசாப்ட் தனது புதிய இயங்கு தளமான விண்டோஸ் 8ஐ களமிறக்கியது. அதனைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் இந்த புதிய விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் இயங்கும் புதிய சாதனங்களைக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போது விண்டோஸ் 8 இயங்கு தளத்திற்காக ஒரு புதிய மானிட்டரைக் களமிறக்கி இருக்கிறது.

இந்த புதிய மானிட்டருக்கு டச் 10 மானிட்டர் (இடி83) என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. 23 இன்ச் அளவில் வரும் இந்த மானிட்டரை 10 விரல்களாலும் இயக்கக்கூடிய வகையில் மல்டி டச் வசதி கொண்டிருக்கிறது.

மல்டி டச் வசதி கொண்ட இந்த புதிய பெரிய மானிட்டர் இதைப் பயன்படுத்துவோருக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தரும் என்று எல்ஜியின் துணை இயக்குனர் ஜே.ஜே. லீ கூறியிருக்கிறார். ஏனெனில் டேப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட்போன்களில் இருக்கும் மல்டி டச் திரைகள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்திருக்கின்றன. அந்த வகையில் இந்த புதிய பெரிய தொடு வசதி கொண்ட மானிட்டர் கணினி ரசிகர்களைப் பெரிதும் கவரும் என்பதில் ஐயமில்லை.

இந்த திரையில் கீபோர்டு உள்ளதால் இந்த மானிட்டரிலேயே 10 விரல்களாலும் டைப் செய்ய முடியும். மேலும் இந்த மானிட்டர் பென் இன்டர்பேசையும் சப்போர்ட் செய்கிறது.

இந்த மானிட்டர் இசை அப்ளிகேசன்களையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக வெர்ச்சுவல் பியானோ, சின்தசைஸர் மற்றும் நரம்பு இசைக் கருவிகளையும் சப்போர்ட் செய்கிறது. இந்த பெரிய மானிட்டரில் திரைப்படங்கள் பார்ப்பது மற்றும் வீடியோ கேம் விளையாடுவது ஆகியவை பரவசத்தைக் கொடுக்கும் என்று நம்பலாம். மேலும் விண்டோஸ் ஸ்டோரில் உள்ள டச் பிரண்டில் அப்ளிகேசனையும் இந்த மானிட்டரில் பயன்படுத்த முடியும்.

இந்த மானிட்டர் அருமையான வண்ணங்களை வழங்குகிறது. மேலும் இந்த மானிட்டர் மிகவும் தெளிவாகவும் இருக்கும். அடுத்த மாதம் இந்த மானிட்டர் கொரியாவில் களமிறங்க இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் மற்றும் மற்ற நாடுகளுக்கும் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X