Home
Computer

திங்பேடில் ஆன்ட்ராய்டு ஐஸ்க்ரீமை அப்டேட் செய்யும் லெனோவா!

By Karthikeyan
 திங்பேடில் ஆன்ட்ராய்டு ஐஸ்க்ரீமை அப்டேட் செய்யும் லெனோவா!

2012ஆம் ஆண்டை ஆன்ட்ராய்டு ஐஸ்க்ரீம் சான்விஜ் ஆண்டு என்று அழைக்கலாம். ஏனெனில் பல டேப்லெட் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களது டேப்லெட்டுகளுக்கு இந்த ஆன்ட்ராய்டு ஐஸ் க்ரீம் இயங்கு தளத்தை அப்டேட் செய்கின்றன. அந்த வரிசையில் லெனோவா நிறுவனம் தனது திங்பேட் டேப்லெட்டுக்கு ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தை அப்டேட் செய்ய இருக்கிறது.

முதலில் இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு 3.2 வெர்சனில் வரும் என்ற வதந்திகள் வந்தன. லெனோவாவின் மேலாளரான மார்க் ஹாப்பின்ஸ் எழுதும் போது லெனோவா நேரடியாகவே ஐஸ் க்ரீம் இயங்கு தளத்தை டிவைஸ் அறிமுகம் செய்து வைக்கும் போதே இணைக்கவிருக்கிறது. அதனால் பழைய பர்ம்வேர் வெர்சனுக்கு டாட்டா சொல்லியாயிற்று. மேலும் இந்த புதிய தயாரிப்பு இன்னும் சில மாதங்களில் வரும் என்று மார்க் எழுதி இருக்கின்றார்.

இந்த லெனோவா திங்பேட் டேப்லெட்டின் முக்கிய அம்சங்ளைப் பார்க்கும் போது இந்த டேப்லெட் வர்த்தகப் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் தருகிறது. இதன் திரை 10.1 இன்ச் அளவு கொண்டு 1280 x 800 பிக்சல் ரிசலூசனை வழங்குகிறது. இந்த டேப்லெட் ஒரு மீடியா சாரந்த டிவைசாக இல்லாவிட்டாலும் இதன் திரையில் மிகத் துல்லியமான வீடியோவைப் பார்க்க முடியும். மேலும் இந்த திரை கோர்னிங் கொரில்லா க்ளாஸ் மூடி கொண்டிருப்பதால் இதில் கீறல் தடுப்பு வசதி உள்ளது.

அடுத்ததாக இந்த திங்பேட் என்விடியா டேக்ரா 2 டூவல் கோர் மொவைல் ப்ராசஸரைக் கொண்டுள்ளது. அதுபோல் இதில் ஒரு பில்ட் இன் அடோப் ப்ளாஷ் ப்ளேயரும் உண்டு. இந்த டேப்லெட்டின் தற்போதுள்ள இயங்கு தளம் ஆன்ட்ராய்டு 3.1 ஆகும். வேண்டும் என்றால் ஒரு டிஜிட்டைசர் பேனாவை வாங்கிக் கொள்ளலாம். அதன் மூலம் டாக்குமென்டுகள் மற்றும் பைல்களை எடிட் செய்ய முடியும்.

இன்னொரு முக்கிய ஆச்சரியமான அம்சம் என்னவென்றால் இந்த டேப்லெட்டில் முழு அளவிலான யுஎஸ்பி போர்ட் உள்ளது. அதனால் துணை அடாப்டர் இல்லாமல் சாதாரண யுஎஸ்பி டிவைசை ப்ளக்இன் செய்ய முடியும். மேலும் இதில் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் மற்றும் மினி எச்டிஎம்ஐ போர்ட் போன்ற வசதிகளும் இந்த டிவைசில் உள்ளன. அதுபோல் வைபை இணைப்பு இந்த டிவைசில் உள்ளது. மேலும் இந்த டேப்லெட்டில் 2ஜிபி க்ளவுட் சேமிப்பு இடம் உள்ளதால் மீடியா பைல்கள் மற்றும் டாக்குமென்டுகளை பரிமாற்றம் செய்வது மிக எளிதாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X