அறிமுகம் : எல்ஜியின் புதிய கிராம்14 லேப்டாப்.!

CES 2017-ல் அறிமுகம் செய்யப்பட்ட, அனைவரையும் கவர்ந்த எல்ஜியின் புதிய கிராம்14 லேப்டாப்பின் சிறப்புகள்.!

By Siva
|

கடந்த ஆண்டு எல்ஜி நிறுவனம் வெளியிட்ட ஸ்மார்ட்போன்கள் உள்பட அனைத்து தயாரிப்புகளும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த ஆண்டும் இந்நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை சமீபத்தில் நடைபெற்று முடிந்த CES 2017 என்ற டெக்னாலஜி மாநாட்டில் அறிவித்துள்ளது.

அறிமுகம் : எல்ஜியின் புதிய கிராம்14 லேப்டாப்.!

ஆடியோ சாதனங்கள், தொலைக்காட்சிகள், ஸ்மார்ட்போன்கள் ஆகியவற்றுடன் இந்த ஆண்டு எல்ஜி நிறுவனம் புதிய கிராம்14 என்ற வகை லேப்டாப்பையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரையும் கவர்ந்த இந்த லேப்டாப் குறித்து தற்போது பார்ப்போம்

விரைவில் 'போல்டபிள் டிஸ்பிளே' கொண்ட சாம்சங் கருவிகள்.!

980 கிராம் அதாவது ஒரு கிலோவுக்கும் குறைவான எடையை கொண்ட இந்த கிராம்14 லேப்டாப், 14 இன்ச் முழு HD 1080P டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளேவினை கொண்டது. இண்டெல் நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிராஸசர் என்று கூறப்படும் கேபி லேக் (Kaby Lake) பிராஸசர் இந்த கிராம்14 லேப்டாப்பில் உள்ளது.

16 GB ரேம், 512 GB SSD ஸ்டோரேஜ் உள்ள இந்த கிராம்14 லேப்டாப்ப்பில் USB போர்ட், 2 USB 3.0 போர்ட்ஸ், HDMI போர்ட்ஸ், மைக்ரோ எஸ்டி கார்ட் மற்றும் வைபை ஆகிய வசதிகள் உள்ளது. மேலும் இந்த லேப்டாப்பில் பிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் வேகமாக சார்ச் செய்யும் விண்டோஸ் ஹலோ ஆகிய அம்சங்களும் அமைந்துள்ளன.

2016-ல் சந்தையை கலக்கிய லெனோவா ஸ்மார்ட்போன்கள்.!

பொதுவாக லேப்டாப்பில் சார்ஜ் சீக்கிரம் காலியாகிவிடும் என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் இந்த கிராம்14 லேப்டாப் 24 மணி நேரம் பேட்டரி நிற்பதற்கு கியாரண்டி கொடுத்துள்ளது. ஆனாலும் இந்த லேப்டாப்பின் சார்ஜை சோதனை செய்து பார்த்ததில் 21 மணி நேரம் சார்ஜ் நின்றதை உறுதி செய்ய முடிந்தது.

இந்த புதிய வகை எல்ஜி கிராம்14 லேப்டாப் இந்திய மதிப்பில் சுமார் ரூ.80,900 என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது தென்கொரியாவின் விலை என்றும், தென்கொரியாவை தாண்டினால் இதனுடைய சரியான விலை என்ன என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதுஜ்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
LG has announced the new Gram 14 laptop that delivers a great battery life of 17 hours to the users. The laptop is yet to be made available in markets out of South Korea.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X