அடடே..புதுசா இருக்கே: ஒரே லேப்டாப்பில் இரண்டு டிஸ்பிளே: அசத்திய Lenovo.!
லெனோவா நிறுவனம் எப்போதுமே சற்று வித்தியாசமான சாதனங்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் Thinkbook Plus Gen 3 எனும் லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது லெனோவா நிறுவனம் நிறுவனம். குறிப்பாக இந்த லேப்டாப் தனித்துவமான டிஸபிளே வசதியுடன் வெளிவந்துள்ளது.
இரண்டு டிஸ்பிளே
அதாவது லெனோவா திங்க்புக் பிளஸ் ஜென் 3 லேப்டாப் ஆனது 17.3-இன்ச் மெயின் டிஸ்பிளே மற்றும் 8-இன்ச் எச்டி பிளஸ் secondary டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த இரண்டாவது டிஸ்பிளே கீபோர்டு அருகில் வலதுபுறமாக அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் டச் ஸ்க்ரீன் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய லேப்டாப் மாடலின் 17.3-இன்ச் டிஸ்பிளே ஆனது 3072x1440 பிக்சல்ஸ், 3கே ரெசல்யூஷன், 21:10 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,, டால்பி விஷன் உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இதில் உள்ள இரண்டாவது டிஸ்பிளே, அதவாது 8-இன்ச் எச்டி டிஸ்பிளே ஆனது 800x1280 பிக்சல்ஸ், டச் சப்போர்ட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது.
தரமான பிராசஸர்
லெனோவா திங்க்புக் பிளஸ் ஜென் 3 லேப்டாப் ஆனது 12-வது ஜென் இன்டெல் கோர் ஐ7-12700H (14-cores) பிராசஸர் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப். பின்பு இந்த லேப்டாப் மாடலில் இன்டெல் Iris Xe Graphics வசதியுடன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய லெனோவா லேப்டாப் மாடலில் 6GB Soldered LPDDR5 RAM மற்றும் 1TB வரை SSD ஸ்டோரேஜ் ஆப்ஷன் உள்ளது. அதேபோல் இந்த புதிய லேப்டாப் மாடல் ஆனது ஃபுல் எச்டி Infrared Webcam வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் லெனோவா திங்க்புக் பிளஸ் ஜென் 3 லேப்டாப் ஆனது Backlit கீபோர்டு வசதியுடன் வெளிவந்துள்ளது.
டால்பி அட்மாஸ்ஆதரவு கொண்ட டூயல் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த லெனோவா திங்க்புக் பிளஸ் ஜென் 3 லேப்டாப் மாடல். குறிப்பாக இந்த லேப்டாப் மாடலின் எடை 2 கிலோ என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த லேப்டாப் மாடலில் அனைத்து முக்கிய அம்சங்களும் உள்ளன. குறிப்பாக இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது.

பேட்டரி எப்படி?
69Wh பேட்டரி வசதியுடன் இந்த லெனோவா திங்க்புக் பிளஸ் ஜென் 3 லேப்டாப் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த லேப்டாப் 8 மணி நேரம் வீடியோ பிளேபேக் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த லேப்டாப் மாடல் கைரேகை ஸ்கேனர் வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக சிறந்த பாதுகாப்பு அம்சம் இதில் உள்ளது.

என்ன விலை?
எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி டைப்-சி, யுஎஸ்பி டைப்-ஏ போர்ட், தண்டர்போல்ட் 4, 3.5எம்எம் ஹெட்போன் ஜாக், வைஃபை 6இ, ப்ளூடூத் வெர்ஷன் 5.2 உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய லெனோவா திங்க்புக் பிளஸ் ஜென் 3 லேப்டாப் மாடல். குறிப்பாக இந்த புதிய லேப்டாப் மாடலின் விலை ரூ.1,94,900-ஆக உள்ளது. இதை லெனோவா வலைத்தளத்தில் வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications