Home
Computer

லெனோவா வழங்கும் 2 புதிய லேப்டாப்புகள்

By Karthikeyan
 லெனோவா வழங்கும் 2 புதிய லேப்டாப்புகள்

சூப்பரான லேப்டாப்புகளைக் களமிறக்கும் லெனோவா நிறுவனம் இப்போது இரண்டு புதிய லேப்டாப்புகளைக் களமிறக்குகிறது. இந்த லேப்டாப்புகளுக்கு திங்க்பேட் எட்ஜ் இ430 மற்றும் திங்க்பேட் எட்ஜ் இ530 ஆகிய பெயர்கள் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு லேப்டாப்புகளும் ஏறக்குறைய ஒரே அளவிலான தொழில் நுட்பங்களைக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக 2 ஆடியோ ஸ்பீக்கர்கள், 2 ரேம் ஸ்லாட்டுகள், 3.5 எம்எம் மைக், ஹெட்போன் துளை, 6 செல் லித்தியம் ஐயன் பேட்டரி, 320ஜிபி ட்ரைவ், எச்டிடி 7200 ரேம், 4ஜிபி ரேம், பயோ மெட்ரிக் ஸ்கேனர், மல்டி கார்டு ரீடர், இன்டல் சிப்செட், சிக்லெட் கீபோர்டு, 5ஜிபி இலவச லெனோவா க்ளவுட் சேமிப்பு, டிடிஆர்3 ரேம், டிவிடி பர்னர், எச்டிஎம்ஐ போர்ட், இன்ட்ல் எச்டி க்ராபிக்ஸ் 3000 ஜிபியு, இன்டல் சான்டி பிரிட்ஸ் ஐ3- 3250எம் டூவல் கோர் ப்ராசஸர், எல்இடி பேக்லைட், எல்சிடி திரை, ப்ளூடூத், ட்ராக்பேட், ஆன்டிக்ளேர் டிஸ்ப்ளே, விஜிஎ போர்ட், வைபை, டோல்பி ஆடியோ மற்றும் விண்டோஸ் 7 ப்ரபசனல் 64பிட் இயங்கு தளம் போன்ற தொழில் நுட்பங்களை இந்த இரண்டு லேப்டாப்புகளுமே கொண்டிருக்கின்றன.

வித்தியாசம் என்னவென்றால் அவற்றின் டிஸ்ப்ளேயின் பரப்பு ஆகும். அதாவது இ430 லேப்டாப் 4.7 பவுண்டு எடையுடன் 13.35 x 9.21 x 1.13 இன்ச் பரப்பைக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் இ530 லேப்டாப் 5.4 பவுண்டு எடையுடன் 14.84 x 9.65 x 1.12 இன்ச் பரப்பைக் கொண்டிருக்கிறது.

இந்த இரண்டு லேப்டாப்புகளுமே எம்எஸ் ஆபிஸ் ஸ்டார்டர் 2010 மற்றும் நோர்ட்டன் ஆன்டி வைரஸ் 2012 ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. மேலும் இவற்றில் அல்ட்ராநேவ் மற்றும் கைரேகை ரீடரும் உள்ளன. மேலும் தொடுதளம் மல்டி டச் வசதி கொண்டது. இந்த இரண்டு லேப்டாப்புகளுமே வர்த்தக பயன்பாட்டிற்காக வருகிறது.

இந்த இரண்டு லேப்டாப்புகளுமே அமெரிக்க மற்றும் ஆசிய நுகர்வோருக்காக ரூ.30000லிருந்து விற்பனையாக இருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X