லெனோவோ யோகா 6 லேப்டாப் மாடல் இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?

|

லெனோவா நிறுவனம் தனது புதிய லெனோவோ யோகா 6 2-இன்-1 லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய லேப்டாப் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது. இப்போது இந்த சாதனத்தின் விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

லெனோவோ யோகா 6 லேப்டாப்

லெனோவோ யோகா 6 லேப்டாப்

லெனோவோ யோகா 6 லேப்டாப் மாடலின் விலை ரூ.86,990-ஆக உள்ளது. மேலும் இந்த லேப்டாப் மாடல் Abyss ப்ளூ கலர் ஆப்ஷனில்
வெளிவந்துள்ளது. வரும் மார்ச் 10-ம் தேதி அமேசான், பிளிர்கார்ட் உள்ளிட்ட தளங்களில் இந்த புதிய லேப்டாப் மாடல் விற்பனைக்கு வரும்.பின்பு இதன் முன்பதிவு இப்போது துவங்கியுள்ளது.

13.3-இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் மல்டி டச் டிஸ்பிளே

13.3-இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் மல்டி டச் டிஸ்பிளே

லெனோவோ யோகா 6 லேப்டாப் மாடல் 13.3-இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் மல்டி டச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080 x1,920 பிக்சல் தீர்மானம் மற்றும் 300 nits பிரைட்நஸ் வசதி உள்ளிட் பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய லேப்டாப் மாடல்.

ரூ.8,900 மதிப்பில் புதிய Realme C21 அறிமுகம்.. மலிவு விலையில் அட்டகாச அம்சங்கள்..ரூ.8,900 மதிப்பில் புதிய Realme C21 அறிமுகம்.. மலிவு விலையில் அட்டகாச அம்சங்கள்..

யோகா 6 லேப்டாப் மாடலில்

லெனோவோ யோகா 6 லேப்டாப் மாடலில் விண்டோஸ் 10 ஹோம் இயங்குதளம் இடம்பெற்றுள்ளது. பின்பு இந்த சாதனம் 1.32 கிலோ எடையுடன்வெளிவந்துள்ளதால் அனைத்து இடங்களுக்கு எளிதாக எடுத்து சென்று பயன்படுத்தலாம். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம்செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

மீண்டும் வெடித்த விண்கலன்: வெற்றிகரமான தோல்வியை சந்தித்த எலான் மஸ்க்- வெடித்து சிதறும் வீடியோ!மீண்டும் வெடித்த விண்கலன்: வெற்றிகரமான தோல்வியை சந்தித்த எலான் மஸ்க்- வெடித்து சிதறும் வீடியோ!

லெனோவோ யோகா 6 லேப்டாப் மாடலில் மிகவும்

லெனோவோ யோகா 6 லேப்டாப் மாடலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட AMD Ryzen 7 4700U பிராசஸர் வசதி உள்ளது. மேலும் 16GB of DDR4 ரேம் மற்றும் ஏஎம்டி ரேடியான் கிராபிக்ஸ் வசதி கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய சாதனம். குறிப்பாக இந்த 2-இன்-1 லேப்டாப் மாடலில் 1TB சேமிப்பு ஆதரவு உள்ளது.

லெனோவோ யோகா 6 லேப்டாப்

லெனோவோ யோகா 6 லேப்டாப் சாதனத்தில் 60WHr பேட்டரி ஆதரவு உள்ளது. எனவே 18 மணி நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். பின்பு 720 பிக்சல் வெப்கேமரா, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் ஆதரவு, கைரேகை சென்சார், backlit கீபோர்டு வசதி, அலெக்சா குரல் உதவி ஆதரவு மற்றும் பல்வேறு அம்சங்கள் இந்த புதிய லேப்டாப் மாடலில் இடம்பெற்றுள்ளன.

இரண்டு யூ.எஸ்.பி டைப்-ஏ

வைஃபை 6, புளூடூத் 5, இரண்டு யூ.எஸ்.பி டைப்-ஏ போர்ட்கள், இரண்டு யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்கள் மற்றும் ஹெட்போன/மைக் காம்போ ஆகிய இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லெனோவோ யோகா 6 லேப்டாப்.

Best Mobiles in India

English summary
Lenovo Yoga 6 2-in-1 Laptop Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X