அனைத்து தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய லினோவா லேப்டாப்

Posted By: Staff

அனைத்து தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய லினோவா லேப்டாப்
திங்பேட் டி சீரிஸ் மீண்டும் வருகிறது. அதாவது லெனோவா நிறுவனம் திங்பேட் டி410 மற்றும் டி420 போன்றவற்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது. குறிப்பாக வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு சிறப்பான வீடியோ கான்பரன்சிங் சேவையை வழங்கும். இது இன்டல் கோர் ஐ5-2520எம் 2.5ஜிஹர்ட்ஸ் சேண்டி ப்ரிட்ஜ் ப்ராசஸர் கொண்டிருப்பதால் இதன் வேகம் மிகத் தாறுமாறாக இருக்கும். அதுபோல் இதன் பேட்டரியும் நீண்ட நேரம் தாங்கும் சக்தி கொண்டது.

லெனோவா திங்பேட் டி420 விண்டோஸ் 7 ப்ரபசனல் 64-பி ஆபரேட்டிங் சிஸ்டம் கொண்டிருந்தாலும் வாடிக்கையாளர்கள் விரும்பும் ஓஎஸ்ஸை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதாவது விண்டோஸ் விஸ்டா ஹோம் பேசிக் அல்லது வியாபாரத்திற்கு ஏற்ற விண்டோஸ் 7 ப்ராபசனல் 64-பி அல்லது விண்டோஸ் 7 அல்டிமேட் அல்லது விண்டோஸ் எக்ஸ்பி ப்ரபசனல் போன்ற எந்த ஓஎஸ்ஸையும் தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.

திங்பேட் டி420 மேல் பாகம் 1600X900 நேட்டிவ் ரிசலூசன் கொண்ட 14 இன்ச் திரையைக் கொண்டுள்ளது. இந்த திரை க்ராபிக்ஸை சப்போர்ட் செய்யும் ஆப்டிமஸ் கொண்ட இன்டல் க்ராபிக் 3000 மற்றும் என்விடியா என்விஎஸ் 4200எம் கொண்டிருக்கிறது. இது 500ஜிபி ஹார்ட் டிரைவையும் 4ஜிபி ரேமையும் மற்றும் டிவிடி = ஆர்டபுள்யு ஆப்டிக்கல் ட்ரைவயைும் இது வழங்குகிறது.

இந்த லெனோவா திங்பேட் டி420க்கு சில குறைகளும் உள்ளன. அதாவது இது சிறந்த வீடியோ கான்பரன்சிங் வசிதியைக் கொண்டிருந்தாலும் இதன் வெப்கேமின் ரிசலூசன் மிகக் குறைவாகும். அதுபோல் இதில் யுஎஸ்பி 3.0 போர்ட்களும் இல்லை. அதுபேல் ப்ளூ-ரே வசதியும் இல்லை. இதன் ட்ச்பேடும் மிகச் சிறியதாக இருக்கிறது. அதற்காக நாம் இதை வாங்காமல் இருக்க முடியாது.

இதன் விலை பலருக்கு அதிகமாகத் தெரியலாம். ஏனெனில் இதன் விலை 1264 அமெரிக்க டாலராகும். அதாவது இந்திய மதிப்பில் ரூ.62028 ஆகும். ஆனால் லெனோவா நிறுவனம் இதை தள்ளுபடி விலையில் விற்பதாக விளம்பரப் படுத்துகிறது. அதாவது இதன் உண்மையான விலை 2005 அமெரிக்க டாலர் என்று கூறுகிறது. அதாவது இதன் இந்திய மதிப்பு ரூ.98391 ஆகும். டி420 மாடல்கள் அமெரிக்க டாலர் 800லிருந்து (ரூ.39558) கிடைக்கிறது. எனினும் அதவும் தள்ளுபடி விலை என்று விளம்பரம் செய்யப்படுகிறது.

லெனோவா திங்பேட் டி420 கோர் ஐ3-2350எம் 2.3ஜிஹர்ட்ஸ் ப்ராசஸர் மற்றும் 1366X768 ரிசலூசன் கொண்ட திரை மற்றும் இன்டக்ரேட்டட் க்ராபிக்ஸ் மற்றும் 320ஜிபி ஹார்ட் ட்ரைவுடன் வருகிறது. இதன் அடிப்படை மாடல் சிறிய பேட்டரி கொண்டு வருகிறது. ஆனால் இதில் ப்ளூடூத் கிடையாது அதுபோல் கைரேகை அறியும் தொழில் நுட்பமும் கிடையாது.

இந்த திங்பேடின் விலை அதிகமாக இருந்தாலும் அதனுடைய வேகமான ப்ராசஸர், நீண்ட ஆயுள் கொண்ட பேட்டரி மற்றும் சிறந்த வீடியோ கான்பரன்சிங் வசதி ஆகிவற்றை கொண்ட இந்த லேப்டாப்பை மக்கள் விரும்பி வாங்குவார்கள் என்று நம்பலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot