Home
Computer

ஆஹா சொல்ல வைக்கும் லெனோவாவின் யோகா லேப்டாப்!

By Karthikeyan
ஆஹா சொல்ல வைக்கும் லெனோவாவின் யோகா லேப்டாப்!

ஆஹா சொல்ல வைக்கும் லெனோவாவின் யோகா லேப்டாப்!

மக்களின் மனதைப் புரிந்து கொள்வதில் லெனோவா நிறுவனம் முன்னோடியாக இருக்கிறது. அதனால் தான் மக்களின் தேவைக்கேற்ப தனது அல்ட்ராபுக் லேப்டாப்புக்கு 2 புதிய மாற்றங்களைச் செய்யவிருக்கிறது. லெனோவாவின் புதிய அல்ட்ராபுக் பார்ப்பவரின் கண்களுக்கு விருந்து வைக்கும் வகையில் மிக அற்புதமாக உள்ளது. இந்த புதிய அல்ட்ராபுக்கின் பெயர் லெனோவா யோகா ஆகும்.

இந்த புதிய லேப்டாப் மிகவும் நெகிழ்வு தன்மை கொண்டிருப்பதால் இதற்கு யோகா என்ற பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த அல்ட்ராபுக் பல வேலைகளைச் செய்யும் திறன் கொண்டிருப்பதால் இது மல்டி மோட் அல்ட்ராபுக் என்று அழைக்கப்படுகிறது.

இந்த லெனோவா யோகா லேப்டாப்பின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் அது 13.3 இன்ச் அளவில் கப்பாசிட்டிவ் தொடு திரை கொண்டு அது 1600 x 900 பிக்சல் ரிசலூசனை வழங்குகிறது. இதன் மொத்த சேமிப்பு வசதி 8 ஜிபி ஆகும். இது 0.67 இன்ச் தடிமனையும் அதே நேரத்தில் 1.47 கிலோ எடையையும் கொண்டிருக்கிறது.

இந்த யோகா லேப்டாப் வின்டோஸ் 8 இயங்கு தளத்தில் இயங்குகிறது. மேலும் இதன் சிபியு கோர் ஐ7 ஐவி ப்ரிட்ஜ் ஆகும். அதுபோல் இதன் கீபோர்ட் சிக்லெட் ஆகும். ஆனால் பேக்லிட் கீபோர்டை இது கொண்டிருக்கவில்லை. மேலும் இதன் பேட்டரி இந்த லேப்டாப்புக்கு 8 மணி நேர இயங்கு நேரத்தை அளிக்கிறது.

இந்த யோகா லேப்டாப் லெனோவா திங்பேட் லேப்டாப்புகளின் வரிசையில் வருகிறது. இந்த யோகா லேப்டாப்பை ஒரு சாதாரண அல்ட்ராபுக் மற்றும் ஒரு டேப்லெட் போல பயன்படுத்தலாம். மேலும் இந்த லேப்டாப் டூவல் ஹின்ச் பிலிப் கொண்டிருப்பதால் இது உறுதியாகவும் இருக்கும். மேலும் இது குறைந்த எடையில் வருவதால் இதை மிக எளிதாக எடுத்துச் செல்ல முடியும்.

கட்டிங் எட்ஜ் ஹார்ட்வோர் இந்த லேப்டாப்பில் உள்ளதால் அது இன்னும் இந்த லேப்டாப்புக்கு பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது. இதில் தொடுதிரை உள்ளதால் இதை பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும். அதுபோல் இதன் யூசர் இன்டர்பேசும் மிக அருமையாக உள்ளது.

அடிப்படையில் இந்த லேப்டாப் ஒரு பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த லேப்டாப் ஆகும். இந்த யோகா லேப்டாப் இந்த ஆண்டின் இறுதி காலாண்டில் வரும் என்று தெரிகிறது. மேலும் இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X