இந்தியாவில் அறிமுகமாகியுள்ள லெனோவா V330 லேப்டாப் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா?

இந்த புதிய மாடல் லெனோவா வீ330 லேட்பாப் குறித்து லெனோடாவின் இந்திய இயக்குனர் ஆஷிஷ் ஷிக்கா என்பவர் கூறியபோது, சிறுவணிகர்கள் இந்தியாவின் முதுகெலும்பு போன்றவர்கள்.

|

சீனாவில் உள்ள முன்னணி நிறுவனங்களில் ஒன்றான லெனோவா, கடந்த வியாழன் அன்று புதிய வீ சீரியஸ் லேப்டாப் ஒன்றை சிறுவணிகர்ளுக்கும் ஸ்டார்ட் அப்ஸ்களுக்கும் அறிமுகம் செய்துள்ளது. அதுதான் லெனோவா வீ330 என்ற மாடல். இந்த மாடல் ரூ.48000 முதல் ஆரம்பமாகிறது.

அசத்தலான லெனோவா V330 லேப்டாப் அறிமுகம்.!


லெனோவா வீ330 லேட்பாப் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் உதவும் நண்பன் போல் உள்ளது என்றும், இதில் அல்ட்ராபே என்ற டிரைவ் அல்லது ஆப்டிக்கல் டிரை மற்றும் கூடுதல் பேட்டரி, வேகமாக சார்ஜ் ஏற்றும் பேட்டரி, நவீன டெக்னாலஜியில் உருவாக்கப்பட்ட கீபோர்டு, யூஎஸ்பி டைப் சி, மற்றும் யூஎஸ்பி 3.0 போர்ட்ஸ் ஆகியவை உள்ளது.

இந்த புதிய மாடல் லெனோவா வீ330 லேட்பாப் குறித்து லெனோடாவின் இந்திய இயக்குனர் ஆஷிஷ் ஷிக்கா என்பவர் கூறியபோது, சிறுவணிகர்கள் இந்தியாவின் முதுகெலும்பு போன்றவர்கள். அவர்களுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் டிஜிட்டல் பயன்களை தரும் வல்லமை கொண்டது இந்த லெனோவா வீ330 லேட்பாப்.

அசத்தலான லெனோவா V330 லேப்டாப் அறிமுகம்.!

இந்த லேப்டாப் அவர்களுக்கு வாடிக்கையாளர்களை அதிகரிக்கவும், தக்க வைத்து கொள்ளவும் பெரிதும் உதவும். இந்த சிறு வணிகர்கள் தங்களுடைய வியாபரத்தினை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த லெனோவா வீ330 லேட்பாப் உருவாக்கப்பட்டுல்ளது. பாதுகாப்பு மற்றும் பயன் ஆகியவற்றில் மிகுந்த பயன் உள்ளதாக இது இருக்கும் என்று கூறியுள்ளார்.

லெனோவா வீ330 லேட்பாப் நல்ல பாதுகாப்பான வடிவத்துடன் வெப்கேமிராவுடன் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் டச் டபி பிங்கர் ரீடரும் உண்டு என்பதால் மிகவும் பாதுகாப்பானது.

இண்டெல் டெக்னாலஜியில் மெல்லியதாக அதே நேரத்தில் ஸ்டைலிஷாக இருக்கும் இந்த லெனோவா வீ330 லேட்பாப், பாதுகாப்பு, பயன்படுத்த எளிமையானது மற்றும் வசதியானதும் கூட. இதில் 14 இன்ச் முழு ஹெச்டி (1920x1080 பிக்சல்) வகை டிஸ்ப்ளேவில் கிளேர் என்பதே இருக்காது. மேலும் இதில் 720பி வகையான வெப்கேமிரா ஷட்டருடன் உள்ளது.

How To Increase the Speed of your Laptop (TAMIL)

அசத்தலான லெனோவா V330 லேப்டாப் அறிமுகம்.!


கடந்த மாதம் இதே நிறுவனம் திங்க்பேட் என்ற சீரியஸில் திங்க்பேட் X1 என்ற லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த திங்க்பேட் 8வது ஜெனரேஷன் இண்டெல்கோர் பிராஸசர்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Lenovo V330 Laptop for SMEs, Startups Launched in India Price, Specifications ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X