Home
Computer

லெனோவா வழங்கும் புதிய கம்யூட்டர்கள்!

By Karthikeyan
லெனோவா வழங்கும் புதிய கம்யூட்டர்கள்!

லெனோவா நிறுவனம் ஒரு புதிய டெஸ்க்டாப் கணினியை விரைவில் களமிறக்க இருக்கிறது. இந்த கணினிக்கு திங்க்ஸ்டேசன் இ31 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த கணினி 2 மாறுபட்ட மாடல்களில் வருகிறது. இந்த இரண்டு கணினிகளும் லெனோவா ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று நம்பலாம்.

இந்த திங்க்ஸ்டேசன் இன்டல் எக்சியோன் இ3-1200 சிபியுவைக் கொண்டிருக்கிறது. ஆனால் இதில் ஐவி பிரிட்ஜ் ப்ராசஸர்களைப் பொருத்தும் வசதியும் உள்ளது. இந்த கணினி 32ஜிபி ரேம், 9 யுஎஸ்பி போர்ட், இன்டல் எச்டி பி4000, எரர் கரக்டிங் கோட் மற்றும் 1600 மெகா ஹெர்ட்ஸ் டிடிஆர்3 மெமரி ஆகிய சூப்பரான அம்சங்கள் கொண்டு வருகிறது.

இந்த கணினி விண்டோஸ் 7 அல்லது 8 அல்லது எக்ஸ்பி போன்ற இயங்கு தளங்களில் இயங்கும் தன்மை கொண்டது. திங்க்ஸ்டேசனின் உயர்தர மாடல் 3 எச்டிடிக்கள் அல்லது 9டிபி ஹார்ட் ட்ரைவ் சேமிப்பைக் கொண்டுள்ளது. ஆனால் இதன் சாதாரண மாடல் 2 எச்டிடிக்கள் மற்றும் 6டிபி ஹார்ட் ட்ரைவ் சேமிப்பைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த கணினி இயற்கையோடு இணைந்த இயங்கக்கூடியது. குறிப்பாக சிறிய அலுவலகங்களில் இந்த கணினியை சூப்பராகப் பயன்படுத்தலாம்.

இந்த திங்க்ஸ்டேசன் கணினியின் உயர்தர மாடலில் க்ராபிக்ஸ் வசதிக்காக என்விடியா க்வாட்ரோ க்யு4000 உள்ளது. ஆனால் சாதாரண மாடலில் க்வாட்ரோ க்யூ600 மட்டுமே உள்ளது. ஆகவே இந்த இரண்டு மாடல்களிலும் க்ராபிக்ஸ் வேலைகளை அருமையாக செய்ய முடியும்.

இந்த திங்க்ஸ்டேசன் உயர்தர கணினி வரும் சூன் மாதம் 5ல் விற்பனைக்கு வரும் என்றும் சாதாரண் மாடல் சூன் 13ல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றின் விலை ரூ.35000லிருந்து கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X