Home
Computer

கண்ணாடி அணியாமல் 3டியில் படம் காட்டும் எல்ஜி லேப்டாப்!

By Karthikeyan
கண்ணாடி அணியாமல் 3டியில் படம் காட்டும் எல்ஜி லேப்டாப்!

சமீபத்தில் எல்ஜி நிறுவனம் கண்ணாடி இல்லாமலே பார்க்கக்கூடிய ஒரு 3டி நோட்புக்கை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த நோட்புக்கிற்கு எக்சினோட் எ540-எச் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் ஒரு உறுதியான லேப்டாப் ஆகும். இதில் ஒரு முழுமையான 3டி அனுபவத்தைப் பெற முடியும். மேலும் இதே வரிசையில் 2 புதிய மாடல்களையும் எல்ஜி அறிமுகம் செய்திருகக்கிறது. அவற்றின் பெயர்கள் முறையே எல்ஜி எக்சினோட் எ540-பி மற்றும் எ540 டி/டி ஆகும். இந்த எக்சினோட் வரிசை லேப்டாப்புகள் சூப்பரான தொழில் நுட்பங்களைக் கொண்டுள்ளன.

இந்த லேப்டாப்புகள் 15.6 இன்ச் திரையைக் கொண்டுள்ளன. க்ராபிக்ஸ் வசதிகளுக்காக ஜிஇபோர்ஸ் ஜிடி555எம் க்ராபிக்ஸ் கார்டைக் கொண்டுள்ளன. இன்டல் கோர் ஐ7 ப்ராசஸரை இந்த லேப்டாப்புகள் கொண்டிருப்பதால் இவற்றின் வேகம் தாறுமாறாக இருக்கும். மேலும் இந்த லேப்டாப்புகளில் எஸ்ஆர்எஸ் ப்ரீமியம் ஒலி அமைப்பும் உள்ளது. அதோடு ஒரு இன்டக்ரேட்டட் வெப்காமும் உள்ளது.

இந்த வரிசையில் வரும் உயர்தர லேப்டாப்புகளில் 3டி வசதியை அனுபவிக்க கண்ணாடி அணிய தேவையில்லை. ஏனெனில் அவற்றில் ஆட்டோ ஸ்டீரியோ ஸ்கோபிக் 3டி டிஸ்ப்ளே உள்ளது. ஆனால் எ540 டி/டி லேப்டாப்பில் கண்ணாடி அணிய வேண்டும். ஆனால் அந்த கண்ணாடிகள் மிக ஸ்டைலாக இருக்கின்றன. மேலும் இந்த லேப்டாப்புகளில் 2டியிலிருந்து 3டிக்கு அப்ளிகேசன்களை மாற்றுவது மிகவும் எளிது.

இந்த எக்சினோட் வரிசை லேப்டாப்புகளின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதபோல் இந்த லேப்டாப்புகள் விரைவில் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X