Home
Computer

வர்த்தக பயன்பாட்டிற்கான புதிய லெனோவா லேப்டாப்!

By Karthikeyan

வர்த்தக பயன்பாட்டிற்கான புதிய லெனோவா லேப்டாப்!
உறுதியான மற்றும் நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கும் லேப்டாப்புகளைத் தயாரித்து வழங்குவதில் லெனோவா நிறுவனம் முன்னோடியாக விளங்குகிறது. இந்த லெனோவா சமீபத்தில் லெனோவா திங்பேட் டி420எஸ் என்ற புதிய மிகவும் அல்ட்ரா போர்ட்டபுள்ளான லேப்டாப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த புதிய லேப்டாப் மிகவும் உறுதியான அதே நேரத்தில் நீண்ட ஆயுளையும் கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்த லேப்டாப் உயர் ரிசலூசன் மற்றும் ஆன்டி க்ளேர் டபுள்யுஎக்ஸ்ஜிஎ கொண்ட 14.1 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளேயின் பிக்சல் ரிசலூசன் 1600 x 900 ஆகும்.

இதன் கேமராவை எடுத்துக் கொண்டால் 1280 x 720 ரிசலூசன் கொண்ட எச்டி வெப்காமையும் கொண்டுள்ளது. அதே நேரத்தில் இந்த லேப்டாப்பில் மைக்கு்ம உள்ளது. இதன் மெமரியைப் பார்த்தால் அது 2ஜிபி டிடிஆர்3 ரேம் மற்றும் 320ஜிபி எச்டிடி (7200 ஆர்பிஎம்) ஆகும். இதன் வீடியோ மெமரி 64 எம்பி ஆகும். மேலும் இந்த லேப்டாப் 9.5மிமீ தடிமன் கொண்ட சட்டா டிவிடி+/-ஆர்டபுள்யு டிஎல் ஆப்டிக்கல் ட்ரைவையும் கொண்டுள்ளது.

வைபை, இன்டல் 6300 802.11 எ/ஜி/என், யுஎஸ்பி 2.0 மற்றும் 3.0 எர்த் நெட், விஜிஎ, டிஸ்ப்ளே போர்ட் மற்றும் எஸ்டி கார்டு ரீடருடன் கூடிய எக்ஸ்ப்ரஸா ஸ்லாட் போன்ற எல்லாவித இணைப்பு வசதிகளையும் இந்த லேப்டாப் தாங்கி வருகிறது.

மின்திறனைப் பார்த்தால் அதற்காக இந்த திங்பேட் லேப்டாப் 44 டபுள்யுஎச் 6 செல் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் அல்ட்ராபே பேட்டரியையும் கொண்டுள்ளது. இந்த பேட்டரி மொத்தம் 8 மணி நேர இயங்குநேரத்தை வழங்குகிறது.

இந்த திங்பேட் லேப்டாப் ஒரு முழுமையான வர்த்தக மையம் கொண்ட லேப்டாப் ஆகும். ஆனால் இதில் பொழுதுபோக்கு அம்சங்கள் இதில் குறைவு. அதனால் இதில் வீடியோ மற்றும் க்ராபிக்ஸ் அனுபவங்களை மிக அதிகமாகப் பெறமுடியாது. அதுபோல் பேட்டரியும் சற்று குறைபாடாகவே உள்ளது. ஆனால் இதன் ப்ராசஸர் பக்காவாக உள்ளது. அதாவது இந்த ப்ராசஸர் டர்போ பூஸ்ட்டுடன் 2.5 கிலோ ஹெர்ட்ஸ் கடிகார வேகத்தைக் கொண்டிருக்கிறது. இந்த புதிய லேப்டாப்பின் விலை ரூ.70,000 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X