புதிய அல்ட்ரா புக்கை அறிமுகப்படுத்துகிறது எல்ஜி

By Super
|
புதிய அல்ட்ரா புக்கை அறிமுகப்படுத்துகிறது எல்ஜி
எல்ஜியின் அடுத்த புதிய லேப்டாப்பைப் பற்றிய செய்தி காட்டுத் தீ போல் இணையதளத்தில் பரவி வருகிறது. இது ஒரு ஆச்சரியப்பட வேண்டிய விஷயமல்ல. ஏனெனில் ஒவ்வொரு நாளும் எல்லா நிறுவனங்களும் இது போன்று தமது அல்ட்ராபுக் லேப்டாப்புகளை அறிமுகப்படுத்துகின்றன.

அல்ட்ராபுக்கின் காலம் ஏற்கனவே தொடங்கிவிட்டது. மேலும் அது விரைவாக அதனுடைய பெருமையை மக்களிடமிருந்து இழந்து விடாது. அதாவது இப்போது மெல்லிய தரமான கொண்பிகரேஷனோடு வரும் லேப்டாப்களுக்கு பயங்கர வரவேற்பு உள்ளது. அப்படிப்பட எடை குறைந்த லேப்டாப்புகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றன.

அல்ட்ராபுக் எப்போதுமே சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. அது எடை குறைந்து மெல்லியதாக இருக்கிறது. அதன் ஹார்டவேர் வசதிகளும் அபாராமாக உள்ளன. அதன் விலையைப் பொருத்தமட்டிலும் கூட அது தனியாக இருக்கிறது. அதாவது இது வரை வந்த அல்ட்ரா புக்குகள் விலை அதிகமாகவே இருக்கின்றன.

ஆனால் அதன் தொழில் நுட்பம் மிக சிறப்பாக உள்ளன. ஏஸர் மற்றும் தோஷிபா போன்ற நிறுவனங்களின் அல்ட்ரா புக்குகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக எல்ஜி நிறுவனம் தனது புதிய எல்ஜி ஷூரிக்கெய்ன் 18 என்ற புதிய அல்ட்ரா புக்கை அறிமுகப்படுத்த இருக்கிறது.

இந்த எல்ஜி ஷூரிக்கெய்ன் 18 முதலில் சான் பிரான்ஸிஸ்கோவில் நடைபெற்ற இன்டல் டிவெலப்பர் போரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அது இண்டலின் ஐவிஒய் பிரிட்ஜி பிராசஸரில் இயங்குகிறது. அதன் 13.3 இன்ச் டிஸ்ப்ளே லகுவான அனைவரையும் கவரக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

இதன் கருப்பு க்ளோசி கோட்டிங் இதன் சிக்லெட் ஸ்டைல் கீபோர்டில் உள்ளதால் பார்ப்பதற்கு மிக பக்காவாக உள்ளது. ஆனால் இதில் கைரேகை அறியும் திறன் இல்லை. இதன் டச்பேட் பெரியதாக உள்ளதால் இதில் வேலை செய்வது புதிய அனுபவத்தைத் தரும்.

மேலும் இதன் கீ அனைத்தும் தனித்தனியாக உள்ளதால் மிகவும் வேகமாக வேலை செய்ய முடியும். மேலும் தனியாக மவுஸ் பட்டனும் உள்ளது. மேலும் இதன் வைபை மற்றும் ப்ளூடூத் வசதிகள் ஆகியைவை சிறந்த தகவல் பரிமாற்றத்திற்கு உதவும். அதோடு யுஎஸ்பி போர்ட்டும் உள்ளதால் கண்டிப்பாக இந்த லேப்டாப் பட்டையைக் கிளப்பும் என்று நம்பலாம். சேமிப்பு வசதிக்காக இது 2ஜிபி ராமையும் கொண்டிருக்கிறது.

இந்த எல்ஜியின் புதிய லேப்டாப் விலை தெரியவில்லை என்றாலும் விரைவில் சந்தைக்கு வந்து மற்ற லேப்டாப்புகளை ஊதித் தள்ளிவிடும் என்று நம்பலாம்.

Best Mobiles in India

Read more about:

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X