நீண்ட நாட்களுக்கு பிறகு எல்ஜி அறிமுகம் செய்யும் புதிய லேப்டாப் மாடல்கள்.!
விரைவில எல்ஜி அறிமுகப்படுத்தும் 17-இன்ச் கிராம் லேப்டாப் மாடல் 19.5மணி நேரம் பேட்டரி ஆயுள் வசதியுடன் வெளிவரும்.
எல்ஜி நிறுவனம் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டு லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்தது, அந்த லேப்டாப் மாடல்கள் உலகம் முழுவதும் அதிக வரவேற்பை பெற்றது, இந்நிலையில் அந்நிறவனம் சார்பாக புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.

அது என்னவென்றால் விரைவில் நடைபெறும் சிஇஎஸ் 2019 நிகழ்ச்சியில் 2-இன்-1 லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது எல்ஜி நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் நீண்ட நாட்களுக்கு பிறகு அறிமுகம் செய்யு புதிய லேப்டாப்
மாடல்கள் தலை சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே
சிஇஎஸ் 2019 நிகழ்ச்சியில் எல்ஜி கிராம் லேப்டாப் மாடல்கள் 17-இன்ச் மற்றும் 14-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புகளில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக 14-இன்ச் லேப்டாப் மாடல் 360 டிகிரி கோணங்களை ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது.

இன்டெல் கோர் ஐ7-8565யு
இரண்டு லேப்டாப் மாடல்களும் இன்டெல் கோர் ஐ7-8565யு செயலி மற்றும் யுஎச்டி கிராபிக்ஸ் 620 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இணைப்பு ஆதரவுகள்:
எல்ஜி நிறுவனத்தின் லேப்டாப் மாடல்கள் யுஎஸ்பி டைப்-சி போர்ட், யுஎஸ்பி-ஏ போர்ட், மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட், 3.5 எம்எம் ஆடியோ ஜாக்,எச்டிஎம்ஐ போர்ட்,போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்க்பபட்டுள்ளது.

பேட்டரி:
விரைவில எல்ஜி அறிமுகப்படுத்தும் 17-இன்ச் கிராம் லேப்டாப் மாடல் 19.5மணி நேரம் பேட்டரி ஆயுள் வசதியுடன் வெளிவரும், பின்பு 14-இன்ச் கிராம் லேப்டாப் மாடல் 21மணி நேரம் பேட்டரி ஆயுள் வசதியுடன் வெளிவரும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை மற்றும் இயங்குதளம்:
இரண்டு லேப்டாப் மாடல்களும் விண்டோஸ் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும், பின்பு கைரேகை ஸ்கேனர் போன்ற பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் இந்த இரண்டு லேப்டாப் மாடல்களிலும் இடம்பெற்றுள்ளது, குறிப்பாக ரூபாய்.1லட்சம் விலையில் இந்த லேப்டாப் மாடல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications