லெனோவா யோகா 920 சிறப்பு வெளியீடு - ஓர் விமர்சனம் - அடுத்தவருக்கு பொறாமை, நமக்கு பெருமை.!

இந்த லேப்டாப் ஒல்லியாக இருப்பதால், போர்ட்கள் அதிகமாக இல்லை. இதனால் வயர்லெஸ் இணைப்புகளையே அதிகம் நம்ப வேண்டி உள்ளது.

By Saranya Vs
|

லெனோவாவை பொறுத்தவரை, ஸ்மார்ட்போன்களின் மார்க்கெட்டில் பெரிதாக கணக்கில் கொள்ளப்படாமல் இருக்கலாம், ஆனால் லேப் டாப் என்று வந்துவிட்டால் பலரது சாய்ஸ் லெனோவா தான்.

லெனோவா யோகா 920 சிறப்பு வெளியீடு - ஓர் விமர்சனம்.!


அதன் கவர்ச்சியான டிசைனும், ஸ்பெசிபிகேஷன்ஸும் நம்மை மயக்கி விடும். இந்த வருட ஆரம்பத்தில் வெளியான யோகா 920 பிரீமியம் மாடல் என்பதால், மார்க்கெட்டில் யோகா 5xx மற்றும் 7xx சீரிஸ் மடிக்கணினிகளை விட அதிகமாக கவனத்தை ஈர்க்கிறது. ரூ. 1,27,150 மதிப்புள்ள இந்த மடிக்கணினியை வாங்கும்போது எதையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்.

டிசைன்
லெனோவா யோகா 920-ன் டிசைன், வேகமான செயல்பாட்டுடன் சேர்த்து ஸ்டைலிஷாகவும் லேப்டாப் இருக்க வேண்டும் என்று விரும்பும் வாடிக்கையாளர்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது. இந்த சிறப்பு வெளியீட்டிற்கு முந்தைய யோகா 920 சீரிஸ் லேப் டாப் உலோக கவர் அப் கொண்டது. இந்த ஸ்பெஷல் சீரிஸ் லேப்டாப் கார்னிங் கொரில்லா கிளாஸ் கவர் கொண்டது. இந்த சிறப்பு கவர் ஸ்டிடூடோ ஐரோப்பியோ டி டிசைன் கலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களால் வடிவமைக்கப்பட்டது. இந்த டிசைன் யோகாவின் எளிமை மற்றும் சுறுசுறுப்பான செயலாற்றலின் வெளிப்பாடு என்று லெனோவா கூறுகிறது. இதன் கிளாஸ் பேனல் பிங்கர் பிரிண்ட் மற்றும் எளிதில் கரை பிடிக்கும் மாக்னெட் கொண்டது சற்று பின்னடைவு. என்றாலும், இதிலுள்ள திருகும் அமைப்பு ஸ்கிரீனை எவ்வாறு வேண்டுமானாலும் திருப்பிக்கொள்ளவதற்கு வசதியாக உள்ளது சிறப்பு. விண்டோஸ் ஹலோவுடன் கூடிய செளகரியமான கீ போர்ட், 2 ஜேபில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் டிவி ஷோக்களை பார்ப்பதற்கும் பாட்டு கேட்பதற்கும் வசதியாக உள்ளது.

இந்த லேப்டாப் ஒல்லியாக இருப்பதால், போர்ட்கள் அதிகமாக இல்லை. இதனால் வயர்லெஸ் இணைப்புகளையே அதிகம் நம்ப வேண்டி உள்ளது. ஒரு யுஎஸ்பி 3.0, தண்டர்போல்ட் உதவி கொண்ட இரு யுஎஸ்பி சி போர்ட்கள், 3.5 மிமி ஆடியோ ஜாக் உள்ளன. லேன் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு போட போர்டுகள் இல்லாதது சிறிது ஏமாற்றம் தரும் விஷயம்.

லெனோவா யோகா 920 சிறப்பு வெளியீடு - ஓர் விமர்சனம்.!


டிஸ்பிளே
சி.என்.சி அலுமினியம் கட்டமைப்பு, கை கடிகார பேண்ட் போல திருக்குமறுக்கான திருகு, கண்ணாடி கவர் டிஸ்பிளே என டெல் எக்ஸ்.பி.எஸ், ஹெச்பி ஸ்பெக்ட்ரே மற்றும் அசுஸ் லேப் டாப்புகளை முறியடிக்கும் ஸ்க்ரீன் இதன் சிறப்பம்சம்.

யோகா 920 சிறப்பு எடிஷன் 13.9 இன்ச் யு.ஹெச்.டி ரிசொலுஷன் ஐ.பி.எஸ் மல்டி டச் டிஸ்பிளே கொண்டது. மேலும் தொடு திரை (டச் ஸ்க்ரீன்) உள்ளது நம்மை கவரும் வகையில் அமைந்துள்ளது. இயல்பு நிலையிலேயே செயல்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்க்ரீன் ரொட்டேஷன் 180 டிகிரியை தாண்டும்போது டாபாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

லெனோவா ஆக்ட்டிவ் பென் 2 எழுத்தாணி இந்த தொகுப்புடன் இணைந்து வருகிறது. இதன் உணர்திறன் 4096, மிக நுணுக்கமாக, கலைஞர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது இது.

செயல்திறன்
இன்றைய உலகின் சக்திவாய்ந்த 8-வது தலைமுறை இன்டெல் கோர் ஐ-7 ப்ரோஸெசர் மற்றும் விண்டோஸ் 10 இரண்டும் நம்மை மயக்கிவிடும் அம்சங்கள். 16 ஜிபி ரேம், இன்டெல் ஹெச்டி 620 ஜிபியு வாடிக்கையாளர்களின் மனதை கொள்ளை கொண்டு விடும். வெப் கேமரா கொண்டு 0.9 மெ.பி போட்டோ, ஹெச்டி விடீயோக்கள் எடுக்கலாம்.

பேட்டரி
தொடர்ந்து கனமாக பயன்படுத்தினாலும், ஐந்து மணி நேரம் ஓடக்கூடிய 4-செல் 70 வாட் செயல் திறன் கொண்ட வலுவான பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. சாதாரணமாக பத்து முதல் பன்னிரண்டு மணி நேரம் பேட்டரி நிற்கும். விண்டோஸ் 10-ல் நிறைய பேட்டரி சேவிங் ஆப்ஷன்ஸ் உள்ளதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

லெனோவா யோகா 920 சிறப்பு வெளியீடு - ஓர் விமர்சனம்.!
Best online converter | Audio, Videos, PDF, Document etc.. (Tamil)

நமது பார்வை
லெனோவா யோகா 920 சிறப்பு எடிஷனின் அழகிய டிசைன் காண்பவரை கவர்ந்து விடும். அதன் கை கடிகார பேண்ட் போல திருக்குமறுக்கான திருகு அதற்கு தனிப்பட்ட அடையாளத்தை தந்தாலும் கண்ணாடி கவர் டிஸ்பிளே அதன் தனி சிறப்பு. செயல் திறன், டிஸ்பிளே, மல்டி மீடியா போன்ற அம்சங்களும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் விலை ரூ. 1,27,150 (வரி சேர்க்காமல்) என்பது, வாடிக்கையாளர்களை, வாங்கும் முன் ஓரிரு முறை யோசிக்க வைக்கும். ஆனால் விலை ஒரு பொருட்டாக இல்லாவிட்டால், இந்த வரம்பில் உள்ள டெல் இன்ஸ்பிரான் 13 7000, ஹெச்பி ஸ்பெக்ட்ரே 360 மற்றும் அசுஸ் ஜென்புக் பிலிப் எஸ் போன்ற லேட்டஸ்ட் மால்களில், இதுவே சிறந்த தேர்வு.
Best Mobiles in India

English summary
Lenovo Yoga 920 Special Edition Vibes review: Neighbours’ envy, owners’ pride; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X