Home
Computer

வேகத்தில் பின்னும் புதிய லெனோவா கம்ப்யூட்டர்!

By Karthikeyan
வேகத்தில் பின்னும் புதிய லெனோவா கம்ப்யூட்டர்!

லெனோவா ஒரு புதிய சிறிய மேசைக் கணினியைக் களமிறக்க இருக்கிறது. இந்த கணினிக்கு திங்க்சென்டர் எம்92பி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இந்த மேசைக் கணினியின் சிறப்பு என்னவென்றால் இந்த கணினி ஐவி பிரிட்ஜ் ப்ராசஸர்களைக் கொண்டிருக்கிறது. அதனால் இந்த கணினி மிக உறுதியாக இருக்கும். அதே நேரத்தில் இந்த வேகம் மிகத் தாறுமாறாக இருக்கும்.

மேலும் இது முழுக்க முழுக்க ஒரு வர்த்தக கணினியாகும். இந்த கணினி டைனி என்றும் செல்லமாக அழைக்கப்படுகிறது.

இந்த லெனோவா மேசைக் கணினி இன்டல் கோர் சிப் கொண்டிருப்பதால் இதன் உறுதிக்கு உத்திரவாதம் வழங்க முடியும். மேலும் இந்த கணினி விப்ரோ வசதி கொண்டிருப்பதால் இது ஐடி கண்ட்ரோல் வசதிகளையும் வழங்குகிறது.

இந்த கணினியில் ஸ்பின்னிங் அல்லது சாலிட் ஸ்டேட் ஹார்ட் ட்ரைவ்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கணினி வைபை மற்றும் க்ராபிக்ஸ் வசதி ஆகியவை கொண்டு வருவதால் இதில் க்ராபிக்ஸ் வேலைகளையும் மிக அருமையாக செய்ய முடியும்.

இந்த லெனோவா கணினி டிஸ்ப்ளேபோர் டோங்குள்களையும் கொண்டு வருகிறது. அதனால் விருப்பமான டிஸ்பளேயை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம். இந்த சிறிய கணினி வோல்பி மற்றும் வீடியோ உரையாடலையும் சப்போர்ட் செய்கிறது. இந்த சிறிய மேசைக் கணினி மற்ற பெரிய மேசைக் கணினிகளைவிட மிக உறுதியாக இயங்கக் கூடியது. மேலும் இதன் பூட்டிங் மிக விரைவாக இருக்கும்.

இந்த திங்க்சென்டர் கணினி வரும் சூன் மாதத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. இதன் விலை ரூ.40000 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X