மார்க்கெட்டை கலக்க வந்த புதிய லெனோவா லேப்டாப்புகள்

Posted By: Staff

மார்க்கெட்டை கலக்க வந்த புதிய லெனோவா லேப்டாப்புகள்
லெனோவாவின் திங்பேடுகள் உலக அளவில் மக்களின் நம்பிக்கையை பெற்றிருக்கின்றன. இதனால், லெனோவா தயாரிப்புகள் மார்க்கெட்டில் வெற்றிகரமான மாடல்களாக திகழ்கின்றன.

லெனோவாவின் திங்பேட்கள் கட்டிங் எட்ஜ் தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டு அதே நேரத்தில் சிறந்த செயல் திறனையும் நீடித்த ஆயுளையும் கொண்டுள்ளன. இப்போது லெனோவா எல்420 மற்றும் எல்520 என்ற புதிய நோட்புக்குகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இவற்றை கார்பரேட் பயன்பாட்டிற்காக நாம் பயன்படுத்தலாம். இந்த டிவைஸ்கள் எல்லா வகையான சோதனைகளுக்கு உட்பட்டுள்ளதால் இவை எல்லா வகையான தட்ப வெப்பத்திலும் பக்காவாக செயல்படும். அதன் தோற்றம் மிக கவர்ச்சியாகவும் அதே நேரத்தில் க்ளாசியாகவும் வடிவமைக்கப் பட்டுள்ளது.

எல்420 மற்றும் எல்520ன் டிஸ்ப்ளே 16.9 இன்ச் எல்இடி ஆகும். மேலும் இது ஆண்டி க்ளேர் வசதி கொண்டது. அதுபோல் இதன் ப்ராசஸர் டர்போ பூஸ்ட்டுடன் கூடிய சக்தி வாய்ந்த இண்டல் கோர் ஐ5 ஆகும். அதனால் இதன் கடிகார வேகம் 3.20ஜிஹெர்ட்ஸ் ஆகும். மேலும் இது ஒரு பாதுகாப்பான டிவைசும் கூட.

எல்420 மற்றும் எல்520 இண்டல் எச்டி க்ராபிக்ஸ் கொண்டிருப்பதால் க்ராபிக்ஸ் வேலைகள் இவற்றில் அபாரமாக இருக்கும். இதன் கீபோட் 6 வரிசை கொண்டு அழகாக கீகளை அடுக்கி வைத்திருக்கிறது. மேலும் இதன் தொடு தளம் மல்டி டச் வசதி கொண்டது.

மேலும் இந்த இரண்டுமே க்ரீன் கம்யூட்டிங் வசதி கொண்டது. இதன் முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால் இது குறைந்த அளவே கார்பன்டை ஆக்ஸைடை வெளியிடுகிறது. மேலும் இவை எனர்ஜி ஸ்டார் சான்றிதழுடன் இபிஇஎடி கோல்ட் தரத்துடன் 100% பேக்லிட் எல்இடி எச்டி டிஸ்ப்ளேயுடன் வருகின்றன.

எல்420 மற்றும் எல்520 2ஜி ப்ராசஸர்களுடன் சிறந்த வேகத்துடன் இருக்கின்றன. மேலும் இவை காமன் திங்பேட் டாக்கிங் மற்றும் பேட்டரிகளை பெற்றுள்ளன. எல்420 மற்றும் எல்520 லேப்டாப்புகள் ரூ.70,500க்கு இந்தியாவில் கிடைக்கின்றன.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot