3 மாடல்களில் வருகிறது லெனோவா லீபேட் ஸ்லேட்!

By Super
|

3 மாடல்களில் வருகிறது லெனோவா லீபேட் ஸ்லேட்!
லெனோவா நிறுவனம் தற்போது தங்களது கவனத்தை ஸ்மார்ட்போன், டேப்லெட் துறையின் பக்கம் முழுவதுமாக கவனம் செலுத்தி வருகின்றது. இப்போது அந்நிறுவனம் ஆன்ட்ராய்டு ஜிஞ்சர்ப்ரீடில் இயங்கும் புதிய ஸ்மார்ட்போன் மற்றும் லிபேட் ஸ்லேட் என்று அழைக்கப்படுகின்ற 3 புதிய சாதனங்களை அறிமுகப்படுத்துகிறது. இந்த ஆன்ட்ராய்டு லிபேட் ஸ்லேட்ஸ் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.

லெனோவாவின் 3 லிபேட் ஸ்லேட்டுகளின் பெயர்கள் முறையே லிபேட் எஸ்2005, லிபேட் எஸ்2007 மற்றும் லிபேட் எஸ்2010 ஆகும். லிபேட் எஸ்2005 பார்ப்பதற்கு பக்காவாக இருக்கிறது. இது 5 இன்ச் எல்டிபிஎஸ் தொடுதிரை கொண்டுள்ளது. இது 178 டிகிரி பரப்பைக் கொண்டுள்ளது.

ஆனால் இந்த லிபேட் எஸ்2005ன் சிறிய குறைபாடு இதன் திரையின் டபிள்யூவிஜிஏ ரிசலூசன் ஆகும். ஆனால் இதன் அதிரடியான செயல்திறன் இந்த குறைபாட்டைக் களைந்துவிடும். ஏனெனில் இது அதிவேகம் கொண்ட ஸ்கார்பியோன் 1.2ஜிஹெர்ட்ஸ் டூவல் கோர் பிராசஸரைக் கொண்டிருக்கிறது.

மேலும் இதன் தடிமன் 9.95மிமீ மட்டுமே. அதோடு இதன் மெமரி 1ஜிபி ஆகும். இதன் முக்கிய 5எம்பி கேமரா 1080பி எச்டி வீடியோவை ரிக்கார்ட் செய்யும். மற்றும் இதன் 1.3எம்பி துணை கேமராவும் மிக பக்காவாக உள்ளது. மேலும் யுஎஸ்பி மற்றும் மைக்ரோ எச்டிஎம்ஐ போர்ட்டுகளும் இதில் உள்ளன. ஆனால் இதன் விலை இன்னும் தெரியவில்லை.

லிபேட் எஸ்2007 மற்றும் லிபேட் எஸ்2010 ஆகிய இந்த 2 ஸ்லேட்டுகள் ஆன்ட்ராய்டு ஹனிகோம்ப் இயங்கு தளத்தைக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த இரண்டும் பரப்பிலும் எடையிலும் சற்று வேறுபடுகின்றன. லிபேட் எஸ்2007 மற்றும் லிபேட் எஸ்2010 ஆகியவை 1.5 ஜிஹெர்ட்ஸ் ஸ்கார்பியோன் டூவல் கோர் பிராசஸரைக் கொண்டிருக்கின்றன.

9.7மிமீ நீளமுள்ள லிபேட் எஸ்2007 ஸ்லேட்டின் எடை 360 கிராம்களாகும். இதன் 3780எம்எஎச் பேட்டரி நீண்ட நேர மின்திறனைக் கொண்டுள்ளது. லிபேட் எஸ்2010 ஸ்லேட்டின் தடிமன் 9.9மிமீ ஆகும். மற்றும் இதன் எடை 670 கிராம்களாகும். இது 7560 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கிறது.

இதன் டிஸ்ப்ளே 10 இன்ச் ஆகும். ஆனால் லிபேட் எஸ்2007ன் டிஸ்ப்ளே 7 இன்ச் ஆகும். ஆனால் இரண்டும் 1280 x 800 பிக்சல் ரிசலூசனைக் கொண்டிருக்கிறது. மேலும் இவற்றின் ரேம் 1ஜிபி மெமரியைக் கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை இரண்டுமே 8எம்பி முதன்மை கேமராவையும் 1.3 முகப்பு கேமராவையும் கொண்டுள்ளன. இவற்றின் விலை இன்னும் அறிவிக்கப்பட வில்லை. ஆனால் இரண்டுமே ஆன்ட்ராய்டு வி4.0 ஐஸ்-க்ரீம் சான்ட்விச் இயங்கு தளத்தைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X