Home
Computer

"வேற லெவல்" கேமிங் அனுபவத்தை வழங்கும் எல்ஜி அல்ட்ராவைட் கேமிங் மானிட்டர்கள்.!

இவ்வகை மானிட்டர்கள் பொதுவான 16: 9 விகித மானிட்டர்கள் மற்றும் மல்டி திரை அமைப்புகளை விடவும் மிக ஆழமான காட்சி அனுபவத்தை வழங்குகின்றன.

By Muthuraj

அல்ட்ராவைட் கேமிங் மானிட்டர்கள் - சந்தேகத்திற்கிடமின்றி கேமிங் துறை மற்றும் அதன் உற்பத்தியின் எதிர்காலமாக திகழப்போகிறது. இவ்வகை மானிட்டர்கள் பொதுவான 16: 9 விகித மானிட்டர்கள் மற்றும் மல்டி திரை அமைப்புகளை விடவும் மிக ஆழமான காட்சி அனுபவத்தை வழங்குகின்றன.

பாரம்பரியமான 16: 9 விகித திரைகளில் கிடைக்காத அனுபவமா இந்த புதிய 21: 9 அல்ட்ராவைட் திரைகளில் கிடைத்து விடப்போகிறதென்ற சலிப்பை எந்தவொரு கேமிங் பிரியருக்கும் எழாது - ஏனெனில் இவ்வகை திரையளவின் கிராபிக்ஸ் செயல்திறன் பற்றி அவர்கள் அறிவர். குறிப்பாக ஒரு தனிப்பட்ட கேமருக்கு இந்த அல்ட்ராவைட் திரையானது - அதிர்ச்சி தரும் காட்சியமைப்புகள் அவரக்ளின் கற்பனை உலகிற்கான ஒரு நுழைவுவாயில் போல செய்லபடும். இத ன் டூயல் மானிட்டர் வழங்கும் திரை அமைப்பு அனுபவத்தை மல்டிஸ்க்ரீன்களால் கூட வழங்க முடியாது என்பதே நிதர்சனம்.

பல அற்புதமான விஷயங்களை இழக்கிறீர்கள்.?

பல அற்புதமான விஷயங்களை இழக்கிறீர்கள்.?

நீங்கள் மிகவும் ஆர்வமுள்ள ஒரு கேமராக இருந்தும் ஒரு நிலையான 16: 9 விகித மானிட்டருடன் சிக்கி தவிக்கிறீர்கள் என்றால் நீங்கள் தீவிரமான கேமிங் உலகின் பல அற்புதமான விஷயங்களை இழக்கிறீர்கள் என்று அர்த்தம். கேமிங் என்பது அதிசயமான காட்சியமைப்புகளைப் பற்றியது. பல ஆண்டுகளாக உலகின் பலவகையான தரநிலை 16: 9 விகித ஸ்க்ரீன்களில் மிகப்பெரிய வளர்ச்சிகள் உண்டாகியுள்ளது. ஆனால் அவைகளால் இன்றைய கேமிங் பிரியர்களுக்கு தீனிப்போட முடியாது.

பரவலான பீல்ட்-ஆஃப்-வியூ.!

பரவலான பீல்ட்-ஆஃப்-வியூ.!

அல்ட்ராவைட் ஸ்க்ரீன்கள் அதிக பரந்த பார்வையை வழங்குகின்றன மற்றும் நீங்கள் விளையாடும் போது அதிக உள்ளடக்கத்தையும் அனுபவிப்பீர்கள். அப்படியான, அல்ட்ராவைட் டிஸ்ப்ளேவின் மேம்படுத்தப்பட்ட பார்வையிலேயே, அதன் கோணத்திலேயே நீங்கள் கேமிங் உள்ளடக்கத்தை அதிகம் காண்பீர்கள். கூடுதலாக, இதன் பரவலான பீல்ட்-ஆஃப்-வியூ உங்களை எதிர்கால கேமிங் வளர்ச்சிக்கே கொண்டுசெல்லும்.

எல்ஜி 34யூசி79ஜி.!

எல்ஜி 34யூசி79ஜி.!

எல்ஜி நிறுவனத்தின் 34யூசி79ஜி என்பதும் அல்ட்ராவைட் டிஸ்ப்ளே பிரிவின் கீழ் உள்ள ஒரு மானிட்டர் தான். இந்த சமீபத்திய ஏஎச்-ஐபிஎஸ் அல்ட்ராவைட்டிஸ்பிளே ஆனது 144ஹெர்ட்ஸ் என்ற ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2560 x 1080பி பிக்சல்கள் அளவிலான தீர்மானம் கொண்டு வருகிறது.

எல்ஜி 29யூஎம்69.!

எல்ஜி 29யூஎம்69.!

அல்ட்ராவைட் ஸ்க்ரீன் பட்டியலில் அடுத்ததாக - எல்ஜி 29யூஎம்69 உள்ளது. 29 அங்குல 21: 9 அல்ட்ராவைட் கேமிங் மானிட்டரான இது முழு எச்டி ஐபிஎஸ் திரை கொண்டு வருகிறது. இதன் 29 அங்குல துறையானது, 16.7 மில்லியன் நிறங்களின் பரந்த அளவிலான உள்ளடக்கத்தையும் மற்றும் 75ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட், 1000: 1 என்ற வேறுபாடு விகிதத்தையும் கொண்டுள்ளது. இந்த மானிட்டர் மல்டிபிள் பிக்சர்ட மோட் - கஸ்டம், ரீடர், போட்டோ, கேமரா, மற்றும் பல - கொண்டு வருகிறது. இதுவும் உங்கள் தேவைக்கேற்ப சாய்த்து கொள்ளும் படியான 'டில்ட்' ஆதரவு கொண்டுள்ளது.

காட்சி தொழில்நுட்பங்களுக்கான மேம்பாட்டுடன் வருகின்றன.!

காட்சி தொழில்நுட்பங்களுக்கான மேம்பாட்டுடன் வருகின்றன.!

சந்தையில் பல அல்ட்ராவைட் திரைகள் உள்ளன, இருப்பினும் கூட எல்ஜி நிறுவனத்தின் பரந்த திரைகளானது, அதிவேக விளையாட்டு விரும்பிகளுக்கான சமீபத்திய காட்சி தொழில்நுட்பங்களுக்கான மேம்பாட்டுடன் வருகின்றன மற்றும் அதன் இணக்கத்தன்மை மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் பொருந்துகின்றன.

தேவையற்ற உயர் உள்ளீட்டு லேக்கைத் தடுக்கிறது.!

தேவையற்ற உயர் உள்ளீட்டு லேக்கைத் தடுக்கிறது.!

குறிப்பாக இதன் அடாப்டிவ் சின்க் தொழில்நுட்பமானது கிராபிக்ஸ் கார்டின் பிரேம் வீதத்திற்கும், ரெப்ரெஷ் வீதத்திற்கும் இடையிலேயான விகிதத்தை சமப்படுத்துகிறது. இது ஒட்டுமொத்த கேமிங் அனுபவத்தைத் தடுக்கக்கூடிய தேவையற்ற உயர் உள்ளீட்டு லேக்கைத் தடுக்கிறது.

ப்ரீ சின்க் தொழில்நுட்பம்.!

ப்ரீ சின்க் தொழில்நுட்பம்.!

பெரும்பாலான உள்ளீடு லேக்க'ளை இயற்கையிலேயே முற்றிலுமாக தவிர்க்க முடியாது என்கிற போதும் கூட மிகவும் மோசமான லேக்களை இதன் ப்ரீ சின்க் தொழில்நுட்பம் ஒரு பெரிய அளவில் குறைக்க உதவும். இதன் 1எம் மோஷன் ப்ளர் ரிடெக்ஷன் அம்சத்தினை ஆக்டிவேட் செய்த பின்னர் உயர் மட்ட கேம்களை விளையாடும் போது தேவையான துல்லியத்தை அடைவதற்கு உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டிஏஎஸ்- டைனமிக் அட்டாக் சின்க்.!

டிஏஎஸ்- டைனமிக் அட்டாக் சின்க்.!

மேலும் இந்த திரைகள் டிஏஎஸ்- டைனமிக் அட்டாக் சின்க் முறைமையுடன் வருகின்றன, இது எந்தவிதமான தாமதங்களையும் அனுபவிக்காமல் உடனடியாக அட்டாக் செய்ய உதவும். இந்த பயன்முறையானது, விளையாடுபவர்களின் உணர்வுகளுடன் ஒத்திசைக்குமொரு அனுபவத்தை வழங்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

பிளாக் ஸ்டெபிலைஸர் தொழில்நுட்பம்

பிளாக் ஸ்டெபிலைஸர் தொழில்நுட்பம்

எச்எம்டிஐ போர்ட், டிஸ்பிளே போர்ட் மற்றும் யூஎஸ்பி 3.0 போர்ட் ஆகியவற்றை வழங்கும் இந்த மானிட்டர்களில் பிளாக் ஸ்டெபிலைஸர் தொழில்நுட்பம் இடம்பெறுகிறது, இது விரைவில் மானிட்டர் அமைப்புகளை மேம்படுத்துகிறது. இந்த அம்சத்தை இயக்கியவுடன், மானிட்டர் திரைகளில் உள்ள இருண்ட காட்சிகளில் கூட தோற்றத்தை தெளிவாக காட்சிப்படுத்தப்படும். இதனால் எதிரிகளை மிக விரைவில் உங்களால் கண்டறிய முடியும், உங்கள் கேமிங் பாத்திரத்திற்கு எந்த அபாயகரமான சேதமும் நிகழாமலும் பார்த்துக்கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
LG’s Ultrawide Gaming Monitors deliver unparalleled PC gaming experience. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X