விரைவில் புதிய டேப்லெட் மற்றும் கம்ப்யூட்டர்கள்: லினோவா

மேலும் திங் சென்டர் எட்ஜ் 71ஸட், திங்பேட் எட்ஜ் ஈ420எஸ் (எஸ்எஸ்டி) மற்றும் லினோவா பி570 போன்ற பத்துக்கும் மேலான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவிருக்கிறது.
விண்டோஸ் 7 மற்றும் எஸ்பீரியன்ஸ் 2.0 கம்பாட்டிபள் மூலம் அப்க்ரேட் செய்யப்பட்ட லினோவா லாப்டாப்புகள் வேகமாக இயங்கக்கூடிய செயல்திறனையும், சிறந்த மேனேஜ்மென்ட் சிஸ்டத்தையும் கொண்டுள்ளது. லினோவாவின் எஸ்எம்பி விற்பனைப் பிரிவின் இயக்குனர் கூறும் போது சிறந்த தரமான கம்ப்யூட்டர்களையும், லாப்டாப்களையும் மலிவான விலைகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டுமென்பதில் கண்ணும் கருத்துமாய் இருப்பதாக கூறினார்.
லினோவா நிறுவனம் தங்களுடைய சிறப்பான வியாபார உத்திகள் மூலம் இந்திய சந்தையில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. மாறிவரும் வியாபார சூழலுக்கேற்ப தங்களது கம்ப்யூட்டர்கள் மற்றும் லாப்டாப்கள் வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தும் வகையில் இருக்கும் என்று லினோவா தெரிவிக்கிறது. அதனால்தான் அவர்கள் திங் சென்டர் எம்70ஸட் கூடிய பிஸிகள் மற்றும் லாப்டாப்புகளை வழங்குவார் என நம்பலாம்.
மேலும் இந்தியாவில் நோட்புக் மற்றும் டெஸ்டாப்புகளுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளன என்று ஜடிசியின் தகவல்கள் கூறகின்றன. இந்தியாவில் லினோவா தமது போட்டி நிறுவனங்களுடன் சரியான வியாபார உறவைக் கொண்டுள்ளது.
லினோவாவின் புதிய டாப்லட் இந்திய டாப்லட் சந்தையில் ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் என நம்பலாம். ஏற்கனவே அது அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டாலும் இந்தியாவிற்கு வரும் போது அது நிறைந்த
லாபத்தைப் பெற்றுத் தரும் என்று லினோவா நம்புகிறது.


Click it and Unblock the Notifications