Home
Computer

வர்த்தகப் பயன்பாட்டிற்கான புதிய லெனோவா லேப்டாப்!

By Karthikeyan
 வர்த்தகப் பயன்பாட்டிற்கான புதிய லெனோவா லேப்டாப்!

சமீபத்தில் லெனோவா தனது புதிய வர்த்தக லேப்டாப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த லேப்டாப் அன்றாட வர்த்தகப் பணிகளைச் செய்வதற்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். இந்த புதிய லேப்டாப்பின் பெயர் லெனோவா திங்பேட் எட்ஜ் இ520 ஆகும். இந்த லேப்டாப் ஏராளமான முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

சேமிப்பு வசதி, ப்ராசஸிங் சக்தி, இணைப்பு போர்ட்டுகள் மற்றும் மல்டி மீடியா என அனைத்து வசதிகளையும் இந்த லேப்டாப் கொண்டுள்ளது. மேலும் இந்த லேப்டாப் மிகத் திறமையாகச் செயல்படும் ஒரு சூப்பர் சாதனம் ஆகும்.

இந்த இ520 லேப்டாப்பின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது 15.6 இன்ச் அளவில் திரையைக் கொண்டிருக்கிறது. அதுபோல் இன்டல் எச்டி 3000 க்ராபிக்சுடன் கூடிய 2.30 ஜிஹெர்ட்ஸ் இன்டல் கோர் ஐ3-2350எம் டூவல் கோர் ப்ராசஸரைக் கொண்டுள்ளது. எனவே, இதன் செயல் திறன் அபாரமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

அதுபோல் இதன் ரேமைப் பார்த்தால் இது 320 ஜிபி 7200 ஆர்பிஎம் எச்டிடியுடன் கூடிய 4ஜிபி டிடிஆர்3 ரேமைக் கொண்டுள்ளது. இதுவும் ஒரு சிறப்பான அம்சமாகும். அடுத்ததாக இதன் எல்சிடி டிஸ்ப்ளே கண்களை உறுத்தாத அளவிற்கு சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் கீபோர்டு மற்றும் தொடுதளம் ஆகிய அனைத்தும் இந்த லேப்டாப்பில் பக்காவாக உள்ளன. இதன் பக்கவாட்டில் 4 யுஎஸ்பி போர்ட்டுகள் உள்ளன. அவற்றில் ஒன்று இசட்டா கோம்போ போர்ட் ஆகும்.

இந்த திங்பேட் லேப்டாப்பின் மற்ற அம்சங்களைப் பார்க்கும் போது இந்த லேப்டாப் எச்டிஎம்ஐ அவுட்புட் கொண்டுள்ளதால் இந்த லேப்டாப்பை டிவியில் இணைத்து பெரிய திரையில் படங்களைப் பார்க்கலாம். மேலும் இந்த திங்பேட் விஜிஎ அவுட்புட், டூவல் லேயர் டிவிடி/சிடி ரீடர் மற்றும் ரைட்டர், 7 இன் 1 கார்ட் ரீடர், எக்ஸ்ப்ரஸ் கார்டு/34 ஸ்லாட், வைபை 802.11பி/ஜி/என், ப்ளூடூத் மற்றும் 10/100/1000 எம்பிபிஎஸ் ஜிகாபிட் எர்த்நெட் போன்ற வசதிகளை இந்த லேப்டாப் வழங்குகிறது.

மேலும் இந்த லேப்டாப் 6 செல் லித்தியம் ஐயன் பேட்டரியைக் கொண்டிருக்கிறது. அதோடு இந்த லேப்டாப் விண்டோஸ் 7 ப்ரபசனல் 64-பி இயங்கு தளத்தில் இயங்குகிறது. அதில் விண்டோஸ் எக்ஸ்பி மோடும் உள்ளது.

இந்த இ520 லேப்டாப்பின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் குறைந்த விலையில் வந்தால் இந்த லேப்டாப் விற்பனையில் சாதனை படைக்கும் என்பதில் ஐயமில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X