எண்ணற்ற வசதிகளுடன் புதிய லெனோவா வர்த்தகக் கணினி!

Posted By: Staff
எண்ணற்ற வசதிகளுடன் புதிய லெனோவா வர்த்தகக் கணினி!
லெனோவா கணினி வர்த்தகத்தில் ஒரு முக்கிய தடம் பதித்த நிறுவனம் ஆகும். லெனோவாவின் கணினிகள் எப்போதுமே உயர்ந்த தரத்தில் இருக்கும். அதுவும் குறிப்பாக அந்நிறுவனம் களமிறக்கவிருக்கும் லெனோவா திங்க்சென்டர் எம்71இ டவர் பிசி வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு வலது கரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த புதிய கணினி வர்த்தகப் பயன்பாட்டிற்காகவே சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக இந்த கணினியின் வேகம் மிகத் தாறுமாறாக இருக்கும். அதே நேரத்தில் இந்த கணினி ஏராளமான இணைப்பு வசதிகளையும் கொண்டிருக்கிறது.

இந்த திங்க்சென்டர் கணினியின் சிறப்புகளைப் பார்த்தால் இது முதலில் க்வாட் கோர் இன்ட்ல் 3.3 ஜிஹெர்ட்ஸ் கோர்-ஐ5 2500 ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. அதுபோல் இது டிடிஆர்3 4ஜிபி எஸ்டி ரேமையும் கொண்டிருக்கிறது. க்ராபிக்ஸ் வேலைகளுக்காக 512 எம்பி மெமரி கொண்ட எஎம்டி ரேடியோன் எச்டி 5450 க்ராபிக்ஸ் ப்ராசஸங் யூனிட்டைக் கொண்டிருக்கிறது. மேலும் இது 500 ஜிபி எஸ்எடிஎ ஹார்ட் டிஸ்க் ட்ரைவயும் கொண்டுள்ளது. அதோடு இதில் டிவிட் பர்னரும் உண்டு.

இதன் இணைப்பு வசதிகள் ஏராளமாக உள்ளன. அதாவது 4 யுஎஸ்பி 2.0 போர்ட்டுகளையும், ஜிகாபிட் எர்த்நெட் போர்ட், டிவிஐ போர்ட், டிஸ்ப்ளே போர்ட், அனலாக் ஆடியோ போர்ட்டுகள் மற்றும் எஸ்டி கார்டு ரீடர் என அத்தனை இணைப்பு வசதிகளையும் இந்த கணினி கொண்டு வருகிறது.

இந்த திங்க்சென்டர் கணினி மிகவும் உறுதியான இயந்திரமாகும். இதை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருப்பதாற்காகவே 3 இன்பில்ட் ஃபேன்கள் பொருத்தப்பட்டுள்ளன. 3 ஃபேன்களும் குறைந்த சப்தத்தை வெளியிடுகின்றன.

இந்த கணினி இன்டல் எச்டி 3000 க்ராபிக்ஸ் ப்ராசஸிங் யூனிட் கொண்டிருந்தாலும் டிஸ்ப்ளே போர்ட் தேவை என்றால் எஎம்டி ரேடியோன் எச்டி 5450 எக்ஸ்டர்னல் ஜிபியுவை நிறுவ வேண்டும். ஆனால் இந்த எஎம்டி ரேடியோன் க்ராபிக்ஸ் அக்சிலரேட்டிங் யூனிட் அதிக வேகமாக இருக்காது. ஆனால் வீடியோ மற்றும் படங்கள் மிக அமர்க்களமாக இருக்கும்.

மொத்தத்தில் இந்த புதிய திங்க்சென்டர் கணினி உயர்தர செயல்திறன் கொண்டது. மேலும் இது எண்ணற்ற இணைப்பு வசதிகளைக் கொண்டு வருவதால் இது பல வேலைகளைச் செய்யும் தன்மையைக் கொண்டது. மேலும் இது வர்த்தகத்திற்கான கணினி என்று கூறலாம். இந்த கணினியின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot