லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.!

|

இன்றைய தொழில்நுட்ப உலகில் ஸ்மார்ட்போன், டேப்ளட்ஸ் மற்றும் லேப்டாப் ஆகியவை ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை தற்போது எங்கே சென்றாலும் கையுடன் லேப்டாப்பை எடுத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

போதும் என்ற நிலை உருவாகிவிட்டது

இந்த லேப்டாப் நமது வேலையை எளிமையாக்குகிறது. முன்பெல்லாம் கிலோ கணக்கில் லெட்ஜர் உள்ளிட்டவற்றை எடுத்து செல்ல வேண்டிய நிலை மாறி தற்போது ஒரே ஒரு லேப்டாப் இருந்தால் போதும் என்ற நிலை உருவாகிவிட்டது.

லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா

லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா

இதனை கருத்தில் கொண்டு லெனோவா நிறுவனம் அவ்வப்போது புதிய மாடல்களில் லேப்டாப்புகளை அறிமுகம் செய்து வருகிறது. இந்தியாவில் லெனோவா அறிமுகம் செய்த 'திங்க்பேட்' மாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. சமீபத்தில் லெனோவா 'திங்க்பேட் டி490 சீரீஸ், திங்க்பேட் பி43 சீரீஸ் மற்றும் திங்க்பெட் பி1 2வது ஜெனரேஷன், திங்க்பேட் எக்ஸ்1 யோகா ஆகியவை நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்த கட்டுரையில் நாம் லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா குறித்தும், அதன் நிறை, குறைகள் குறித்தும் பார்க்கவுள்ளோம்.

சாம்சங் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்: ஆண்ட்ராய்டு 10 அப்டேட்: பட்டியல் இதோ.!சாம்சங் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்: ஆண்ட்ராய்டு 10 அப்டேட்: பட்டியல் இதோ.!

லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்பின் நிறைகள்

லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்பின் நிறைகள்

திருப்தியான ஹார்ட்வேர் அம்சங்கள்: லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்பில் இண்டெல்கோர் ஐ7 7660யூ விபுரோ பிராஸசர், அதனுடன் இண்டெல் ஐரிஸ் பிளஸ் கிராபிக்ஸ் 640/ இண்டெல் ஹெச்டி கிராபிக்ஸ் 620 ஆகியவை உள்ளன. மேலும் 16ஜிபி LPDDR3 ரேம், 1டிபி ஸ்டோரேஜூடன் கூடிய சிப்செட்டும் உள்ளது. எனவே இந்த லேப்டாப் வலிமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் இந்த மாடலில் dTPM 2.0 என்ற பாதுகாப்பு அம்சமும் உள்ளது. டச் பிங்கர் பிரிண்ட் ஆப்சன், விண்டோஸ் ஹலோ ஆகியவை கூடுதல் அம்சங்கள்

 மல்ட்டி கனெக்டிவிட்டி அம்சங்கள்

மல்ட்டி கனெக்டிவிட்டி அம்சங்கள்

இந்த மாடல் லேப்டாப்பில் மல்ட்டி கனெக்டிவிட்டி அம்சங்கள் இருப்பதால் பயன்படுத்துபவர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது. இதில் மைக்ரோகார்ட் எஸ்டி ரீடர், மைக்ரோ சிம்போர்ட், RJ5 போர்ட், ஹெடிஎம்.ஐ, மூன்று யூஎஸ்பி போர்ட்டுக்கள், ஆகியவை உள்ளன. மேலும் இண்டெல் டூயல் பாண்ட் வயர்லெஸ் ஏசி 8265 WLAN, ஸ்னாப்டிராகன் எக்ஸ்7, TE-A EM7 455 WWAN,மற்றும் வைஃபை அம்சங்கள் உள்ளது.

சன்டைரக்ட் பயனர்களுக்கு குட்நியூஸ்:வரம்பற்ற எப்டிஏ சேனல்கள் ரூ.130.!சன்டைரக்ட் பயனர்களுக்கு குட்நியூஸ்:வரம்பற்ற எப்டிஏ சேனல்கள் ரூ.130.!

பேட்டரி தன்மை

பேட்டரி தன்மை

ஒரு லேப்டாப்பிற்கு மிகவும் முக்கியமானது பேட்டரி திறன். இந்த மாடலில் 15.5 மணி நேரம் இயங்கும் வகையில் சிங்கிள் சார்ஜ் லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா பேட்டரி உள்ளது. மேலும் 1920 x 1080பிக்சல் ஹெச்டி டிஸ்ப்ளேவும் OLED வேரியண்ட் 2560 x 1440 பிக்சல் ரெசலூசனும் உள்ளது. எனவே குறைந்தபட்சம் 10.5 மணி நேரம் பேட்டரி பேக்கப் உள்ளது என்பது இதன் சிறப்பு அம்சம். எனவே நாள் முழுக்க இயங்கும் வகையிலான பேட்டரி பேக்கப் இதில் உள்ளது.

ஹை ரெசலூசன் டிஸ்ப்ளே

ஹை ரெசலூசன் டிஸ்ப்ளே

இந்த மாடல் லேப்டாப்பில் மூன்று வித்தியாசமான டிஸ்ப்ளே உள்ளது. நீங்கள் 14-இன்ஸ் WQHD OLED பேனலுடன் கூடிய 2560 x 1440 பிக்சல் ரெசலூசன் மற்றும் 300 நிட்ஸ், 14-இன்ச் WQHD IPS பேனலுடன் 270 நிட்ஸ் பிரைட்னெஸ் மற்றும் ஸ்டாண்டர்ட் 14-இன்ச் IPS டிஸ்ப்ளேவுடன் FHD ரெசலூசன் 1080 x 1920 பிக்சல் ஆகிய மூன்றில் ஒன்றை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டிஸ்ப்ளே மூலம் திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை காண்பது ஒரு தனி அனுபவம் தான்

லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்பின் குறைகள் என்னென்ன?

அதிக விலை: இந்த மாடல் லேப்டாப்பில் பல அற்புதமான அம்சங்கள் இருந்தாலும் பொதுவாக இந்தியர்களின் பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் இந்த மாடல் இல்லை. இதன் விலை ரூ.208,491 என்பது ஒரு பெரிய குறையாக பார்க்கப்படுகிறது. ரூ. 2 லட்சத்திற்கும் மேல் ஒரு லேப்டாப் வாங்குவது என்பது நடுத்தர வர்க்கத்தினர்களால் வாங்க முடியாத விலை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் எதிர்காலத்தில் இதன் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

பெஸல்ஸ் சரவுண்டிங் டிஸ்ப்ளே:

பெஸல்ஸ் சரவுண்டிங் டிஸ்ப்ளே:

ஒரு ஸ்மார்ட்போன், டேப்ளட், லேப்டாப் ஆகியவை வாங்கும்போது நுகர்வோர்கள் முதலில் கவனிப்பது டிஸ்ப்ளேதான். லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்பில் ஹை ரெசலூசன், OLED/FHD டிஸ்ப்ளே இருப்பதால் மல்டிமீடியா துறையினர்களுக்கு இதுவொரு வரப்பிரசாதம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அனைத்து மூலைகளிலும் குறிப்பாக அடிப்பாகத்தில் உள்ள பெஸல் திருப்திகரமாக இல்லை என்ற குறை உள்ளது.

கீபேட் சாஃப்ட்

கீபேட் சாஃப்ட்

லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்பின் சிறப்பு அம்சங்கள்: இந்த மாடல் லேப்டாப்பில் ஃபோல்டபிள் டிசைன் இருப்பதால் பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும். 360 டிகிரியில் நான்கு விதமான மோட்க்ளில் ஃபோல்ட் செய்து கொள்ளலாம். கீபேட் சாஃப்ட் ஆகவும் பயன்படுத்துவதற்கு இனிமையாகவும் இருக்கும். மேலும் இதன் எடை 1.42 கிலோ என்பதால் எடுத்து செல்வதற்கும் எளிது. ஸ்லிம் சைஸ் மற்றும் குவாலிட்டி செக்கிங் ஆகியவை மற்ற சிறப்பு அம்சங்கள் ஆகும்

மொத்தத்தில் வாங்கலாமா?

மொத்தத்தில் வாங்கலாமா?

லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப் தொழிலதிபர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். அதன் டிசைன், ஹார்ட்வேர், கிராபிக்ஸ், ஆகியவை சிறப்பு அம்சங்களாக இருப்பதால் இதில் உள்ள அனைத்து அம்சங்களையும் சிறப்பாக பயன்படுத்துவோர் நிச்சயம் வாங்கலாம். அதே நேரத்தில் இந்த லேப்டாப்பில் விலை சற்று குறைந்தால் அனைத்து தரப்பினர்களுக்குமான லேப்டாப்பாக இது இருக்கும்

Most Read Articles
Best Mobiles in India

English summary
Lenovo ThinkPad X1 Yoga review in Tamil: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X