இரண்டு டிஸ்பிளேக்களுடன் லெனோவா திங்க் பிளஸ் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!
லெனோவா நிறுவனம் தனது புதிய லெனோவா திங்க் பிளஸ எறுனும் லேப்டாப் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த சாதனம் சற்று உயர்வான விலையில் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக லெனோவா.காம் மற்றும் அமேசான் தளங்களில் இந்த புதிய லேப்டாப் மாடல் கிடைக்கும்.

லெனோவா திங்க் பிளஸ் லேப்டாப் ஆனது 13.3-இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1920 x 1080பிக்சல்கள்தீர்மானம் 100 சதவீதம் எஸ்ஆர்ஜிபி வண்ண வரம்பு மற்றும் 300nits பிரைட்நஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்தஅட்டகாசமான லேப்டாப் மாடல்.

லெனோவா திங்க் பிளஸ் லேப்டாப் மாடல் இன்டெல் யுஎச்.டி கிராபிக்ஸ் உடன் 10-வது ஜெனரல் இன்டெல் கோர் ஐ7 செயலி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் 16GB of DDR4 ரேம் ஆதரவு கொண்டுள்ளது எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த லேப்டாப் மாடலின் முன்புறம் ஒரு புதுமையான 10.8-இன்ச் இ-இன்க் டிஸ்பிளே பொறுத்தப்பட்டுள்ளது, எனவே பயனர்கள் இதில் பயனர்கள் ஒருங்கிணைந்த லெனோவா துல்லிய பேனாவுடன் விளக்கப்படங்கள் மற்றும் வரைபடங்களை உருவாக்கலாம் மற்றும் மூடி மூடப்படும்போது அத்தியாவசிய அறிவிப்புகளைப் பெறலாம்.

குறிப்பாக லெனோவா திங்க் பிளஸ் இ-இன்க் டிஸ்பிளே ஆனது கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது, மேலும் இது மேம்பட்ட கீறல் எதிர்ப்பை வழங்குகிறது, பின்பு கீறல் தெரிவுநிலையைக் குறைக்கிறது. குறிப்பாக இந்த திங்க்புக் பிளஸ் 32 ஜிபி இன்டெல் ஆப்டேன் மெமரி எச் 10 உடன் 512 ஜிபி எஸ்.எஸ்.டி. சேமிப்பு வசதியைக் கொண்டுள்ளது.

லெனோவா திங்க் பிளஸ் ஆடியோவைப் பொறுத்தவரை, டால்பி ஆடியோ ஆதரவுடன் ஹார்மன் கார்டன் ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளன.அதே போல் அலெக்சா
வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது. மேலும் இது விண்டோஸ் 10 ப்ரோ இயங்குதளம் மற்றும் கைரேகை ஸ்கேனர்
ஆதரவுடனும் வெளிவந்துள்ளது.

இந்த புதிய லேப்டாப் மாடல் 10 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்கும் திறனை கொண்டுள்ளது, மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், இரண்டு யூ.எஸ்.பி 3.0 போர்ட்கள், ஒரு எச்.டி.எம்.ஐ 1.4 பி போர்ட்,ஆடியோ ஜாக், வைஃபை 802.11, புளூடூத் 5.0 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த லேப்டாப் மாடல்.
குறிப்பாக லெனோவா திங்க் பிளஸ் மாடலை ரூ.1,12,690-வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications